Skip to main content

விநாயகர் சதுர்த்தி


பாத்ரமாத சுக்ல பக்ஷ சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்று காலை எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, வீட்டை பெருக்கி, மெழுக வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.

ஒரு மண்டபம் அல்லது சுத்தமான ஒரு பலகையில் தலைவாழை இலை போட்டு அதன்மேல் நெல் அல்லது பச்சரிசி போட்டு பரப்பி, அதில் ஒரு தாமரையை வரைந்து, அதன் மேல் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து அருஹம்புல், சந்தனம் இன்னும் பலவித இலைகள், பூக்கள் ஆகியவற்றால் பூஜை செய்து, தூப, தீபம் காண்பித்து, நெய்யில் செய்த கொழுக்கட்டை (மோதகம்), மாவுப்பலகாரங்கள், தேங்காய், வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிக்காய், அப்பம், இட்லி, முதலானவற்றை நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி பூஜையை முடிக்க வேண்டும்.

11-09-2010 சனிக்கிழமை காலை சுமார் 1010 மணி வரை திருதியை இருப்பதால், ராகுகாலம் சென்றபிறகு, 10-30க்கு மேல் விநாயகர் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

விநாயகருக்கு உகந்த 21 விதமான இலைகள்:

1. மாசிப்பச்சை, 2. கணடங்கத்திரி, 3.பில்வம், 4. அருஹம்புல், 5. ஊமத்தை, 6. இலந்தை, 7. நாயுருவி, 8. துளஸி, 9. மாவிலை, 10. அரளீ, 11. விஷ்ணுக்கிராந்தி,
12. மாதுளை, 13. நெல்லி, 14. மருக்கொழுந்து, 15. நொச்சி, 16. ஜாதி, 17. வெள்ளெருக்கு, 18. வஹ்ணி, 19. கரிசிலாங்கண்ணி, 20. வெண்மருதை, 21. எருக்க இலை. 

இவற்றில் எட்டு இலைகள் (மஞ்சள் கலரில் உள்ளவை) எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கின்றன..
 
21 விதமான பூக்கள்:    

1. புன்னை, 2. எருக்கு, 3. மாதுளை, 4. மந்தாரை, 5. மகிழம், 6. வெட்டிவேர், 7. பாதிரி, 8. தும்பை, 9. ஊமத்தை, 10. சம்பகம், 11. மாம்பூ, 12. தாழம்பூ, 13. முல்லை, 14. கொன்றை, 15. அருக்கு, 16. செங்கழுநீர், 17. செவ்வந்தி, 18. பில்வம், 19. அரளீ, 20. மல்லீ, 21. பவழமல்லி.

அப்பா, அம்மா, தம்பி, மாமா, மாமி என பலர் உள்ள ஒரு குடும்பத்தில் அனைவரையும் ஸந்தோஷப்படுத்த சுலபமான வழி என்ன தெரியுமா? அந்தப் பெற்றோரின் குழந்தையை த்ருப்தி செய்துவிட்டால் போதும்; எல்லாரும் சந்தோஷமாகி விடுவார்கள்.

அந்தக் குழந்தைதான் விநாயகர். பூஜை செய்து அவரை த்ருப்தி பண்ணி விட்டால், அப்பா-அம்மாவான சிவன்-பார்வதி, தம்பி முருகன், மாமா விஷ்ணு, மாமி மஹாலக்ஷ்மி எல்லாருமே ஸந்தோஷமாகி உங்களுக்கு அருள் புரிவார்கள். (ஸ்ரீ பரமாச்சிரியார் சொன்னது)

விநாயகரின் ஆசி, அருள் எல்லாருக்கும் கிட்டட்டும்.

ராஜப்பா
10-09-2010
12:25 பகல்

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை