Skip to main content

Gruha Pravesam - 06 March 2011 (Arvind)

அர்விந்த் - கிருத்திகாவின் புது வீட்டிற்கான கிருஹப் ப்ரவேஸம் நேற்று, 6 மார்ச் 2011 (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக நடந்தேறியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான முஹூர்த்தம் குறிக்கப்பட்ட பிறகு அர்விந்தும் கிருத்திகாவும் சுறுசுறுப்பாக பணிகளை ஆரம்பித்தனர். பத்திரிகை அச்சடிப்பது முதல், சாஸ்திரிகள் ஏற்பாடு, உணவு ஏற்பாடு, புத்தாடைகள் வாங்குவது, விருந்தினர்கள் அழைப்பு போன்ற வழக்கமான வேலைகளை முடித்து 6-ஆம் தேதிக்கு தயாராகினர்.

4-ஆம் தேதி வெள்ளி காலை அஷோக்கும், நீரஜாவும் பங்களூரிலிருந்து வந்தனர். 5-ஆம் தேதி ஸ்ரீகாந்த் தில்லியிலிருந்து வந்தான். சதீஷும், ஸ்ருதியும் வந்தனர். 4-ஆம் தேதி இரவு முதலே வெளியிலிருந்துதான் சாப்பாடு.

5-ஆம் தேதி மாலை நீரஜாவும், கிருத்திகாவும் புது வீட்டிற்கு போய் கோலம் போட்டனர். அர்விந்த், கிருத்திகா, மற்றும் விஜயா விழாவிற்கு தேவைப்படும் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்தனர்.

6-ஆம் தேதி - முஹூர்த்த நாள். காலை 4 மணிக்கே எழுந்து குளித்து, 5-30 மணிக்கு புது வீட்டிற்குப் புறப்பட்டோம். அருண் காயத்ரி, குழந்தைகள் 6-15க்கு அங்கு வந்தனர். கிருத்திகாவின் பெற்றோரும் 6-15க்கு வந்து விட்டனர்.எல்லாருக்கும் அர்விந்த புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தான்; எல்லாரும் அணிந்து கொண்டோம்.
அதிதி தன் புது பட்டுப் பாவாடையில்

7 மணிக்கு கோ- பூஜையுடன் கிருஹப் ப்ரவேஸ விழா ஆரம்பித்தது. கிருத்திகா - அர்விந்த இருவரும் பசுவிற்கு பூஜை செய்த பிறகு, எல்லாரும் வலது கால் வைத்து, ஸ்வாமி படங்களை கைகளில் ஏந்தி, புது வீட்டில் நுழைந்தோம்.
கோ பூஜை

கிருஹப் ப்ரவேஸம்

பின்னர் காலைச் சிற்றுண்டி; பொங்கல், வடை. “ஓம் CATERERS". சரோஜா-அத்திம்பேர், சுகவனம், ரமணி, பத்மா மன்னி, இந்திரா, அகிலா, ஆகியோர் சிற்றுண்டியின் போதே வந்து விட்டனர். 30-35 பேர் சிற்றுண்டி சாப்பிட்டோம்.
ஸௌம்யா, அதிதி, ஸ்ருதி

அடுத்து, கிருத்திகா பால் காய்ச்சினாள். புது பாலை குடித்தோம்.
பால் காய்ச்சுதல்

அடுத்து கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் நடைபெற்றன. 10-30 மணிக்கு நிறைவு பெற்றன. நன்றாக நடந்தது.


மேற்குறிப்பிட்ட (14 + 2 + 7) 23 பேரைத் தவிர, ஜெயராமன் குடும்பம், சுதா குடும்பம், விஜயராகவன், மாமி, ரமேஷ் குடும்பம், லலிதா - குமார், ஜனனி, குழந்தை, பிரபாகரன், மாமி என 41 உறவினர்களும்; TSGயின் நண்பர்களும்,  பெஸண்ட்நகர் வீட்டு நணபர்களும், அர்விந்த் - கிருத்திகாவின் அலுவலக நண்பர்களும் என நிறையப் பேர் வந்தனர். கிருத்திகாவின் இசை குரு ஸ்ரீமதி பாம்பே ஜெயஸ்ரீ அவ்ர்கள் வந்து வாழ்த்தினார். 150 பேருக்கு மேல் மதிய விருந்து சாப்பிட்டோம். பின்னர் எல்லாரும் கிளம்பினர்.
உறவினர்களில் ஒரு பகுதி

விழா நடந்த இடத்தை காலி செய்து, சாமான்களை பெஸண்ட்நகர் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு நாங்கள் திரும்பும்போது மணி 2-30.

கிருஹப் பிரவேஸம் மிக மிக நன்றாக நடந்தது. அர்விந்த், கிருத்திகா, விஜயாவின் கடும் உழைப்பு வீண் போகவில்லை. எல்லாம் ஆண்டவன் அருள். குழந்தைகள் ஸ்ரீராம், அதிதி, ஸௌம்யா விழாவில் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர்.

குழந்தைகள்

பத்மா வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. சுந்தரேசன், சாவித்திரி, ரமா, வாசு, உஷா, காயத்ரியின் பெற்றோர், நீரஜாவின் பெற்றோர் ஆகியோர் தொலைபேசி மூலம் விசாரித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாலை ஸ்ரீகாந்த் தில்லி திரும்பினான். ஸ்ருதி காலேஜ் ஹாஸ்டலிற்கும், சதீஷ் தன் இருப்பிடத்திற்கும் திரும்பினர். அஷோக் - நீரஜா இரவு 11 மணி ரயிலில் பங்களூர் புறப்பட்டனர். அர்விந்த் - கிருத்திகா - அதிதி ஆகியோர் புது வீட்டிற்கு சென்று இரவு தூங்கினர்.

இவ்வாறாக, கிருஹப் ப்ரவேஸம் நல்ல முறையில் நடந்தேறியது. அடுத்து, அருண் - காயத்ரியின் புது வீடு கி்ருஹப் ப்ரவேஸம் ஏப்ரல் 17 2011, ஞாயிற்றுக் கிழமை என முஹூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது.

ராஜப்பா
காலை 10:00 மணி
07-03-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...