Skip to main content

Happy Moments in Life - 01

வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள்.

நமது வாழ்ககை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில சமயம் சந்தோஷமான சில நிமிஷங்கள் வரும். அந்த சில நிமிஷங்களைத் தவற விடாமல், ரசித்தோமானால் என்ன ஒரு அதீதமான மன மகிழ்ச்சி !

இவ்வாறான என் வாழக்கையில் “சில நிமிஷங்களை” பற்றி எழுத் இருக்கிறேன். முதலில் குழந்தை அர்ஜுன்.
என் கடைசி மகன் அர்விந்திற்கும், மருமகள் கிருத்திகாவிற்கும் பிறந்துள்ள தங்கக் கட்டி. 2012ம் வருஷம் ஜூன் 2ஆம் தேதியன்று பிறந்தான். இன்று ஆறு மாஸமாகிறது.

குழந்தைக்கு Rocker என்று சொல்லும்படியான ஒரு பரிசு வந்தது. தங்கள் குழந்தை சிறியவனாக இருந்தபோது அவனுக்காக அவன் பெற்றோர் (Mr SAI and Mrs Saveetha) லண்டனில் வாங்கியது. அர்ஜுனுக்கு பரிசாக கொடுத்து விட்டார்கள்.

குழந்தையை இதில் படுக்க வைத்தால் அவனது ஆட்டத்திற்கு ஏற்றாற் போல இதுவும் ஆடும் (குதிரையில் போகிறாப் போலே இருக்கும்). குழந்தை பார்த்து ரசிப்பதற்கு 3 பொம்மைகள் உள்ளன. அவையும் வேகத்திற்கு ஏற்ப ஆடும். அதில் ஒன்றை (நடுவில் இருக்கும் பொம்மை) பிடித்து இழுத்தால் அது பாட்டு பாடும் (battery inside).
அர்ஜுன் முதலில் சும்மாதான் படுத்துக் கொண்டு இருந்தான். நாளாக ஆக, அவனுக்கு விவரங்கள் புரிய ஆரம்பித்தன. ”தான் ஆடுவதின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ராக்கரும் வேகமாக ஆடுகிறது,” என்பதை அவன் அறிந்து கொண்டான். இப்போதெல்லாம் அவன் என்ன வேகமாக இதில் ஆடுகிறான், தெரியுமா? முகம் முழுதும் மலர்ச்சி, மகிழ்ச்சி.

எந்த பொம்மையை இழுத்தால் அது பாடும் என்பதையும் அவன் கண்டு பிடித்துவிட்டான். எனவே வேக வேகமாக ஆடிக் கொண்டே அவன் இந்த பொமமையை பிடித்து இழுப்பான், அது பாடுவதைக் கேட்க அவனுக்கு இன்னும் உற்சாகம் அதிகரிக்கும். ஒரே ஆட்டம்தான் சிரிப்புதான்.


குழந்தை அர்ஜுன்
இன்று (10-12-2012) காலை 9 மணிக்கு
எடுத்த ஃபோட்டோக்கள்

குழந்தை ஆடுவதை, அது சந்தோஷப்படுவதை பார்க்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கிறது.
வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். ஆண்டவனுக்கு திரும்பத் திரும்ப நம்ஸ்காரங்கள்.
ராஜப்பா
10-12-2012
காலை 10:15 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011