Skip to main content

Tamil Festivals


தமிழ் பண்டிகைகள்.
தமிழ் வருஷத்தில் சித்திரை (ஏப் 14 - மே 13) வைகாசி, ஆனி,ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி (அக்டோ 14 - நவ-16), கார்த்திகை, மார்கழி (டிச17- ஜன 14), தை, மாசி, பங்குனி என 12 மாசங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட அதே ஆங்கில தேதிகளில் தான் பிறக்கும். மாறுதல் நிறைய இருக்காது.

தெலுங்கு வருஷத்தில் சைத்ரம், வைஷாகம், ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீஜம், கார்த்தீகம், மார்க்கசீரம், புஷ்யம், மாகம், பால்குன என 12 மாசங்கள் உள்ளன.

கிட்டத்தட்ட, சித்திரை என்பது சைத்ரம், வைகாசி = வைஷாகம், ஆனி = ஜேஷ்டம், ஆடி = ஆஷாடம், ஆவணி = சிராவணம், புரட்டாசி = பாத்ரபதம், ஐப்பசி = ஆஸ்வீஜம், கார்த்திகை = கார்த்தீகம், மார்கழி = மார்க்கசீரம், தை = புஷ்யம், மாசி = மாகம், ப்ங்குனி = பால்குனி.

ஏறத்தாழ, குறிப்பிட்ட மாசத்தில் பௌர்ணமி எந்த நக்ஷத்திரத்தில் வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரே அந்த மாசத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இனி, நாம் கொண்டாடும் முக்கிய விசேஷ நாட்கள் / பண்டிகைகளைப் பார்ப்போம். பல பண்டிகைகளை நாம் தமிழ் மாச முறைப்படியும், இன்னும் பலவற்றை தெலுங்கு மாச முறைப்படியும் கொண்டாடுகிறோம்.

தமிழ் சித்திரை மாசத்தில் (ஏப் 14 - மே 13) தமிழ் வருஷப் பிறப்பு கொண்டாடுகிறோம். இது தமிழ் மாச கணக்குப்படி. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நேரமே நமது வருஷப் பிறப்பு. ஆனால், தெலுங்கு வருஷம் பிறப்பதோ இதற்கு சில நாட்களுக்கு முன்பே பங்குனியில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் (ப்ரதமை திதி). ஒவ்வொரு தெலுங்கு மாசமும் இவ்வாறே அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில்தான் பிறக்கும். ஒவ்வொரு தமிழ் மாசமும் சூரியன் ரிஷபம், மிதுனம் .... கும்பம், மீனம் என அடுத்தடுத்த ராசிகளில் ப்ரவேசிக்கும்போது பிறக்கும்.

தெலுங்கு கணக்கு சந்திரனையும், தமிழ் கணக்கு சூரியனையும் அடிப்படியாக கொண்டவை.

வைகாசி மாசத்தில் பண்டிகைகள் விசேஷமாக ஒன்றும் கிடையாது.

ஆனியிலும் இவ்வாறே ஒன்றும் கிடையாது. ஆனியில் ஆனித் திருமஞ்சனம், நடராஜர் அபிஷேகம் உள்ளன. இரண்டுமே தமிழ் கணக்கு முறை.

ஆடியில், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை,ஆடிப்பூரம் போன்றவை தமிழ் கணக்குப்படி வரும். சில சமயம் ஆடியில் வரும் வரலக்ஷ்மி விரதம் தெலுங்கு கணக்குப்படி சிராவண மாசத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும். பல சமடங்களில் சிராவண மாச பௌர்ணமி தமிழ் ஆவணியில் வரும். யஜுர் உபாகர்மம், ருக் உபாகர்மம் இவையும் இவ்வாறே தெலுங்கு கணக்குப்படி கொண்டாடும் பண்டிகைகள். தெலுங்கு சிராவண மாசத்தில் வரும் பௌர்ணமியன்று யஜுர் உபாகர்மம் வரும். தமிழ் கணக்கு பிரகாரம் இது ஆடியிலும் வரும், ஆவணியிலும் வரும். ஆனால் பெயர் என்னவோ ஆவணி அவிட்டம் !!

ஆவணியில் வரலக்ஷ்மி விரதம், யஜுர் உபாகர்மம் ஆகியவை வரும் (ஆடியிலும் வரலாம்) என்பதை சென்ற பாராவிலேயே பார்த்தோம். ஆவணியில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் (க்ருஷ்ண) அஷ்டமி திதியில் கோகுலாஷ்டமி வரும். ஆனால் ஸ்ரீஜயந்தி என்பது தெலுங்கு கணக்குப்படி கொண்டாடப்படுகிறது - இது சிராவண மாசம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தியும் வரும். இதுவும் தெலுங்கு கணக்கே - தெலுங்கு பாத்ரபத மாசத்தில் சுக்ல சதுர்த்தியில் (அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி) இந்த பண்டிகை வரும்.

புரட்டாசியில் (செப் 18 - அக் 17 வரை) மஹாளய அமாவாசை, நவராத்ரி ஆரம்பம், சரஸ்வதி பூஜை, விஜய தசமி போன்றவை வரும். எல்லாமே தெலுங்கு கணக்குப்படிதான். தெலுங்கு ஆஸ்வீஜ மாசம் பிறப்பதற்கு ஒருநாள் முன்பு மஹாளய அமாவாசையும், அடுத்த நாள் ஆஸ்வீஜம் பிறக்கும் அன்று ப்ரதமையில் நவராத்ரி ஆரம்பமும், அடுத்த 9வது நாள் நவமியன்று மஹாநவமியும், ஸரஸ்வதி பூஜையும், தசமியன்று விஜயதசமியும் வரும். எல்லாம் தெலுங்கு கணக்குப்படியே.

ஐப்பசியில் முக்கியமாக நரக சதுர்த்தசியும், தீபாவளியும் வரும். இவையும் தெலுங்கு கணக்குத்தான். கார்த்தீக மாச பிறக்கும் ஒருநாள் முன்னால் (ஆஸ்வீஜ மாச கடைசி நாள் அன்று) அமாவாசையன்று தீபாவளியும், அதற்கும் ஒருநாள் முன்னால் (ஆஸ்வீஜ மாசம்) சதுர்த்தசி திதியன்று நரக சதுர்த்தசியும் கொண்டாடுகிறோம்.

புரட்டாசி மாசத்தில், சர்வாலய தீபமும், திருவண்ணாமலை தீபமும் வருகின்றன. இவை தமிழ் கணக்குப்படி கொண்டாடப்பெறும். புரட்டாசி பரணி நக்ஷத்திரம் அன்று திருவண்ணாமலை தீபமும், பௌர்ணமியன்று சர்வாலய தீபமும் (நம் வீடுகளில் விளக்கேற்றும் நாள்) கொண்டாடுகிறோம்.

மார்கழியில் சதுர்மாச ஆரம்பமும், ஹனுமத் ஜயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் வரும். எல்லாம் தமிழ் கணக்குப்படி. சுக்ல ஏகாதசியன்று வைகுண்ட ஏகாதசி வரும். திருவாதிரை நக்ஷத்ரம் அன்று சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், நம் வீடுகளில் களியும், எழுகறி கூட்டும்!

தையில் பொங்கல் - சுத்த தமிழ் பண்டிகை. தை மாசம் பிறக்கும் அன்று வரும். தை அமாவாசை, ரத சப்தமி ஆகியவை வரும் அந்தந்த திதிகளில். புஷ்ய மாசம் பஞ்சமி திதியன்று திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை.

மாசியில் மஹாசிவராத்ரி, மாசி மகம், ஆகியவை தமிழ் கணக்குப்படியும், ஹோலி பண்டிகை தெலுங்கு கணக்குப்படியும் கொண்டாடுகிறோம். பால்குன பௌர்ணமியன்று ஹோலி வரும்.

பங்குனி மாசத்தில் (மார்ச் 14 - ஏப்ரல் 14) சூரியன் மீன ராசியில் ப்ரவேசிக்கும் நேரத்தில் (அதாவது பங்குனி பிறக்கும்போது) காரடையார் நோன்பை கொண்டாடுகிறோம். அமாவாசைக்கு மறுநாள் ப்ரதமை திதியன்று தெலுங்கு வருஷப் பிறப்பு (சைத்ர மாசம் ஆரம்பம், யுகாதிப் பண்டிகை). ப்ரதமைக்கு அடுத்த 9வது நாள் நவமியன்று ஸ்ரீராம நவமி (தெலுங்கு கணக்கு)

ராஜப்பா
09:30 காலை
08-09-2012

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...