Skip to main content

காஞ்சிபுரம் - Kanchipuram Dec 2010

சென்ற வாரம் 2010, டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நான், விஜயா, அஷோக், நீரஜா ஆகிய நால்வரும் காஞ்சிபுரம் சென்றோம். காலை 6-45க்கு அர்விந்த் காரில் பெஸண்ட்நகரிலிருந்து கிளம்பினோம்.

போரூர், ஸ்ரீபெரும்பூதூர் வழியாக சென்றோம். சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள ”வேடல்” என்ற கிராமத்தில்  முதலில் காரை நிறுத்தி அங்கு சங்கர மடத்தினர் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் சில பகுதிகளைப் -பார்த்தோம். இது சென்னை-பெங்களூர் சாலையில் சுமார் 68-வது கிமீட்டரில் L & T Factory (Blue color building) அடுத்து இருக்கிறது. சிவன் சிலையை ரோட்டிலிருந்தே பார்க்கலாம்.

சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார்.



இதனை 18/10/2010 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணித்தார்.

 இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது போல் அஷ்டதிக்க பாலகர்களின் உருவங்கள் உள்ளன. இதற்கு அருகாமையில் காஞ்சி மஹா பெரியவரின் உருவப்பட கண்காட்சியும் பக்தர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 ம்ணிக்கு பிறகுதான் இது திறக்கப்படுகிறது.

இந்த அழகிய சிலைகளைப் பார்த்து விட்டு, காஞ்சி சென்று ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிஸித்துக் கொண்டோம். வெள்ளிக்கிழமையானதால் அன்று கூட்டமாக இருந்தது. ஆனாலும் காயத்ரி மண்டபத்தினுள் சென்று அம்மனை தரிஸித்தோம்.

பின்னர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சென்றோம். இடையில் ஸ்ரீராமா கஃபேயில் சிற்றுண்டி முடித்துக் கொண்டோம். வரதராஜனுக்குப் பிறகு, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் அதற்கு அடுத்து ஸ்ரீசங்கர மடத்திற்கும் சென்றோம்.

இதற்கு முன்பு 2009 ஜூன் 4-ஆம் தேதியன்றும், 2010 ஜூன் 6-ஆம் தேதியன்றும் காஞ்சிபுரம் சென்று கோயில்களை பார்த்துள்ளோம். விவரமாக எழுதியுள்ளேன்; இங்கு படிக்கவும். 2009-ல் முதல் முறை  2010 ஜூனில் இரண்டாவது முறை.

பகல் மணி 1 ஆகிவிட்டதால், சங்கீதாவில் உணவை முடித்துக் கொண்டு, 2 மணிக்கு காஞ்சியை விட்டுக் கிளம்பி மாலை 4 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.

ராஜப்பா
27-12-2010
காலை 11.00 மணி

Comments

வாவ்! இன்று வேறென்னமோ தேடும்போது இந்தப்பதிவு கண்ணில்பட்டது!
நம்ம காஞ்சிப்பயணத்தில் மேற்படி சிலைகள் கண்ணில் பட்டன.

என்னவாக இருக்குன் என்ற எண்ணக்குழப்பம் இங்கே வந்ததும் தீர்ந்தது.

இந்தப்பதிவு பற்றிய லிங்க் நாளை துளசிதளத்தில் வருகிறது.

படங்கள் அருமை! சுட்டுக்கொள்ளவா?

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...