Skip to main content

Srimath Ramayana AYODYA KANDAM

அயோத்யா காண்டம்.

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ணி வருவது தெரிந்ததே.

இன்று (10-12-2012) 179வது உபன்யாஸம் செய்தார்; அயோத்யா காண்டம் - ஸ்ரீ ராமபிரான் காட்டிற்கு போகும் படலம்/
இந்த காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகளை விவரிக்கிறது. பின்னர் மந்தரையின் வார்த்தைகளை கேட்டு மயங்கிய கைகேயி அரசன் தஸரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தன் மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருஷங்களுக்கு காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த இரண்டு வரங்கள். முதலில் மறுத்த அரசன் பின்னர் ஒத்துக் கொண்டு மூர்ச்சையாகி விடுகிறான்.

ராமனை அழைத்து இந்த வரங்களைப் பற்றி தெரிவிக்கிறாள். எந்த வித வாட்டமும் இல்லாமல் ராமன் காடு செல்ல ஏற்றுக் கொண்டு தன் தாய் கௌஸல்யாவிடம், தம்பி லக்ஷ்மணன், மனைவி ஸீதாவென எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு காடு செல்ல தயாராகி விட்டான். இனி விவரமாக,

செய்தியைக் கேட்டதும் கௌஸல்யா மூர்ச்சையாகி கீழே விழுகிறாள்; மூர்ச்சை தெளிந்ததும் சோகமாகி விடுகிறாள் (2:20) லக்ஷ்மணன் மிக கோபமாக பேச ஆரம்பிக்கிறான்; அவன் கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறான். (2:21 முதல் 2:23) ராமன் அவனைத் தேற்றுகிறான்.

தாயார் கௌஸல்யா தானும் காட்டுக்கு வருவதாக கூறுகிறாள். ஒரு மனைவியின் இருப்பிடம் அவள் கணவன் இருக்கும் இடம்தான் எனவும், கணவனுக்கு பணிவிடை செய்வதே அவளது முதல் தர்மமாகும் எனச் சொல்லி அவள் சம்மதத்தையும் ஸ்ரீராமன் பெறுகிறான் (2:24).

ஸீதையிடம் செல்கிறான் ராமனின் முக வாட்ட்த்தைக் குறித்து ஸீதா வினவுகிறாள். அவளிடம் செய்தியைக் கூறுகிறான். அவளை நாட்டிலேயே இருக்கும்படியும் கூறுகிறான். (2:26).

தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஸீதா அவனைக் கேட்கிறாள். “நீ காட்டுக்குப் போனால், உனக்கு முன்னால் நான் செல்வேன்; அங்கு இருக்கும் கற்களை அப்புறப்படுத்தி முட்களை நீக்கி உனக்கு வழி அமைத்துக் கொடுப்பேன்” என கூறுகிறாள். ”ஒரு மனைவிக்கு கணவன் பாதுகாப்பு தான் முக்கியம்” எனவும், “காடு எனக்கு என் தந்தை வீடு போல சுகம் அளிக்கும்,” எனவும், “நீ இல்லாமல் நான் சொர்க்கத்தில் இடம் கிடைத்தாலும் அங்கு இருக்கமாட்டேன்” எனவும் பேசுகிறாள். (2:27) காட்டில் இருக்கக்கூடிய பலவித கஷ்டங்களைக் குறித்து ராமன் அவளுக்கு விளக்குகிறான். (2:28); இருந்தும் கடைசியில் அவளது வேண்டுகோளை ஏற்று அவளையும் காட்டிற்கு கூட்டிச் செல்ல சம்மதம் தெரிவிக்கிறான் (2:29, 2:30).

இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ல்க்ஷ்மணனும் தானும் காட்டிற்கு வருவேன் என சொல்ல, ல்க்ஷ்மணனையும் அழைத்துச் செல்ல ஒப்புக் கொள்கிறான்; ஸீதையின் திருமணத்தின் போது அவள் தந்தையார் ஜனக மஹாராஜா தான் தேவர்களிடமிருந்து பெற்ற வில்,அம்பு, வாள் போன்றவற்றை ராமனுக்கு அளித்தார்; அவற்றையெல்லாம் எடுத்து வருமாறு லக்ஷ்மணனை அவன் பணிக்கிறான் (2:31)

(அயோத்யா காண்டம் தொடரும் ...மொத்தம் 119 ஸர்கங்கள்)


ராஜப்பா
10-12-2012
12:30 மணி








Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...