Skip to main content

இலந்தம் பழம்

Inspired from an article (INDIAN JUJUBE) in today's (25th Jan) New Indian Express newspaper.

இலந்தம்பழம்.

“எலந்த பயம், எலந்த பயம் ..” என்ற பழைய தமிழ் சினிமாப் பாட்டு நினைவுக்கு வரட்டும். மிக எளிமையான, அதே சமயம் மிக ருசியான ஒரு பழம். ஸ்ரீராமனுக்கு சபரி கொடுத்த பழம்.

சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த பழம். ஸ்டாராபெர்ரி, கிவி போன்ற வெளிநாட்டுப் பழங்கள் முதல் தட்டிலும், ஆப்பிள், ஆரஞ்சு, திராக்ஷை, அன்னாசி போன்ற பழங்கள் இதற்கு அடுத்த தட்டிலும் உள்ள பழங்களாக இருக்கலாம்; ஆனாலும், இலந்தம் பழத்திற்கு என்னைப் போன்று தனி ரசிகர்கள் உண்டு.

BHER என்று ஹிந்தியிலும் REGI என்று தெலுங்கிலும் அழைக்கப்படும் இது, பெரிய சைஸிலும் கிடைக்கிறது. பெரிய சைஸ் பழம் அவ்வளவு ருசியாக இருக்காது. இலந்தம் பழத்தை சாப்பிடும் முன், பழத்தினுள் சிறு worms இருக்கிறதா என பார்த்து, worms இல்லாத பழங்களை சாப்பிடவேண்டும். அந்த இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை பிரமாதமாக இருக்கும். சிலர் மிளகாய்த் தூள், உப்பு பிசறி இலந்தம்ப்ழத்தை சாப்பிடுவார்கள். பழத்தை இளம்சூடு வெந்நீரில் நன்றாக அலம்பி சாப்பிடுவது நல்லது.
நான் வேலை பார்த்த DRDL-ல் இலந்த மரங்கள் நிறைய இருந்தன; சீஸனில் தினமும் 100-200 என பறித்து வந்து என்னுடைய assistants எனக்குக் கொடுப்பார்கள். பல நாட்கள் பழங்களை வீட்டிற்கு கொண்டுவந்து, அருண், அஷோக், அர்விந்த், விஜயா ஆகியோர் சேர்ந்து சாப்பிடுவோம்.

அந்த ருசிதானோ என்னவோ, இப்போதும் கடைகளில் எங்கு எப்போது பார்த்தாலும் இலந்தம் பழத்தை அர்விந்த் வாங்கி விடுவான். சமீபத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று திரும்பும்போது, வழியில் காரை நிறுத்தி இலந்தம் பழங்களை நிறைய வாங்கினான். நேற்றும் எங்கிருந்தோ வாங்கி வந்தான்.

இலந்தம் பழத்தை கொட்டை நீக்கி, வெயிலில் உலர்த்தி, புளி, மிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, சிறு வடைகளாக தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்தால் - ருசியான இலந்தம் வடை கிடைக்கும்; 20 -25 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். (மயிலாப்பூர் அம்பிகா அப்பளம் கடையில் இந்த வடை மிக பிரபலமானது)

இலந்தம்பழத்தில் ”Glutomic” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும். வைட்டமின் ஏ உயிர்ச்சத்து இலந்தம்பழத்தில் ஏராளமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தப்பழத்தை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, சீதபேதி, கீழ்வாயுப்பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என நம் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

ராஜப்பா
25-01-2011
காலை 11:15 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை