Skip to main content

ஸ்ரீராம் உபநயனம் -- 6-2-2017

ஸ்ரீராம் உபநயனம் - 6-2-2017 திங்கட்கிழமை

எங்கள் மகன் அருண் - காயத்ரியின் புத்திரன் சி. ஸ்ரீராமனுக்கு (பிறந்த தேதி 8-4-2008) உபநயனம் செய்விக்கலாம் என காயத்ரி 2016 நவம்பர் 6-ஆம் தேதியன்று தெரிவித்தாள். முதலில் பல்வேறு எண்ணங்கள் உதித்த போதிலும், இறுதியில் மண்டபத்தில் பண்ணுவது என்று முடிவாகியது.

ஃபிப்ரவரியில் பண்ணுவது என நிச்சயம் பண்ணி, சாஸ்திரிகள் மாமாவை அழைத்து நாள் குறித்துத் தர சொன்னோம். அவர் சொன்ன 4 நாட்களில் ஃபிப்ரவரி 6-ஆம் தேதியை நிச்சயித்தோம். பல மண்டபங்களை பார்க்க ஆரம்பித்தோம். கடைசியில் அருண் அடையாறில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஹாலை புக் செய்தான்.

டிசம்பர் 28 அன்று பத்திரிகை அடித்தோம். பட்டு மன்னி தொடங்கி எல்லாருக்கும் ஃபோன் மூலம் செய்தி தெரிவித்தோம் (டிச 28) 29-ஆம் தேதியன்று உபநயனத்திற்கு தான் வர இருப்பதாகவும் அதற்கான டிக்கெட் வாங்கிவிட்டதாயும் மன்னி உடனே பதில் தெரிவித்தார்.

2017 ஜனவரி 4-ஆம் தேதி பத்திரிகை அடித்தோம். 6-ஆம் தேதி முதல் பத்திரிகைகள் போஸ்ட் செய்ய ஆரம்பித்தோம். 21-ஆம் தேதி சாஸ்திரிகள் மாமா சாமான்கள் லிஸ்ட் கொடுத்தார். ரமா, சத்யமூர்த்தி, சந்தோஷ் குடும்பம், வாசு, ராஜி, ரவி அஷோக், நீரஜா, விபா, நீரஜாவின் அம்மா, விஜயாவின் நண்பர்கள் பிரேமா, தேவசுந்தரி ஆகியோர் வருவதாக தெரிவித்தனர். பட்டு மன்னி ஏற்கனவே வருவதாக சொல்லிவிட்டார்.

2017 ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நிறைய சாமான்கள் வாங்கினோம். 2ஆம் தேதி வாசு, ராஜி சென்னை வந்தனர்; நேராக தாம்பரம் சென்றனர், ஒரு திருமணத்திற்காக. 3-ஆம் தேதி மன்னி, ரமா, அஷோக் ஆகியோர் வந்தனர்.

ஃபிப்ரவரி 4-ஆம் தேதி ஸ்வாமி ஸமாராதனை அருண் வீட்டில் கோலாகலமாக நடந்தது. காலை 4 மணிக்கே நானும், விஜயாவும் எழுந்து கொண்டோம். மன்னி, ரமா, சத்யமூர்த்தி, ராஜி, நாங்கள் முதலில் சென்றோம். ஏற்பாடுகள் செய்தோம்.

வெங்கடாசலம் வாத்யார் 9 மணிக்கு வந்தார். பின்னர் இன்னும் 3 சாஸ்திரிகள் வந்தார்கள். பாலு மாமா, மாமி, அவர்கள் உறவினர்கள் லேட்டாக வந்து கலந்து கொண்டனர். விழா 12 மணி சுமாருக்கு முடிவடைந்தது. சமையல்கார மாமி (வத்ஸலா) நேற்று இரவே வந்து விட்டார்.

சரோஜா அக்கா, மங்களம், லலிதா, குமார், ரவி, சுதா, சந்தர் ஆகியோரும்  கலந்து கொண்டனர். மொத்தம் 42 பேர் சாப்பிட்டோம். பின்னர் அவரவர்கள் நங்கநல்லூர் போன்ற இடங்களுக்கு சென்றனர், நாங்கள் அருண் வீட்டிலேயே 8-45 க்கு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம். அஷோக், நீரஜா அருண் வீட்டில் தங்கினார்கள்.

ஃபிப்ரவரி 5-ஆம் தேதி ஞாயிறு. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் டிஃபன், மதியம் உணவு. சமையல்கார மாமி 7-30 க்கு வந்து பொங்கல் பண்ணினார். குழந்தைகள், அஷோக், நீரஜா, காயத்ரி ஆகியோர் பீச் போனார்கள். 1 மணி சுமாருக்கு எல்லாரும் சாப்பிட்டோம். (மாமிக்கு 1500+200). ரமா ஆகியோர் மயிலாப்பூர் போனார்கள். விபா, அதிதி, சௌம்யா ஆகியோர் அடையாறு போய் மெஹந்தி போட்டுக் கொண்டனர். பட்டு மன்னியும், விஜயாவும் நாராயணா முத்து கடைக்கு சென்று 13,500க்கு முத்து, பவழம் வாங்கினர். இரவு எல்லாரும் இங்கேயே சாப்பிட்டுத் தூங்கினோம்.

ஃபிப்ரவரி 6-ஆம் தேதி, திங்கள் கிழமை - ஸ்ரீராம் உபநயனம். காலை 3-30க்கு எழுந்து கொண்டேன். முதல் பாட்ஜ் ஆக, நான், விஜயா, மன்னி, ரமா ஆகியோர் ஸ்ரீகிருஷ்ணா ஹாலிற்கு புறப்பட்டோம்; வாசு டிரைவ் பண்ணினான். பின்னர் மற்ற எல்லாரும் வந்தனர்,

வெங்கடாசலம் வாத்யார் 7 மணிக்கு வந்து விழாவை ஆரம்பித்தார். 12 சாஸ்திரிகள் வந்தனர். உதக சாந்தி. பின்னர் நாந்தி. யக்ஞோபவீதம் ஆரம்பித்தது. நிறைய பேர் வந்தனர் (145 பேர் சாப்பிட்டனர்.) இந்திரா, அகிலா, லக்ஷ்மி ஸ்ரீதர், அபர்ணா, வஸந்த், வஸந்தின் அம்மா, குழந்தை, சுதன், ராஜேஷ், விஜி, tsg மாமா, மாமி, சுதாவின் மாமனார், மாமியார், சுபா, மகேஷ், லக்ஷ்மி, ஜானகிராமன், ஜி.வி குமார், ஷ்யாமளா (பெங்களூரு), வாசுவின் சம்பந்தி சுந்தரம், மாமி, லலிதாவின் சம்பந்தி பிரபாகரன், மாமி, பிரேமா, தேவசுந்தரி இன்னும் பலர் வந்தனர்.

வைத்தீஸ்வரர் கோயிலிலிருந்து ஒருவர் ஸ்வாமி ப்ரஸாதம் கொண்டு வந்தார். ஸ்ரீராமிற்கு தலையில் பட்டம் கட்டிவிட்டு, ஸ்வாமி ப்ரஸாதங்களை நெற்றியில் இட்டு, அவனை ஆஸிர்வதித்தார். மிகவும் மகிழ்ச்சியாகவும், மனசுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

ஹாலை காலி பண்ணிய பிறகு நாங்கள் 3 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம். இரவு சாப்பாடு அருண் - காயத்ரி வீட்டில்.

மாலை வாசு, ராஜி, ரவி ஆகியோர் டில்லி புறப்பட்டனர். இரவு ரயிலில் அஷோக், நீரஜா, விபா ஆகியோர் கிளம்பினர். ரமா, சத்யமூர்த்தி மறுநாள் (7-ஆம் தேதி) பகல் ரயிலிலும், மன்னி 8 ஆம் தேதி 11-55 ரயிலிலும் புறப்பட்டனர். மன்னியை நானும், விஜயாவும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்று ரயிலேற்றி விட்டோம்.

இப்படியாக, ஸ்ரீராமனின் உபநயனம் வெகு சிறப்பாக நடந்தேறியது. எல்லாம் அவன் அருள்.

ராஜப்பா
9-2-2017








Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை