Skip to main content

தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம்.


கொத்தமல்லி - கால் கப்
அரிசி திப்பிலி - 10 கிராம்
கண்டந்திப்பிலி - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
சீரகம் - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
உருண்டை வெல்லம் - 100 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
தேன் - அரை கப்
ஓமம் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
சித்தரத்தை - 10 கிராம்
 
 செய்முறை
 
 
அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து தயாராக எடுத்துக் கொள்ளவும்.
 
வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு 2 நிமிடம் வறுக்கவும். ஒவ்வொன்றையும் 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும். எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
 
ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
பின்னர் ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். மேலும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
 
வாணலியில் வெண்ணெயை போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
வெண்ணெய் உருக்கிய அதே பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.
 
பிறகு வெல்லத்தை நசுக்கி அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
 
இதைப் போல 20 நிமிடம் கிளறவும். கிளறும் போது கெட்டியானால் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
 
ஆறியதும் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேனை சேர்த்து கிளறி பரிமாறவும்.
 
தீபாவளி அன்று பெருமாலான வீடுகளில் செய்யும் லேகியம் இது. இதை சாப்பிட்டால் அஜீரண கோளாறு இருக்காது.


ராஜப்பா
31-10-2013

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...