Skip to main content

Vaithisvaran Koil - 2010

வைத்தீஸ்வரன் கோயில்


எங்கள் குடும்பத்தினர் 11 பேரும் (குழந்தைகள் உட்பட) வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போக திட்டமிட்டு, இரண்டு கார்களில் செல்வதாக எண்ணம்.

அஷோக், நீரஜா இருவரும் பெங்களூரிலிருந்து வியாழன் டிசம்பர் 23 (2010) அன்று இரவு சென்னை வந்தனர். மறுநாள் காஞ்சிபுரம் சென்றோம். அடுத்த நாள் (சனிக்கிழமை, 25-12-2010) காலை இரண்டு கூட்டாக வை.கோயில் புறப்பட்டோம். சென்னையிலிருந்து சுமார் 267 கிமீ தூரத்தில் உள்ளது. ECR roadல் பயணித்தோம்.

அருண் காரில், அருண் குடும்பமும், அஷோக்-நீரஜாவும் 6-45க்கு கிளம்பினர். பிச்சாவரம் சென்றுவிட்டு, எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ப்ளான். அர்விந்த், கிருத்திகா, அதிதி, விஜயா, நான் ஆகியோர் காலை 11-15க்கு அர்விந்த் காரில் (LINEA) கிளம்பினோம்.

புதுச்சேரியை பகல் 2 மணிக்கு அடைந்து, அங்கு HOTEL SURGURU (SV Patel Road) வில் சுவையான லஞ்ச் சாப்பிட்டோம் (ரூ 83/-). அங்கிருந்து 2-45க்கு கிளம்பி, சிதம்பரத்தை 4-20 க்கு அடைந்தோம். அங்கு அருண் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நல்ல தரிஸனம் கிடைத்தது. மாலை ஏழு மணிக்கு சிதம்பரத்தை விட்டு கிளம்பி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரவு 8-20 க்கு சென்றோம். சிதம்பரத்திலிருந்து 24 கிமீ தூரத்தி்ல், சீர்காழிக்கு அடுத்து இந்த ஊர் உள்ளது.

பாலாம்பிகா லாட்ஜில் 4 அறைகள் கேட்டிருந்தோம் - அறை எண் 101, 102 (கீழே), மற்றும் 106, 107 (முதல் மாடியில்). வாடகை ரூ 500/- அறை எண் 101-ல் நாங்கள் இருவர், 102-ல் அர்விந்த், 106-ல் அஷோக், 107-ல் அருண் ஆக தங்கினோம். இட்லி, உப்புமாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தோம்; தயாராக இருந்தது - எல்லாரும் சாப்பிட்டு விட்டு தூங்கினோம்.

முன்னதாக சாவித்திரி, ரமேஷ் குடும்பம் திருச்சியிலிருந்து இரவு 8-30க்கு வைத்தீஸ்வரன் கோயிலுக்கு காரில் வந்தனர். அவர்கள் தைலா லாட்ஜில் தங்கினர்.



மறுநாள், ஞாயிற்றுக்கிழமை (26-12-2010) காலை எழுந்து, சுடசுட வெந்நீரில் குளித்து, 8-15 க்கு கோயில் சென்றோம். ஸ்ரீ துரை குருக்களை சந்தித்து, அவர் மூலமாக வைத்தியநாத ஸ்வாமி, தையல்நாயகி அம்பாள், விநாயகர், முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் ஆகிய ஐவருக்கும் தனித்தனியாக அர்ச்சனை செய்தோம். சாவித்திரி இந்த 5 ஸ்வாமிகளுக்கும் அபிஷேகம் செய்வித்தாள் (கட்டணம் ரூ 4000.00)

இங்கு ஸ்வாமியும் அம்பாளும் மருத்துவ சக்தி படைத்தவர்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், மக்கள் கூட்டம் கூட்டமாக் வந்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரஸாதமாக் இங்கு கொடுக்கப்படும் திருச்சாந்து உருண்டை பல மருத்துவ குணங்கள் கொண்டது எனவும், பல நோய்களை குணப்படுத்த வல்லது எனவும் நம்பிக்கை. இந்தக் கோயிலில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும், குளத்தில் வெல்லம் கரைப்பதும் விசேஷம். இது ஒரு நவக்ரக கோயில் (அங்காரகன், செவ்வாய்). ஸ்ரீ ராமரும், ஸ்ரீ லக்ஷ்மணரும் இந்த இடத்தில் ஜடாயு பக்ஷிக்கு இறுதி சடங்குகள் செய்ததாக ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. ஜடாயு குண்டமும் இங்கு உள்ளது. இந்தக் கோயிலுக்கு வந்து ப்ரார்த்திப்பதால் எல்லா நோய்களும் தீர்க்கப் படுகின்றன.

11-45 க்கு எல்லாம் நிறைவு பெற்று அறைக்குத் திரும்பினோம். நிறைய பிரஸாதங்கள் (புளியோதரை, எலுமிச்சம்பழ சாதம், தயிர் சாதம், சக்கரைப் பொங்கல்) கொடுத்திருந்தனர். சாப்பிட்டு விட்டு, அறைகளை காலி பண்ணி, பகல் 12-45 க்கு வைத்தீஸ்வரன் கோயிலை விட்டுப் புறப்பட்டோம்.

சிதம்பரம், கடலூர், புதுச்சேரி வழியாக திண்டிவனம் சேரும்போது மாலை 5 மணி. அங்கு கார்களை நிறுத்தி தோசை சாப்பிட்டோம். 5-45 க்கு கிளம்பி, சுமார் ஒரு மணி நேரம் பயணித்தோம்.

அங்கு ஒரு அரசியல் கட்சியின் “மாநாடு” ஆரம்பிப்பதாக இருந்தது; தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்தும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பலவித வண்டிகளில் வந்த வண்ணம் இருந்தனர். போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டது. நன்றாக மாட்டிக் கொண்டோம். நல்ல வேளையாக குழந்தைகள் மூவரும் (ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம்) எங்கள் காரிலேயே இருந்தனர், அதுவும் கோயில் பிரஸாதம் மீதியும் எங்கள் காரில்தான் இருந்தது. குழந்தைகளுக்கு அதை ஊட்டியவுடன் அவர்கள் எங்கள் மடியிலேயே தூங்கி விட்டனர்.

அர்விந்த் கார் சுமார் 300 மீட்டர் முன்னதாக மாட்டிக் கொண்டிருந்தது; அதற்கும் 500 மீ முன்பாக ரமேஷின் கார் நின்றிருந்தது. அர்விந்த் காரிலிருந்து அஷோக் இறங்கி வந்து, எங்கள் காரை தேடி கண்டு பிடித்து, எங்கள் காரிலிருந்து (தூங்கிக் கொண்டிருந்த) அதிதியை தூக்கிச் சென்றான் !! Thrilling adventure.

கடைசியாக, ஒருவழியாக தாம்பரம் வரும்போது இரவு 11 மணி. சுமார் 4 அல்லது 4 1/2 மணி நேரம் மாட்டிக் கொண்டிருந்தோம். கடவுள் அருளில், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை; ஏதேனும் ஆகியிருந்தால் ... ? நினைக்கவே குலை நடுங்குகிறது.

இரவு 11-15 க்கு வீடு வந்து இட்லி, தோசை, சேவை சாப்பிட்டோம். (க்ருத்திகாவின் அப்பாவிடம் போன் மூலம் விஷயம் சொல்லி, அவர் வாங்கி வைத்திருந்தார்.) களைத்துப் போய் தூங்கினோம்.

இவ்வாறாக, எங்கள் வைத்தீஸ்வரன் கோயில் விஜயம் திருப்தியாக நிறைவேறியது.

ராஜப்பா
30-12-2010
மாலை 6-45 மணி

IMPORTANT PHONE NUMBERS at Vaithisvaran Koil
 DURAI GURUKKAL : 04364 - 279220, 94435 64347

BALAMBIKAI LODGE: 94435 64604 (Mr RAMESH)
THAILA LODGE : 99448 86682 (Mr ANAND)
VISWA LODGE : 94444 32665



Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை