தீபாவளி லேகியம். கொத்தமல்லி - கால் கப் அரிசி திப்பிலி - 10 கிராம் கண்டந்திப்பிலி - 10 கிராம் சுக்கு - 10 கிராம் சீரகம் - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி மிளகு - ஒரு மேசைக்கரண்டி உருண்டை வெல்லம் - 100 கிராம் வெண்ணெய் - 100 கிராம் தேன் - அரை கப் ஓமம் - ஒரு மேசைக்கரண்டி கிராம்பு - 4 சித்தரத்தை - 10 கிராம் செய்முறை அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து தயாராக எடுத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு 2 நிமிடம் வறுக்கவும். ஒவ்வொன்றையும் 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும். எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். மேலும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக தோசை மாவ...