Skip to main content

Posts

Showing posts from September, 2012

ஸ்ரீமத் ராமாயணம் - பால காண்டம்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் சென்ற 31 மார்ச் 2012 முதலாக சொல்லி வருகிறார். (பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30 மணிக்கு). இதைப் பற்றி நான் எழுதியதை இங்கு படிக்கலாம் . ராமாயணம் மொத்தம் 6 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பால காண்டம் என்பது முதல் காண்டம். இதில் 77 ஸர்கங்கள் உள்ளன. அயோத்யா மஹாராஜனான தசரதனுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என 4 பிள்ளைகள் பிறந்தது முதல்,  அந்த நால்வருக்கும் மிதிலையில் திருமணம் முடியும் வரை பால காண்டம் சொல்லுகிறது. ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை ராமர் காத்தது, ராக்ஷசி தாடகையை அழித்தது, பின்னர் அவரும், தம்பி லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் மிதிலா நகரம் நோக்கி சென்றது, நடுவில் கௌஸிக முனிவரின் பத்னியாகிய அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலா ராஜ்யத்தின் அரசனான ஜனக மஹாராஜாவின் சிவதனுஸை முறித்தது, பின்பு ஜனகனின் புத்ரியாகிய ஸீதாவை ராமர் கல்யாணம் செய்து கொண்டது, பரசுராமரின் கர்வத்தை அடக்கியது போன்றவை பால காண்டத்தில் முக்கியமாக விளக்கப்படுகின்றன. ஸீதா கல்யாணத்தை பஜனை ஸம்ப்ரதாயத்தில் ...

விநாயகர் சதுர்த்தி - 2012

விநாயகர் சதுர்த்தி - 2012. இந்த ஆண்டின் (2012) விநாயகர் சதுர்த்தி 19 செப்டம்பர் புதன்கிழமை வந்தது. பாத்ரபதம் மாஸம், சுக்ல சதுர்த்தியன்று இது நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. பூக்கள், பத்ரங்கள், பழங்கள் இவற்றை கிருத்திகாவின் அப்பா கோயம்பேட்டிலிருந்து தருவித்தார். 18-ஆம் தேதியன்று நானும், விஜயாவும் மார்க்கெட் சென்று மீதி பழங்களையும், வெற்றிலை முதலானவைகளையும் வாங்கினோம். 19-ஆம் தேதி காலையில் கிருத்திகா பூஜை அறையையும் மற்ற பூஜா சாமான்களையும் நன்கு அலம்பி சுத்தம் பண்ணினாள். 10.30க்கு அர்விந்த் பிள்ளையார் உருவம் வாங்கி வந்தான். அதிதியும் சென்றாள். TSGக்கும் சேர்த்து இரண்டு வாங்கினான். கிருத்திகா பிள்ளையாருக்கும் அலங்காரம் பண்ணினாள். முதல் நாளே விஜயா மாவு அரைத்து ரெடி பண்ணிக் கொண்டாள். இன்று காலை அவள் மிக மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டாள். தனியாகவே முழுதும் செய்தாள். மூன்று வித கொழுக்கட்டைகள், வடை, பாயஸம், முருங்கை சாம்பார், கோஸ் கறி பண்ணினாள். பூஜை ஆரம்பிக்க மிகவும் லேட்டாகியது. 12 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை செய்தான். முடிக்கும்...

இனிய காலைப் பொழுதுகள்

காலை 4-15க்கு எழுந்து கொள்வது, உடனே குளிப்பது, பின்னர் 4-45க்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் முதல் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாராயணம் செய்வது, 6-30க்கு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாஸம் கேட்பது, 6-45க்கு நியூஸ்பேப்பர் என்று கடந்த 6 வருஷங்களாக வழக்கமாக கொண்டுள்ளேன். சென்ற 25 நாட்களாக நான் சில புது வழக்கங்களை ஆரம்பித்துள்ளேன். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் உபன்யாஸம் 6-45க்கு முடிந்த கையோடு, நான் மேலே மொட்டை மாடிக்குப் போய்விடுகிறேன் (இரண்டு மாடி ஏறி போகிறேன்). அங்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, மீண்டும் வேறுபல பாராயணங்களை சொல்லுகிறேன். சூரியனைப் பார்த்து சூரிய சுடரில் உட்கார்வதால் வைட்டமின் D மற்றும் B12 கிடைக்கின்றன. இது டாக்டரின் ஆலோசனை. 30 நிமிஷம் கழித்து, மொட்டைமாடியிலேயே 30 நிமிஷம் நடக்கிறேன். மணி 7-45 ஆகிவிடும். அடுத்த 15-20 நிமிஷங்களுக்கு அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன். தண்ணீர் ஊற்றுவது பரம ஆனந்தம் தருகிறது. பின்னர் கீழே வருகிறேன். இவ்வாறு காலைப் பொழுது இனிமையாக போகிறது. எல்லாம் ஸ்ரீராமனின் அருள். ராஜப்பா காலை 10:30 மணி 16-9-2012

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் கோயில்

ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள். திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள வேதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த பகவான். நேற்று (9-9-2012) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்தக் கோயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசை திடீரென எனக்குள் எழுந்தது. விஜயாவும் நானும் 4-15க்கு கிளம்பி விட்டோம். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏதோ ஒரு பஸ்ஸை பிடித்து திருவான்மியூர் ரயில் நிலையம் சென்று, ஏறி, இறங்கி 5-15 மணி ரயிலை பிடித்தோம். 5.00 டிக்கெட். [மந்தைவெளி போக பஸ்ஸில் கட்டணம் என்ன தெரியுமா? ரூ 11.00] 5.30 சுமாருக்கு திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி, கண்ணகி சிலை தாண்டி, PYCROFTS ROADல் [பாரதி சாலை] திரும்பி, ஆட்டோ பிடித்து, ஸ்ரீ பார்த்தஸாரதி கோயிலுக்கு சென்றோம். என்ன ஒரு தெய்வீகமான சூழ்நிலை! கோயிலில் நிறையக் கூட்டம் இல்லை. 10 நிமிஷங்கள் க்யூவில் நின்ற பிறகு பெருமாளின் தரிஸனம் கிடைத்தது. நம் அருகில் வந்து நின்று காதில் கீதோபதேசம் சொல்வதாக எண்ணம் வருகிறது. கிட்ட நின்று, கீதாசாரியனை, ”பிதா அஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ” என்று உலகத்திற்கே தந்தை, தாயான அந்த பரமாசாரியனை வணங்க...

Tamil Festivals

தமிழ் பண்டிகைகள். தமிழ் வருஷத்தில் சித்திரை (ஏப் 14 - மே 13) வைகாசி, ஆனி,ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி (அக்டோ 14 - நவ-16), கார்த்திகை, மார்கழி (டிச17- ஜன 14), தை, மாசி, பங்குனி என 12 மாசங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட அதே ஆங்கில தேதிகளில் தான் பிறக்கும். மாறுதல் நிறைய இருக்காது. தெலுங்கு வருஷத்தில் சைத்ரம், வைஷாகம், ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீஜம், கார்த்தீகம், மார்க்கசீரம், புஷ்யம், மாகம், பால்குன என 12 மாசங்கள் உள்ளன. கிட்டத்தட்ட, சித்திரை என்பது சைத்ரம், வைகாசி = வைஷாகம், ஆனி = ஜேஷ்டம், ஆடி = ஆஷாடம், ஆவணி = சிராவணம், புரட்டாசி = பாத்ரபதம், ஐப்பசி = ஆஸ்வீஜம், கார்த்திகை = கார்த்தீகம், மார்கழி = மார்க்கசீரம், தை = புஷ்யம், மாசி = மாகம், ப்ங்குனி = பால்குனி. ஏறத்தாழ, குறிப்பிட்ட மாசத்தில் பௌர்ணமி எந்த நக்ஷத்திரத்தில் வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரே அந்த மாசத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இனி, நாம் கொண்டாடும் முக்கிய விசேஷ நாட்கள் / பண்டிகைகளைப் பார்ப்போம். பல பண்டிகைகளை நாம் தமிழ் மாச முறைப்படியும், இன்னும் பலவற்றை தெலுங்கு மாச முறைப்ப...

Srimad Bhagavad Gita - 17th Chapter

பகவான் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையில் 17-வது அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தில் பகவான் மூன்றுவித சிரத்தைகளைப் பற்றி விவரிக்கிறார். தேகம் எடுத்தவர்களுக்கு இயல்பாக உண்டான சிரத்தையானது சாத்விக மென்றும், இராஜஸமெ ன்றும், தாமஸ மென்றும் மூன்று விதமாயிருக்கிறது. எந்தெந்த ஆகாரங்களினால் இந்த மூன்று வகை சிரத்தை உண்டாகும் என விவரித்தவர், மேலும் கூறுகிறார்: ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனைகள் ராஜஸமானது என்கிறார். வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணையில்லாததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகம் என சொல்லப்படுகிறது. மனிதன் சிரத்தையோடு எதை பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணையாகிறது. தவம் யாது? விளக்குகிறார் பகவான். தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். மெய் (உடல்), மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் கொண்டவன் மனிதன். இம்மூன்று கரணங்க...

Horoscope Developing

நெடுநாட்களாகவே எனக்கு ஜாதகம் கணிக்க வேண்டும், அதுவும் நானே எழுதிய மென்பொருளை(Software) உபயோகித்து கம்ப்யூட்டரில் கணிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று 2001 டிசம்பரில் சென்னை வந்ததும் இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. கிரியில் நிறைய புஸ்தகங்கள் வாங்கி, படித்து என் ஜாதக அறிவை வளர்த்துக் கொண்டேன். இதில் முக்கியமாக Dr BV RAMAN எழுதிய சில புஸ்தகங்களும் அடங்கும். BV ராமனின் 2001-2050 க்கான 50-வருஷ EPHEMERIS புஸ்தகம் மிகவும் முக்கியமானது. Ephemeris என்பது விண்வெளியில் சூரியன் முதலான எல்லா க்ரஹங்களின் தினப்படி நிலையை (டிகிரியில்) அவைகள் சுழலும் விதிப்படி கணித்து புஸ்தகத்தில் போடுவது. 2001 தொடக்கம் 2050 வரை 50 வருஷங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் (50 X 365 நாட்கள்) இந்த டிகிரி (LONGITUDE in Degrees-Minutes) ராமனின் இந்த புஸ்தகத்தில் போடப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஜாதகம் கணிப்பது முடியாது. ஜூலை 2002-ல் இதை வாங்கினேன். இதுவும் கிரியில்தான் வாங்கினேன். பல புஸ்தகங்கள், பாம்பு பஞ்சாங்கம் இவற்றைப் படித்து கொஞ்சம் ஜாதக அறிவு வந்ததும், Microsoft EXCEL உபயோகித்து முதல் ஜாதகத்தை ...

Rangachari Cloth Store, Mylapore

இது என்னுடைய 601-வது blog-post. இன்று 5-9-2012 காலையில் ஒரு விளம்பரம் வந்தது. மயிலாப்பூர் ரங்காச்சாரி கடையில் தள்ளுபடியில் புடைவை விற்பனை. விஜயா உடனே முடிவெடுத்தாள், அங்கு போவதென. மதியம் 4 மணிக்கு கடையில் இருந்தோம்.  அலைமோதும் கூட்டம் என சொல்ல மாட்டேன்; ஆனால் நல்ல கூட்டம். என்னைப் போன்று ஓரிரு ஆண்களைத் தவிர மீதி அத்தனை பேரும் பெண்மணிகள் - 95 % பிராமணர்கள் - 98% 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். வாங்கிவிட்ட பெண்மணிகளின் கையில் சராசரியாக 5 (அ) 6 புடைவைகள் ! அள்ளிக் கொண்டு போனார்கள். சராசரியாக ஒவ்வொருத்தரும் ரூ 3000/- செலவழித்திருப்பார்கள். விஜயா எத்தனை வாங்கினாள் - அது ரகசியம்..... ராஜப்பா 5-9-2012 7 மணி மாலை.

Milestone 600

இன்று 4-9-2012 நான் 600-வது மைல்கல்லை எட்டினேன். BLOG எழுத ஆரம்பித்து சுமார் 8 வருஷங்கள் ஓடிவிட்டன (14 ஜூலை 2004). இதோ 600-வது blogஐ முடித்து விட்டேன். 07 மே 2011-ல் 500-வது போஸ்ட்டை எழுதினேன். ஏறத்தாழ 13 மாசங்களில் 500 லிருந்து 600 ஆக எட்டியுள்ளது. ஆண்டவனுக்கு என் நம்ஸ்காரங்கள். ராஜப்பா 4-9-2012 7-15 PM

புது பழக்கங்கள் New Habits

ஏப்ரல் 10, 2012 செவ்வாயன்று ரோடில் கீழே விழுந்ததையும், Brain Scan பண்ணிக் கொண்டதையும் முன்பு எழுதினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை 5-30 என மாற்றிக் கொண்டதையும் குறிப்பிட்டேன் இப்போது, ஆகஸ்ட் 18 (சனிக்கிழமை) 5-15க்கும், 19ஆம் தேதி 5 மணிக்கும், 20 ஆம் தேதி முதல் மீண்டும் 4-15க்கும் எழுந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். முழு பாராயணங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஏப்ரல் 11 முதல், ஆகஸ்ட் 20 வரை 4 மாசங்களாக நிறுத்தியிருந்தேன். ஆகஸ்ட் 23 (வியாழன்) முதல் காலை 6-50க்கு மொட்டை மாடிக்கு (Terrace) க்குச் சென்று காலை-சூரிய கிரணத்தில் புதிதாக வேறு பல் பாராயணங்களை சொல்கிறேன். 1/2 மணி நேரத்திற்கு பிறகு அங்கே 30 நிமிஷம் நடக்கிறேன். சுமார் 8 மணிக்கு கீழே வருகிறேன். விடியற்காலம் 5-30க்கு பாலிற்காக கீழே ஒரு மாடி இறங்கி ஏறுவதையும், பின்னர் 6-50க்கு Sun-Bathற்கு மொட்டை மாடி (இரண்டு மாடிகள்) ஏறி இறங்குவதையும் LIFT உபயோகிக்காமல், படி ஏறி இறங்குகிறேன். மூன்று நாட்களாக இன்னொரு வேலையும் செய்கிறேன் - மொட்டை மாடியில் உள்ள 10-12 செடித் தொட்டிகளுக்கு தண்ணீர் விடுகிறேன். இது என்னுடைய DREAM Hobby. காலை 4-30...