Skip to main content

Forty Years since Jan 1971

31 ஜனவரி 1971 அன்று காஞ்சிபுரத்தில் எங்கள் கல்யாணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இன்று 40-வது ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.

1971-ல் கல்யாணத்தின் போது நம் அம்மா-அப்பா, அண்ணா-மன்னி, KVS அத்திம்பேர் இருந்தனர். இவர்களையும் சேர்த்து அன்றைக்கு நம் குடும்பத்தில் 32 பேர்தான். எல்லாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தனர்.

கடலூரிலிருந்து விடியலில் கிளம்பி, செங்கல்பட்டில் இறங்கி, ப்ளாட்ஃபாரத்திலியே உட்கார்ந்து இட்லி சாப்பிட்டு, பின்னர் வேறு ட்ரெயின் மாறி காஞ்சிபுரம் அடைந்து, குதிரை வண்டிகளில் மண்டபம் சென்றது நினைவிருக்கலாம். கல்யாணதிற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பன்று ஸ்ரீகாந்த் “தொலைந்து” போய் திரும்பி வந்ததும் நினைவிருக்கும்.

திரும்பியவுடன், பத்மா அக்கா வீட்டில் தடபுடலாக விருந்து ஒன்று நடந்தது. 1971-ல் நான் பூனாவில் வேலை பார்த்து வந்தேன்; மே - ஜூனில் விஜயா பூனா வந்தாள். அம்மாவும்,அப்பாவும் வந்தனர். 1972 ஜூலையில் அருண் (பம்பாய், சாண்டாக்ரூஸில்) பிறந்தான். அடுத்து அஷோக் 4 மார்ச் 1975 அன்று சென்னை மயிலாப்பூரிலும், 1 அக்டோபர் 1977 அன்று அர்விந்த ஹைதராபாத் காஞ்சன்பாக்கிலும் பிறந்தனர்.

1962-ல் பூனா சென்றுவிட்ட நான் பன்னிரண்டு வருஷம் கழித்து 1974 மார்ச்சில் ஹைதராபாத் சென்றேன் (சென்றோம்). அங்குதான் அருண்-அஷோக்-அர்விந்த் ஸ்கூல், காலேஜ் முடித்தனர். விஜயா B Ed படித்து டிகிரி வாங்கி 1983-ல் ஸ்கூல் டீச்சராக வேலையில் சேர்ந்தாள்.

எனக்கு வயசு அறுபது ஆனவுடன், 2001 ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். விஜயாவும் 2001 டிசம்பரில் தன்னுடைய டீச்சர் வேலையை விட்டாள். 2001 டிசம்பரில் சென்னை வந்து செட்டில் ஆனோம். எங்கள் சென்னை வாழ்க்கை முதலில் கீழ்ப்பாக்கத்தில் அஸ்பிரான் கார்டனிலும், அடுத்து ராஜா அண்ணாமலைபுரத்தில் கற்பகம் அவென்யூவிலும், தற்போது பெசண்ட்நகரிலும் நடக்கிறது.

2000 அக்டோபரில் அருண்-காயத்ரிக்கும், 2004 ஃபிப்ரவரியில் அஷோக்-நீரஜாவிற்கும், 2004 ஜூனில் அர்விந்த்-கிருத்திகாவிற்கும் கல்யாணங்கள் நடந்தன. 2006-ல் ஸௌம்யாவும், அதிதியும், 2009-ல் ஸ்ரீராமும் பிறந்தனர்.

1991-ல் நாங்கள் கோயம்பத்தூரில் வீடு கட்டினோம். 2009-ல் அதை விற்றுவிட்டோம். 17 பாபுராவ் தெருவில் இருந்ததும் 39 வருஷங்களாக நாம் இருந்ததுமான நம்முடைய அம்மா-அப்பாவின் வீட்டை 1993-ல் விற்றோம். 2008-ல் அஷோக்-நீரஜா பெங்களூரில் சொந்தவீடு கட்டிக் கொண்டனர். அருண-காயத்ரி, அர்விந்த்-கிருத்திகா இருவரின் வீடுகளும் முடியும் தறுவாயில் உள்ளன; இந்த மே-ஜூனில் அவர்கள் (நாங்களும்) சொந்த வீடுகளுக்கு குடி போய்விடுவார்கள் என எண்ணுகிறேன். 

40 வருஷங்களாக விஜயாவும் நானும் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் ஒரு பிரமிப்பு எழுகிறது - 40 வருஷங்களா ஆகிவிட்டன? இந்த வருஷங்களில் நல்ல விஷயங்களே நிறைய நடந்துள்ளன; எல்லாவற்றுக்கும் பகவானின் அருளும், ஆசிகளும்தான் காரணம்.

1983-ல் நம் அம்மாவும், 1986-ல் அப்பாவும், 1989-ல் அண்ணாவும், 2009-ல் பெரிய மன்னியும், 2008-ல் பெரிய அத்திம்பேரும், 2007-ல் கிரிஜாவும் காலமானார்கள் - இவை இந்த 40 வருஷங்களில் நடந்த சில துக்க சமாசாரங்கள்.

இன்று அவனது திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்து, அவனது அருளையும் ஆசிகளையும் மீண்டும் வேண்டுகிறோம். 

ஓம் நமோ நாராயணாய. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா.

ராஜப்பா
11.00 காலை
31 ஜனவரி 2011

முக்கியமான பின்குறிப்பு:

40-வது ஆண்டுவிழாவை நாங்கள் நேற்று (30-01-2011) ஞாயிறன்றே கொண்டாடினோம். அஷோக்-நீரஜா பெங்களூரிலிருந்து வந்தனர். நாங்கள் 11 பேர், சரோஜா-அத்திம்பேர், காயத்ரியின் பெற்றோர், கிருத்திகாவின் பெற்றோர், ஸதீஷ் ஆகிய 15+3 பேரும் பகல் விருந்தை (அடையாறு) சங்கீதாவில் சாப்பிட்டோம்.

அருண் முதலானோர் எனக்கு ஒரு CANON காமிராவும், விஜயாவிற்கு முத்துமாலை, தோடும் பரிசளித்தனர். ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராமிற்கு நாங்கள் ட்ரெஸ் வாங்கி அளித்தோம்.

நேற்றைய விழா மிக நன்றாக இருந்தது. இன்று (31) இரவு விருந்து காயத்ரி பண்ணினாள்; ஸூப், நிறைய காய்கள் சேர்த்து சாம்பார் சாதம், த்யிர் சாதம், காரட் பாயஸம் - ருசித்து, ரசித்து சாப்பிட்டோம்.

ரா.

Comments

Shiva said…
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். உங்களை போன்ற பெரியவர்களின் வாழ்க்கை இன்றைய இளைய சமூகத்திற்கு ஒரு உதாரணம்.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...