Skip to main content

Annai Velankanni Shrine, Besantnagar

All of us would have heard about the Annai Velankanni Shrine, near Nagapattinam. Hundreds of thousands of devout Christians and Hindus alike visit this shrine to have the blessings of Virgin Mary, Our Lady of good Health. ஆரோக்கிய மாதா.
 நாகப்பட்டினத்தில் மூன்று அற்புதங்கள் நிகழ்ந்தன.

முதல் அற்புதம் 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. ஒரு ஹிந்து சிறுவன் பாத்திரத்தில் பால் எடுத்துச் சென்றபோது, ஒரு பெண்மணி அவனிடம் வந்து தன் குழந்தைக்குப் பால் கொஞ்சம் தருமாறு கேட்க, அவனும் கொடுத்தான். பின்னர் வீட்டிற்குச் சென்ற பையன் இந்த நிகழ்ச்சியை எல்லாரிடமும் சொன்னான்; பாத்திரத்தை திறந்து பார்த்தால் அதில் பால் நிறைய தளும்பிக் கொண்டிருந்தது. வந்த பெண்மணி அன்னை மேரி மாதா என உணர்ந்து அன்னை தோன்றிய இடத்தில் ஒரு ஓலைக் குடிசையில் மாதாவிற்கு சிறிய அளவில் கோயில் கட்டினார்கள். அற்புதம் நிகழ்ந்த குளம் “மாதா குளம்” என அழைக்கப்படுகிறது.

2-வது அற்புதம்: 16-ஆம் நூற்றாண்டு இறுதியில் வேளாங்கண்ணியில் ஒரு ஏழை பெண்மணி தன் பையனுடன் இருந்தாள். பையனுக்கு பிறவியிலேயே கால் ஊனம்; நடக்க இயலாது. தினமும் அவன் “நடுத்திட்டு” என அழைக்கப்படும் ஒரு இடத்தில் அமர்ந்து எல்லாருக்கும் மோர் விற்றுக் கொண்டிருப்பான். ஒரு நாள், அவன் முன்னால் பெரிய ஒளியுடன் ஒரு பெண்மணி தன் கையில் தெய்வீகமான ஒரு இளங்குழந்தையுடன் தோன்றி. மோர் கேட்டுக் குடித்தாள்.

பின்னர், அந்த சிறுவனை நாகப்பட்டினம் சென்று ஒரு குறிப்பிட்ட நபரிடம் தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு சொல்லச் சொன்னாள். அவனும் எழுந்து செல்ல ஆரம்பித்தான் - என்ன அதிசயம், அவனது கால் ஊனம் முற்றிலும் குணமாகி ஓடத் தொடங்கினான். அந்த நபரின் கனவிலும் ஆரோக்கிய மாதா ஏற்கனவே தோன்றி கோயில் பற்றி சொல்லியிருந்தாள். பையன் வந்து சொன்னதும், மெய்சிலிர்த்துப் போன அவர், உடனே அந்த நடுத்திட்டில் அன்னை மேரிக்கு Chapel கட்டினார். அதுதான் இன்று Shrine Basilica என அழைக்கப்படுகிறது.

3-வது அற்புதம்: 17-ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்று கொண்டிருந்த ஒரு போர்ச்சுகல் கப்பல் வங்காள விரிகுடாவில் புயலில் சிக்கி தவித்தது. மாலுமிகள் அன்னை மாதாவை வேண்டினார்கள்; அன்னைக்கு ஒரு Church கட்டுவதாக வேண்டிக் கொண்டார்கள். உடனே புயல் ஓய்ந்து கடல் அமைதியாயிற்று. கப்பலும் நாகப்பட்டினம் அருகே கரைக்கு வந்தது. நாகப்பட்டினம் நபர் கட்டிய ஓலைக் குடிசை chapel இருந்த இடத்தில் அவர்கள் அழகிய, பெரிய, கற்களால் ஆன ஒரு Chapel கட்டினார்கள். அதுதான் இன்றைக்கும் வேளாங்கண்ணியில் இருக்கிற Shrine Basilica of Our Lady of Good Health.

மாலுமிகள் வேளாங்கண்ணிக்கு வந்தது ஒரு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று.

செப்டம்பர் 8-ஆம் தேதியை அன்னை மாதாவின் பிறந்த நாளாக கொண்டாடுகிறார்கள். வேளாங்கண்ணி கோயில் போன்றே சென்னையிலும் பெசண்ட்நகரில் அன்னை வேளாங்கண்ணி கோயில் ஒன்று உள்ளது. இது 1972-ல் ஓலைக்குடிசையாக ஆரம்பித்து, தற்போது பெரிய Church-ஆக உருவெடுத்துள்ளது. இந்த Shrine எங்கள் வீட்டிற்கு மிக அருகில், கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கும் செப் 8ஆம் தேதியன்று (அதாவது இன்று) அன்னை மேரியின் பிறந்த நாளாகவும் Feast தினமாகவும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

பத்து நாட்களுக்கு முன்னால் இந்த Shrine-ல் கொடியேற்றி விழாவை ஆரம்பித்தனர். அன்று இந்த இடமே மக்கள் வெள்ளமாக திகழ்ந்தது. அடுத்த 10 நாட்களும் Shrine-ல் பாட்டுக்களும், ஜெபங்களும், பூசைகளும் தான்.

நேற்று (7-9-2010) தேர்த்திருவிழா. Armed with candles, rosaries, and malas thousands and thousands of faithfuls (both Christians and Hindus) thronged the Shrine from
evening itself. பல்லாயிரக்கணக்கான ஏழைகள், கீழ்த்தட்டு மக்கள் சென்னையின் பல பாகங்களிலிருந்தும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் நடையாகவே வந்து - மனதில் பக்தியுடனும், கைகளில் சாப்பாடு, தண்ணீர் மூட்டை முடிச்சுகளுடனும், குழந்தை குட்டிகளை கூட்டி வந்து அன்னையின் அருளைப் பெற வந்தனர்.

தேரில் அன்னையை தரிசித்த பின்னர், பீச்சிலும், சுற்றியுள்ள எல்லா தெருக்களிலும் (இடம் கிடைத்த இடத்தில்) கிழிந்த பெட்ஷீட்டை விரித்து, உட்கார்ந்து, சாப்பிட்டு, அங்கேயே அத்தனை (பல்லாயிரம், பல்லாயிரம் பேர்கள்) பேரும் தூங்கினர். எல்லாத் தெருக்களிலும் மக்கள் கூட்டம். எங்கள் வீட்டிற்கு முன்னாலேயே மூன்று குடும்பங்கள் சாப்பிட்டு, தூங்கினார்கள். இதே போன்று ஒவ்வொரு வீட்டின் முன்னாலும். Ellitots Beach முழுதும் இந்த ஏழை மக்கள்தான்.

இந்தியாதான் எத்தனை ஏழ்மையான் நாடு ! (ரூ 50,000 கோடிகளுக்கு 6 submarines வாங்கப் போகிறது இந்தியா என்பது இன்றைய செய்தி - ஏழை நாடு??)

இன்று (செப் 8) நாள் முழுதும் பூசைகள், ஜெபங்கள், பாட்டுக்கள் நடக்கும்; மாலை கொடியிறக்கும் விழாவோடு 10-நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும். மக்கள் கூட்டமும் வீடு திரும்பும்.

 
வேளாங்கண்ணியில் இதைவிட அதிகமாக கொண்டாடியிருப்பார்கள். மும்பையில் BANDRA-வில் உள்ள Mary's Basilica விலும் இதை Bandra Fair எனக் கொண்டாடுகிறார்கள். அங்கும் கூட்டம் திரள் திரளாக வரும்.

ஹிந்துவாக இருந்தால் என்ன, கிறிஸ்துவராக் இருந்தால் என்ன, இந்தியாவில் கடவுள் நம்பிக்கைக்கும், விழாக்களுக்கும் என்றுமே இடம் உண்டு.

ராஜப்பா
10:45 AM
8-9-2010



Comments

Kannan said…
நல்ல ப்ளாக்.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011