Skip to main content

Sri Parthasarathy Perumal Koil

திருவல்லிக்கேணியில் குடி கொண்டுள்ள ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாளை நேற்று மாலை விஜயாவும் நானும் சென்று தரிஸித்தோம். முன்னதாக 18-10-2009 அன்றும் (படிக்க), 2008 மே மாசமும் (படிக்க) பெருமாளைத் தரிஸித்துள்ளோம்.

திருவல்லிக்கேணியும், பெரிய மீசை வைத்துள்ள கம்பீரமான அந்த  பார்த்தஸாரதியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நேற்றும் பெருமாளை மிக அருகில் நின்று நீண்ட நேரம் ஆசை தீர, திருப்தியாக தரிஸித்தோம். கூட்டம் இல்லை. வரதராஜப் பெருமாள், ஆண்டாள், யோக நரஸிம்ஹர் ஆகியோரையும் வணங்கி வழிபட்டோம். இந்தக் கோயிலுக்கு போனாலே மனசு நிம்மதியாகிறது; லேசாகிறது.

TP KOIL தெரு வழியாக நடந்தோம். இங்குதான் மஹாகவியின் இல்லம் உள்ளது.

இந்த நினைவு இல்லத்தின் எதிரில், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில் உள்ளது.ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ப்ருந்தாவனம் மந்த்ராலயத்தில் இருப்பது தெரிந்ததே. திருவல்லிக்கேணியில் இந்தக் கோயில் சமீபத்தில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு உள்ளது. பார்க்க வேண்டிய ஒரு கோயில்.

திருவல்லிக்கேணியின் புகழ்பெற்ற தெருக்களையும், காய்கறி, பழக் கடைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு தி-கேணி ஹைரோடில் சென்று ரத்னா கஃபேயில் இட்லி-சாம்பார் சாப்பிட்டோம். (சென்ற வாரம் Times of India Chennai ஓட்டெடுப்பு  நடத்திய இட்லி-வடை-காப்பி ஹோட்டல்களின் தர வரிசையில் ரத்னா கஃபே Rank No #1ல் வந்தது.)

பின்னர், PYCROFTS ROAD-ல் நுழைந்தோம். எவ்வளவு கடைகள்! எத்தனை விதமான் சாமான்கள் !! இந்த தெரு புத்தகங்களுக்கு (சென்னையிலேயே) மிக புகழ் பெற்றது. இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை.

மெரீனாவில் கண்ணகி சிலை பஸ் நிறுத்தத்திலிருந்து 6D பஸ் பிடித்து வீடு திரும்பினோம்.

நேற்று மாலைப் பொழுது இனிமையாக, மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாம் பார்த்தனுக்கு ஸாரதியான அந்த கீதாசாரியனின் அருள்.

ராஜப்பா
11:30
22 ஜூன் 2011




Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011