வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு) உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள். சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும். இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து...