Skip to main content

பஞ்ச ரதன கீர்த்தனைகள்.

மார்கழி மாசம் கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி திதியில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் அவதரித்தார். கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் முதல்வரான இவரது ஜன்ம திதியன்று ஒவ்வொரு வருஷமும் கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறு புண்ணிய ஸ்தலத்தில் - இவரது ஸமாதியில் -  நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் கூடி இவர் இயற்றிய “பஞ்ச ரதன கீர்த்தனைகளை” ஓர் குரலில் பக்தியோடு பாடுகிறார்கள்.

இந்த வருஷம் (2012) 13-ஜனவரி-2012 வெள்ளிக்கிழமை இன்று காலை 8-30 மணிக்கு ஆராதனை துவங்கியது. பொதிகை டீவியில் நேரடி ஒளிபரப்பு.

"ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என்ற ஸ்ரீராமரைக் குறித்த பாட்டோடு.  ஆராதனை ஆரம்பித்தது.

அடுத்து 2-வதாக - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல்

ஸாதிஞ்செனே ஓ மனஸா - போதிஞ்சின ஸன் மார்க்க வசனமுல பொங்கு ஜேஸிதா பட்டின பட்டு" என்பது மூன்றாவது. இதுவும் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்ளும் பாடல்தான்.

4-வது - "கன கன ருசிரா கனக வஸன நின்னு - தின தின முனு மனஸூன சனுவுன நின்னு" என்று ஆரம்பிப்பது. "அனுதினமும் என் மனதில் அன்பு பெருகி உன்னைக் காணக்காண ருசி அதிகரிக்கிறது". "தளதளமனு முககன கலிகின ஸீத குலுகுசுனோர கன்னுலனு சூஸே நின்னு" (தளதள வென்று முகப்பொலிவு படைத்த ஸீதை, ஒய்யாரத்துடன் தன் கடைக்கண்ணால் பார்க்கும் உன்னைக் காணக்காண ருசி பெருகிறது.)

உனது திருவுருவத்தையும், நாமத்தின் வைபவத்தையும், பராக்ரமத்தையும், தைரியத்தையும், , சாந்தம் குடிகொண்ட மனத்தையும், பொய்யாமொழியையும் சேவித்து, உன்னிடத்தில் பக்தி பெருகாமற் செய்யும் துர்மதங்களை அழிக்கும் உன் மனதை அறிந்து, அனவரதமும் உன் கல்யாண குணங்களை ஆனந்தமாக ஸங்கீர்த்தனம் செய்யும் "எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு" - இது ஐந்தாவதும் கடைசியுமான கீர்த்தனை.

ஒன்றரை மணி நேரம் ஸ்ரீராமனின் கல்யாண குணங்களை கேட்டு, பக்தியில் நனைந்தோம்.

ராஜப்பா
11:10 காலை
13-01-2012

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...