Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

பாகவதம் 10-வது ஸ்கந்தம்

பாகவதத்தில் 9-வது ஸ்கந்தத்தின் “முன்னுரை”யை இங்கு படிக்கலாம். 9-வது ஸ்கந்தம் ஃபிப்ரவரி 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று (25-03-2011) காலை நிறைவு பெற்றது. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று காலையே 10-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார்.

ஸ்ரீமத் பாகவதம் 9-வது ஸ்கந்தத்தில் ஸூர்ய வம்ஸமும், சந்திர வம்ஸமும் விளக்கிச் சொல்லப்பட்டன. அத்ரியின் வம்ஸத்தில் சந்திரன் => புதன் => புரூரவஸ் => ஸத்யவதி => விஸ்வாமித்திரர் => ஜமதக்னி => பரசுராமர் என நீள்கிறது.

விஸ்வாமித்திரருக்கு யயாதி என்ற பேரன் பிறந்தார். யயாதிக்கு யது, புரு, அநு என 3 பிள்ளைகள். புருவின் வம்ஸத்தில் திருதராஷ்டிரன், பாண்டு பிறந்தனர்; இவர்களுக்கு கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்தனர். இவர்கள் வம்ஸம் மஹாபாரதத்தில் விரிவாக சொல்லப்படுகிறது.

அநுவின் வம்ஸத்தில் அதிரதர் பிறந்தார்; இவர்தான் பின்னால் கர்ணனை வளர்த்த தேரோட்டி.

யயாதியின் இன்னொரு மகனான யதுவிற்கு குகுரர், யஜமானர் என 2 பிள்ளைகள்.

குகுரருக்கு தேவகர், உக்ரஸேனர் பிள்ளைகள். தேவகருக்கு தேவகி என்ற பெண்; உக்ரஸேனருக்கு கம்ஸன் என்ற மகன். (தேவகியும் கம்ஸனும் அண்ணா, தங்கை)

யஜமானருக்கு சூரஸேனனும், சூரஸேனனுக்கு வஸுதேவர் என்ற மகனும், ப்ருதா, ச்ருதச்ரவஸ் என்ற 2 பெண்களும் பிறந்தனர்.

ப்ருதாவை குந்தி தேச ராஜாவிற்கு ஸ்வீகாரம் கொடுத்து விட்டனர். எனவே ப்ருதா, குந்தி என்ற பெயருடன் விளங்கினாள். குந்திக்கு கர்ணனும் பாண்டவர்களும் பிறந்தனர்.

ச்ருதச்ரவஸுக்கு சிசுபாலன் பிறந்தான்.

வஸுதேவர் தேவகியை கல்யாணம் பண்ணிக்கொண்டு கண்ணன் முதலான் 8 குழந்தைகளை பெற்றார். வஸுதேவர் - ரோஹிணிக்கு பலராமன் பிறந்தார். வஸுதேவர் - பௌரவீக்கு (3-வது மனைவி) ஸுபத்ரா பிறந்தாள்.

கண்ணனின் அத்தைகள் குந்திதேவி மற்றும் ச்ருதச்ரவஸ். எனவே அர்ஜுனனும், சிசுபாலனும் கண்ணனின் அத்தை பிள்ளைகள்.

கண்ணனின் தங்கையான ஸுபத்ராவிற்கும் அர்ஜுனனுக்கும் அபிமன்யு பிறந்தான். அபிமன்யுவின் மகன்தான் பரீக்ஷித்.

இவ்வாறாக 9-வது ஸ்கந்தத்தில் வம்ஸங்கள் விளக்கப் பட்டன.

இனி பாகவதத்தின் மிக முக்கிய 10 வது ஸ்கந்தம். இதில் கண்ணனின் பிறப்பும், வளர்ந்ததும் விரிவாக சொல்லப்படுகின்றன. பொறுத்திருந்து கேட்போம் - கண்ணனின் ஆரமுதை பருகுவோம் - அவனது அருளை அடைவோம்.

(பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று 358 வது பகுதி ஒளிபரப்பாகியது.)

ராஜப்பா
10:00 காலை
25-03-2011

Comments

Unknown said…
இந்த உறவு முறைகளில் பல தெரியாத உறவுகளை இன்று தெரிந்து கொண்டேன். வசுதேவரின் சித்தப்பா/பெரியப்பா மகளா தேவகி !!

அதிகாலை(!!) 6:30க்கே இருப்பதால் இதை இன்னும் பார்த்ததில்லை. என்று சீக்கிரம் எழுவேனோ !

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் விஷ்ணு ஸகஸ்ரநாமம் விரிவுரையை தினமும் காரில் கேட்க ஆரம்பித்துள்ளேன். வைஷ்ணவ சம்ப்ரதாயபரமாக சொல்வது ஆரம்பத்தில் கொஞ்சம் வித்யாசமாக (சில நேரம் ஜீரணிக்க முடியாததாகவும்) இருந்தது. இப்போது பழகியதால் ரசிக்க முடிகிறது.
ராஜப்பா said…
வஸுதேவரின் பெரியப்பா மகள் - அதாவது வஸுதேவருக்கு தங்கை - தேவகி; அவளை (தங்கையை) வஸுதேவர் கல்யாணம் பண்ணிக்கொண்டார் என்பது கொஞ்ச்ம் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் படித்துவிட்டு இந்த உறவுமுறை சரிதானா என்பதை எழுதுகிறேன்.

6-30 உனக்கு அதிகாலையா?

வேளுக்குடியின் ஸஹஸ்ரநாம விரிவுரையை (அந்த குறுந்தகட்டை) நான் இன்னும் பிரிக்கக் கூட இல்லை.

ராஜப்பா 02-04-2011 11:15

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011