Skip to main content

Posts

Showing posts from January, 2012

ஸ்ரீ மத் பாகவதம் 11 வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

11-வது ஸ்கந்தம் இன்று (17-11-2011) காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. இந்த 11-ஆம் ஸ்கந்தம் முதல் அத்தியாயத்தில் யது குலம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் சொல்லப்படுகின்றன. குருக்ஷேத்திர யுத்தத்தில் பல பேரை அழித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், இப்போது கர்வமும் திமிரும் படைத்த தன்னுடைய யது குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார். யதுகுல சிறுவர்கள் எப்படி சாம்பா என்னும் சிறுவனை ஒரு பிள்ளைத்தாய்ச்சி பெண் போல நடிக்க வைத்து ரிஷிகளை ஏமாற்ற நினைத்தார்கள், விஸ்வாமித்ரா, அசிதா,கண்வா, துர்வாஸா, ப்ருகு, ஆங்கீரா, காஷ்யபா, வாமதேவா. அத்ரி, வஸிஷ்டா ஆகிய ரிஷிகள் கோபமடைந்து எப்படி ”ஒரு உலக்கையினால் உங்கள் யதுகுலமே நாசமாகும்,” என சபித்தார்கள், எப்படி உலக்கை யதுகுலத்தையும் ஸ்ரீகிருஷ்ணனையும் முடித்தது என்பதை முதல் அத்தியாயம் விளக்குகிறது [11:01] 11:02 நாரதர் வசுதேவருக்கு பாகவத தர்மத்தை விளக்குகிறார். விதேஹ நாட்டு மஹாராஜா நிமி ஒன்பது யோகேந்திரர்களிடம் “பாகவத தர்மத்தை” விளக்கிச் சொல்லுமாறு வேண்ட, ஒவ்வொரு ரிஷியாக தர்மத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். 11:03 இதில் பகவானின் மாயா குறித்து விவரமாக...

மெரீனா கடற்கரை (5) Marina Beach

நேற்று மாலை (22-ஜனவரி) நாங்கள் மெரீனா கடற்கரை சென்றோம். திருவான்மியூரில் பஸ்ஸுக்காக 20-25 நிமிஷங்கள் காக்க வேண்டியிருந்தது. இங்கிருந்து திருவல்லிக்கேணி உழைப்பாளர் சிலை வரை பஸ் டிக்கெட் ரூ 13.00 . அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சமீபத்தில் நெருப்புக்கு இரையான சேப்பாக் அரண்மனை - தற்போது ”எழிலகம் ” - இருளில் மூழ்கியிருந்தது. உழைப்பாளர் சிலை மெரீனா கடற்கரை மிக ரம்மியமாக, அழகாக இருக்கிறது. ஒரு பக்கம் வங்கக்கடல், இன்னொரு பக்கம் 300 வருஷ தொன்மையான வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடங்கள். நடக்க பளபளக்கும் நடைபாதை. எங்கும் ஒளி வெள்ளம். ஓ, மெரீனாவின் அழகே தனிச் சிறப்புதான். அதுவும் நேற்று மெல்லிய குளிர் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. விவேகானந்தர் இல்லத்திற்கு (ICE HOUSE) எதிரில் 15 நிமிஷங்கள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்தோம். பின்னர் காந்திஜி சிலை நோக்கி நடந்தோம். VIVEKANANDAR ILLAM [ICE HOUSE] இன்னும் 4 நாளில் வர இருக்கும் குடியரசு தின விழாவிற்காக காந்திஜி “எண்ணெய் தேய்த்து குளித்து” பளபள என ஜொலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. “செந்தமிழ் நா...

பொங்கல் - 2012

இந்த 2012 ஆம் வருஷம் ஜனவரி 15 ஆம் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வந்தது. காலை 0840 முதல் 0940 வரை பொங்கல் பானை வைக்க சிறந்த நேரம் என்று படித்தேன். முதல் நாளே காய்கறிகளும், கரும்பும் (ஒரு ஜோடி வலை ரூ50), இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்தும், மாவிலையும் வாங்கி விட்டோம். பொங்கலன்று காலை கிருத்திகாவும், விஜயாவும் எல்லாவற்றையும் தயார் பண்ணி, மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றோம். அதிதி புது பாவாடையில் ஜொலித்தாள்; நிறைய வேலைகள் ஓடி ஓடி செய்தாள். 1115க்கு விஜயா கற்பூரம் ஏற்றினாள். சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வடை ஆகியவை நிவேதனம் செய்யப்ப்ட்டன. முதல் நாள் (சனிக்கிழமை) போகியையும் சிறப்பாக கொண்டாடினோம். அன்று பால் போளி, வடை பண்ணினோம். புது, சொந்த வீட்டில் நடக்கும் முதல் பொங்கல் இது. ராஜப்பா 11:30 காலை 16-01-2012

பஞ்ச ரதன கீர்த்தனைகள்.

மார்கழி மாசம் கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி திதியில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் அவதரித்தார். கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் முதல்வரான இவரது ஜன்ம திதியன்று ஒவ்வொரு வருஷமும் கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறு புண்ணிய ஸ்தலத்தில் - இவரது ஸமாதியில் -  நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் கூடி இவர் இயற்றிய “பஞ்ச ரதன கீர்த்தனைகளை” ஓர் குரலில் பக்தியோடு பாடுகிறார்கள். இந்த வருஷம் (2012) 13-ஜனவரி-2012 வெள்ளிக்கிழமை இன்று காலை 8-30 மணிக்கு ஆராதனை துவங்கியது. பொதிகை டீவியில் நேரடி ஒளிபரப்பு. "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என்ற ஸ்ரீராமரைக் குறித்த பாட்டோடு.  ஆராதனை ஆரம்பித்தது. அடுத்து 2-வதாக - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல் ” ஸாதிஞ்செனே ஓ மனஸா - போதிஞ்சின ஸன் மார்க்க வசனமுல பொங்கு ஜேஸிதா பட்டின பட்டு" என்பது மூன்றாவது. இதுவும் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்ளும் பாடல்தான். 4-வது - "கன கன ருசிரா கனக வஸன நின்னு - தின தின முனு மனஸூன சனுவுன நின்னு" என்று ஆரம்பிப்பது. "அனுதினமும் என் மனதில் அன்பு ப...

Vaikunta Ekadasi

ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதிக்க மிகச்சிறந்த நாள் ஏகாதசி. ஒவ்வொரு வருஷத்தி்லும் 25 ஏகாதசிகள் உள்ளன; இவற்றில் மார்கழி மாசம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிதான் "வைகுண்ட ஏகாதசி" என அழைக்கப்படுகிறது. இன்று உபவாஸம் இருந்து நியமத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜிப்பவருக்கு இம்மையில் வைகுண்டத்தைப் போன்ற சுகமும், வாழ்க்கையின் இறுதியில் ஸ்ரீவைகுண்டமும் கிடைக்கும் என்பதால் இது "வைகுண்ட ஏகாதசி" எனப்படுகிறது. நேற்று (05 ஜன 2012) வியாழன் விடிகாலையில் - பல பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீஆதிகேசவ பெருமாள் - மயூரவல்லித் தாயார் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு விடியற்காலம் 4 மணிக்கு சென்று, விஜயா பெருமாளைத் தரிசித்து வந்தாள்; மாதவனை தரிசிப்பதாகத்தான் முதலில் இருந்தது; பின்னர் கேசவன் என ஆயிற்று. நல்ல கூட்டம் எனச் சொன்னாள். எதிர்வீட்டு உமா மாமி, மாமா, TSG மாமா, மாமி ஆகியோரும் சென்றனர். வந்த எல்லா பக்தர்களுக்கும் THE HINDU சார்பில் ஒரு HINDU பேப்பரும் அதனுடன் “வைகு...