31 ஜனவரி 1971 அன்று காஞ்சிபுரத்தில் எங்கள் கல்யாணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இன்று 40-வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம். 1971-ல் கல்யாணத்தின் போது நம் அம்மா-அப்பா, அண்ணா-மன்னி, KVS அத்திம்பேர் இருந்தனர். இவர்களையும் சேர்த்து அன்றைக்கு நம் குடும்பத்தில் 32 பேர்தான். எல்லாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். கடலூரிலிருந்து விடியலில் கிளம்பி, செங்கல்பட்டில் இறங்கி, ப்ளாட்ஃபாரத்திலியே உட்கார்ந்து இட்லி சாப்பிட்டு, பின்னர் வேறு ட்ரெயின் மாறி காஞ்சிபுரம் அடைந்து, குதிரை வண்டிகளில் மண்டபம் சென்றது நினைவிருக்கலாம். கல்யாணதிற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பன்று ஸ்ரீகாந்த் “தொலைந்து” போய் திரும்பி வந்ததும் நினைவிருக்கும். திரும்பியவுடன், பத்மா அக்கா வீட்டில் தடபுடலாக விருந்து ஒன்று நடந்தது. 1971-ல் நான் பூனாவில் வேலை பார்த்து வந்தேன்; மே - ஜூனில் விஜயா பூனா வந்தாள். அம்மாவும்,அப்பாவும் வந்தனர். 1972 ஜூலையில் அருண் (பம்பாய், சாண்டாக்ரூஸில்) பிறந்தான். அடுத்து அஷோக் 4 மார்ச் 1975 அன்று சென்னை மயிலாப்பூரிலும், 1 அக்டோபர் 1977 அன்று அர்விந்த ஹைதராபாத் காஞ்சன்பாக்கிலும் பிறந்தனர். 1962-ல் பூனா ச...