Skip to main content

திருப்பாதிரிப்புலியூர் கோயில்கள் Amma 100th Birthday, 23Mangalam, Gopi July 2009

இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம்.

வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம்.

அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம்.

சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே சம்மதித்தாள். அவளும், கோபியும் திருவண்ணாமலையிலிருந்து நேராக கடலூர் வருவதாகச் சொன்னாள்.

23 ஜூலை 2009, வியாழக்கிழமை.

சாவித்திரி, விஜயா, நான் ஆகிய மூவரும் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு 8-40க்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். 12-15 க்கு கடலூர் போய் சேர்ந்தோம். சாவித்திரிக்கு மிக நெருங்கிய ராதா அம்மாளின் ரெட்டி சத்திர தெரு வீட்டில் தங்கினோம்; அங்கேயே பகல் உணவு சாப்பிட்டோம். 3 மணி சுமாருக்கு மங்களம், கோபி வந்தனர்.

5 பேரும் மாலை 5-15க்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றோம். ஜயராமனின் வகுப்புத் தோழனான ஸ்ரீ அனந்தன் தான் அங்கு குருக்கள். ஜயராமனை மிகவும் விஜாரித்தார். 6-15க்கு அர்ச்சனை நடந்தது. மிக அழகாக பண்ணி வைத்தார். மிளகு வடை, புளியோதரை, தயிர்சாதம் நைவேத்யம் பண்ணிக் கொடுத்தார்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று அம்மா பேரில் அன்னதானம் செய்வதற்காக ஆஞ்சநேயர் கோயிலில் ரூ. 600.00 கட்டினோம். வாசு 100 ரூபாயும், சாவித்திரி 100 ரூபாயும், நான் 400 ரூபாயும் கொடுத்தோம்.

வீட்டிற்கு திரும்பியவுடன், ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாளுக்கு விசேஷ முத்யாலங்காரம் செய்திருந்தனர். அம்பாளைப் பார்க்கவே பரவசமாக இருந்தது.

பாபுராவ் தெருவில் நாங்கள் இருந்த 17-ஆம் எண் வீட்டிற்கு அருகிலுள்ள சங்கர மடத்திற்கு பால் அபிஷேகத்திற்கு ரூ 30ம், நன்கொடையாக ரூ 601-ம் செலுத்தினோம். (சாவித்திரி 100, நான் 501)

இரவு உணவாக கோயில் பிரஸாதங்களையே சாப்பிட்டுவிட்டு, ராதா அவர்கள் வீட்டில் 2-வது மாடியில் 5 பேரும் தூங்கினோம்.

24 ஜூலை 2009, வெள்ளிக்கிழமை.

காலை 5-30க்கு எழுந்து, குளித்து, பாபுராவ் தெருவிற்கு ஒரு நடை போனோம். வழியில், ஸ்ரீ பலராம சாஸ்திரிகள் மாமா வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்தோம்; எங்கள் அப்பாவின் நெருங்கிய தோழர்; தற்போது வயசு 98 ஆகிறது; நன்றாகவே இருக்கிறார். அவருக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு, பாடலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம்.

சாவித்திரிக்குத் தெரிந்த ஸ்ரீ நாகராஜ குருக்கள் அபிஷேகம் பண்ணினார். பார்க்கவே பரவசமாக இருந்தது. நாங்கள் ஸ்வாமிக்கு சார்த்த 10 x 6 வேஷ்டியும், விநாயகருக்கு 3-முழம் அங்கவஸ்திரமும் வாங்கிக்கொண்டு போயிருந்தோம். பின்னர் அர்ச்சனை நடந்தது.

அடுத்து பிரஹந்நாயகி அம்மனுக்கு அபிஷேகம். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிக்கொண்டே குருக்கள் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணியது மிக நன்றாக இருந்தது. அவருடன் கூடவே சாவித்திரியும், விஜயாவும் லலிதா சஹஸ்ரநாமத்தை பாடிக்கொண்டிருந்தனர். மனசுக்கு மிக மிக ஆனந்தமாக இருந்தது.

பின்னர் அலங்காரம் - நாங்கள் வாங்கிச் சென்றிருந்த மாம்பழ வண்ண உடலும், சிகப்பு வண்ண முகப்பும் கொண்ட 6-கஜம் புடைவையில் அம்மன் மிகமிக அழகாக இருந்தாள். அலங்காரம் பிரமாதம். அம்மனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. சன்னதியை விட்டு வரவே மனசில்லாமல் வந்தோம்.

மறுநாள் (25 ஜூலை, சனிக்கிழமை, ஆடிப்பூரம் ஆனதால் அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் சாவித்திரியும், விஜயாவும் வாங்கி கொடுத்தார்கள். முன்னதாக அம்மன் ச்ன்னதியில் எண்ணெய் ஊற்றி நிறைய விளக்குகளை சாவித்திரி ஏற்றினாள்.

அடுத்து, ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு அர்ச்சனை பண்ணினோம்; பாவாடையும் சார்த்தினோம்.

ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று பாடலீஸ்வரர் கோயிலில் அன்னதானம் பண்ண ரூ. 1200.00 கட்டினோம். - வாசு 500, சாவித்திரி 200, நான் 500 என 1200.00 கட்டினோம். திருப்பணிக்காக ரூ 200.00 ம், கோ சம்ரக்ஷனைக்காக இன்னொரு ரூ 200.00 ம் சாவித்திரி தனியாகக் கட்டினாள்.

வீட்டிற்குத் திரும்பி, பிரசாதமான கேஸரி, புளியோதரையை சாப்பிட்டுவிட்டு, பகல் 1 மணிக்கு ராதா வீட்டிலிருந்து கிளம்பினோம்; மங்களம், கோபி தி-மலைக்கு பஸ்ஸில் போனார்கள். நாங்கள் மூவரும் சென்னை எங்கள் வீட்டை வந்தடையும்போது மணி 3-45! மூன்று மணி நேரத்திலேயே கடலூரிலிருந்து வந்துவிட்டோம்.

இவ்வாறாக, எங்கள் திருப்பாதிரிப்ப்புலியூர் பயணம் மிக திருப்தியாக அமைந்தது. எல்லாம் ஆண்டவன் செயல்.

ராஜப்பா
26 July 2009
11:30 AM

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011