Skip to main content

சென்னை சங்கமம் - 2010

சென்ற 6 நாட்களாக சென்னையில் பல இடங்களில் நடந்துவந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நேற்றோடு (16-01-2010) நிறைவு பெற்றன. பெஸண்ட்நகர் எல்லியட்ஸ் பீச்சில் இந்த நிறைவு விழாவிற்காக காலையிலிருந்தே பிரம்மாண்டமான தடபுடலான ஏற்பாடுகள் துவங்கின.

விஜயாவும் நானும் இரவு 8 மணிக்கு பீச்சிற்குச் சென்றோம்; நிறய கூட்டம். மேடையில் கிராமிய நடனங்கள் FOLK DANCES . பொதிகை டீவியில் வைத்தால் அந்த டீவி பக்கமே போகாதவர்கள், இங்கு மட்டும் எப்படி “ரசிக்கிறார்கள்”? என்று வியந்து போனேன்.

நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிய பின்னர், வாண வேடிக்கைகள் FIREWORK DISPLAY ஆரம்பித்தன. அடுத்த 10-12 நிமிஷங்களுக்கு வானமே வண்ணமயமானது; நன்றாக இருந்தது. 9-30 மணிக்கு முடிவுற்றது. வீடு திரும்பினோம்.

பீச் ரோட்டில் இருபது, முப்பது “சாப்பாட்டுக் கடைகள்” வைத்திருந்தனர். ஏராளமானோர் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரோடு முழுதும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டம்ளர்கள் என அசிங்கம்.

இன்று காலை 7 மணிக்கு walking போகும்போது பார்க்கிறேன் – அதே ரோடு எல்லா CUTOUTகளும் நீக்கப்பெற்று, சுத்தமாகக் காணப்பட்டது; இரவு முழுதும் வேலை செய்திருப்பார்கள். பீச் மணலில் நூற்றுக்கணக்கான காக்கைகள் தங்களுடைய Scavenging வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தன.

ஒரு குடும்பம் சென்னையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

ராஜப்பா
17-01-2010
காலை 10:30 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை