Skip to main content

Posts

Showing posts from December, 2012

Srimath Ramayana AYODYA KANDAM

அயோத்யா காண்டம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ணி வருவது தெரிந்ததே. இன்று (10-12-2012) 179வது உபன்யாஸம் செய்தார்; அயோத்யா காண்டம் - ஸ்ரீ ராமபிரான் காட்டிற்கு போகும் படலம்/ இந்த காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளை விவரிக்கிறது. பின்னர் மந்தரையின் வார்த்தைகளை கேட்டு மயங்கிய கைகேயி அரசன் தஸரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தன் மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருஷங்களுக்கு காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த இரண்டு வரங்கள். முதலில் மறுத்த அரசன் பின்னர் ஒத்துக் கொண்டு மூர்ச்சையாகி விடுகிறான். ராமனை அழைத்து இந்த வரங்களைப் பற்றி தெரிவிக்கிறாள். எந்த வித வாட்டமும் இல்லாமல் ராமன் காடு செல்ல ஏற்றுக் கொண்டு தன் தாய் கௌஸல்யாவிடம், தம்பி லக்ஷ்மணன், மனைவி ஸீதாவென எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு காடு செல்ல தயாராகி விட்டான். இனி விவரமாக, செய்தியைக் கேட்டதும் கௌஸல்யா மூர்ச்சையாகி கீழே விழுகிறாள்; மூர்ச்சை தெளிந்ததும் சோகமாகி விடுகிறாள் (2:20) லக்ஷ்மணன் மிக கோபமாக பேச ஆரம்பிக்கிறான்...

Happy Moments in Life - 02

வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். Part 02 நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி !     குழந்தை அர்ஜுன் குறித்து எழுதினேன்; இது வேறு. செடிகளைப் பற்றியது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் (Terrace) ஒரு சிறிய தோட்டம் போட்டுள்ளோம்; 10-12 தொட்டிகளில் தக்காளிப்பழம், பச்சை மிளகாய், துளஸி, கறிவேப்பிலை, மற்றும் சிலப் பூச்செடிகள் போட்டுள்ளோம்.   முதலில் சில மாஸங்களுக்கு watchman தான் தண்ணீர் விடுவார். ‘கடனே’யென்று அவர் இந்தப் பணியை செய்துவந்தார். பல செடிகள் காய்ந்து பட்டுப் போக ஆரம்பித்தன. “நாமே ஏன் தண்ணீர் விடக்கூடாது?” என எண்ணி, 2012 செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பித்தேன். தினந்தோறும் காலை 6-45க்கு சென்று தண்ணீர் ஊற்றுகிறேன். 20-25 நிமிஷங்கள் ஆகும்.   இன்று மூன்று மாஸங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. செடிகள் என்னமாக வளர்ந்திருக்கின்றன !! நிறைய பூக்களும், காய்களும்.    செப்டம்பர் 22 தேதி வாக்கில், பத்மா அக்கா வீட்டிலிர...

Happy Moments in Life - 01

வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி ! இவ்வாறான என் வாழக்கையில் “சில நிமிஷங்களை” பற்றி எழுத் இருக்கிறேன். முதலில் குழந்தை அர்ஜுன். என் கடைசி மகன் அர்விந்திற்கும், மருமகள் கிருத்திகாவிற்கும் பிறந்துள்ள தங்கக் கட்டி. 2012ம் வருஷம் ஜூன் 2ஆம் தேதி யன்று பிறந்தான். இன்று ஆறு மாஸமாகிறது. குழந்தைக்கு Rocker என்று சொல்லும்படியான ஒரு பரிசு வந்தது. தங்கள் குழந்தை சிறியவனாக இருந்தபோது அவனுக்காக அவன் பெற்றோர் (Mr SAI and Mrs Saveetha) லண்டனில் வாங்கியது. அர்ஜுனுக்கு பரிசாக கொடுத்து விட்டார்கள். குழந்தையை இதில் படுக்க வைத்தால் அவனது ஆட்டத்திற்கு ஏற்றாற் போல இதுவும் ஆடும் (குதிரையில் போகிறாப் போலே இருக்கும்). குழந்தை பார்த்து ரசிப்பதற்கு 3 பொம்மைகள் உள்ளன. அவையும் வேகத்திற்கு ஏற்ப ஆடும். அதில் ஒன்றை (நடுவில் இருக்கும் பொம்மை) பிடித்து இழுத்தால் அது பாட்டு பாடும் (battery inside). அர்ஜுன் முதலில் சும்மாதான் ப...

ஸதாபிஷேகம்

Sathabishekam புதுதில்லியில் தனது மாமா ஸ்ரீதண்டபாணி ஐயர் அவர்களின் ஸதாபிஷேகம் நவம்பர் 30-ஆம் தேதியன்று மிக சிறப்பாக நடந்ததை குறித்து எழுதியபோது, வாசு இவ்வாறு சொல்லியிருந்தான் --- “Sadhabishegam is a rare event and if anyone had an opportunity to attend such function considered to be lucky. Had an opportunity to attend the Sadhabishegam of my uncle Dhandapani on 30th Nov 2012 at Gurgaon.... “ மிகவும் உண்மை. யாருடைய ஸதாபிஷேகம் விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என ஒரு நிமிஷம் யோசித்தேன் --- ஊஹூம், நம் அப்பாவின் ஸதாபிஷேகம் தான் நான் கலந்துகொண்ட ஒரே ஸதாபிஷேகம். (நம் உறவினர்களில், இதுவரை). அது 1979-ல். கடந்த 33 வருஷங்களில் ...? ஊஹூம். சௌ நீரஜாவின் அம்மா வழி தாத்தா ஸ்ரீமான் நாகராஜ ஐயரின் ஸதாபிஷேகம் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் நடந்தது; அதற்கு போயிருந்தேன். வாசு எழுதியது போல, இது ஒரு அற்புதமான, அரிய நிகழ்வு. நமது ப்ராஹ்மண சமூகத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் மொத்தம் 16 ஸம்ஸ்காரங்கள் (ஷோடஸ ஸம்ஸ்காரங்கள்) செய்து கொள்ள வேண்டுமென சாஸ்திரங்கள் / வேதங்கள் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் ஸத...