Skip to main content

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்.

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-லிருந்து 6-45 வரை உபந்யாஸம் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் 18-ஜனவரி-2007 வியாழனன்று பகவத்கீதை சொல்ல துவங்கினார். மொத்தம் 735 உபந்யாஸம் செய்தார்; இறுதியில், 06-நவம்பர்-2009 அன்று கீதை நிறைவு பெற்றது.

09-நவம்பர்-2009 அன்று ஸ்ரீமத் பாகவத புராணம் ஆரம்பித்தார். 12 ஸ்கந்தங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமன் நாராயணனின் 10-அவதாரங்களையும், மற்றும் பல பெருமைகளையும் விளக்குகிறது. முக்கியமாக கண்ணனின் அவதார பெருமைகளை சொல்லுகிறது (10-வது ஸ்கந்தம்).

621 பகுதிகளுக்குப் பிறகு, இன்று (30-03-2012, வெள்ளிக்கிழமை) ஸ்ரீமத் பாகவதமும் நிறைவுற்றது.

735 + 621 = 1326 நாட்கள். 5 வருஷங்களுக்கும் மேலாக (18-01-2007 முதல் 30-03-2012 வரை) இந்த உபன்யாஸங்களை நானும் விஜயாவும் ஒரு நாள் தவறாமல், தினமும் குளித்து, கேட்டு வருகிறோம்.

18 ஜனவ்ரி 2008-ல் நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்:

“சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தோம். அங்கு இரண்டு பெரிய போஸ்டர்களை பார்த்தோம், படித்தோம்.

யாரோ ஒரு "வேளுக்குடி கிருஷ்ணன்" (Sri Velukkudi Krishnan) என்பவர் தினமும் பொதிகை டிவியில் காலை 6-30 முதல், 6-45 வரை பகவத் கீதை (Bhagavad Gita) உபன்யாசம் செய்ய இருக்கிறார் எனப் படித்தோம். அப்போது இந்த ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. காலையில் எழுந்து ஒரு நாள் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டோம்.

2007, ஜனவரி 18, வியாழக்கிழமையும் வந்தது. 6-15க்கு எழுந்துகொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டோம்; 6-30 ஆயிற்று. வேளுக்குடி வந்தார். கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். என்ன ஒரு கம்பீரமான குரல்! தெளிவான நடை. இனிய, எளிய தமிழ் தங்குதடையின்றி நீரோட்டமாக ஓடி வருகிறது. மேற்கோள் காட்ட பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள்.

மகுடி கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அது போன்று நானும், விஜயாவும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் (Velukkudi Krishnan) பரம ரசிகர்களாகி விட்டோம். இதோ, ஒரு வருஷம் ஆகப்போகிறது - பம்பாயில் இருந்த 10-12 நாட்களைத் தவிர, நாங்கள் இருவரும் இவரது கீதை உபன்யாசத்தை ஒரு நாள் கூட விடாமல் தினந்தோறும் காலையில் கேட்டு வந்துள்ளோம்.

முதல் இரண்டு நாட்களுக்கு, குளிக்காமல் இந்த உபன்யாசத்தைக் கேட்டேன். பின்னர் சென்ற ஒரு வருஷமாகவே தினமும் 5-45க்கே எழுந்து, குளிர்நீரில் நீராடி விட்டுத்தான் டிவியின் முன்னால் உட்காருகிறேன். சென்ற இரண்டு மாசங்களாக இது 5-15 என மாறியுள்ளது. 5-30 க்கே குளித்து விடுகிறேன்.

இந்தமாதிரி ஒரு நியமமும், மனக்கட்டுப்பாடும் எனக்கு எப்படி வந்தது? யார் அருளியது? ஸ்ரீ கண்ண பரமாத்மாவும், ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனும் தான் !! அவர்கள் பாதாரவிந்தங்களில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.” [18 ஜனவரி 2008]

பலமுறை எழுதியது போல, விடியற்காலை 4-15 க்கு எழுந்து, குள்ளக் குளிரக் ”குடைந்து” நீராடி, தூயோமாய் வந்து, வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை மனத்தினால் சிந்தித்து, வாயினால் பாடி, மாமாயன், மாதவன், வைகுந்தனென்றென்று நாமம் பலவும் நவில ... எனக்கு ஒரு மன உறுதியை, த்ருதியை எனக்கு அளித்தது, வேளுக்குடியும், அவரது உபன்யாஸமும், ஸ்ரீகிருஷ்ண பகவானும் தான்.

2007 ஜனவரியில் கீதையின் ஒரு அக்ஷரம் கூட தெரியாமல் இருந்த எனக்கு, இன்று சுமார் 150 ஸ்லோகங்களுக்கும் மேலாக மனப்பாடமாகத் தெரியும் என்றால் ... ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்றால் வீசை என்ன விலை என்ற நிலையில் இருந்த நான், ஸஹஸ்ர நாமத்தை தினந்தோறும் பாராயணம் பண்ணி, இன்று முழுதுமாக சொல்ல முடியும் என்றால் -- எல்லாம் அந்த கிருஷ்ண பகவான் அனுக்கிரஹம்தான்.

காயேன வாசா மனஸேந்த்ரியர் வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

ராஜப்பா
30-03-2012
09:30 காலை

Comments

Well said.. Though I was not as regular as you or for that matter as Amma, but listened in bits and pieces whenever it was possible.

A mesmerising narration with a magnetic, crytsal clear voice.

Hope to see him again

Is there anything in the pipeline for him in DD Podhigai or Vijay TV
SA Narayanan said…
Yes, Velukkudi swamigal has already started today (1-4-2012) upanyaasams on Srimad Ramayanam. Read my post dated 1-4-2012.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...