Skip to main content

Kishkindha Kaandam - Part 1

கிஷ்கிந்தா காண்டம். வால்மீகி ராமாயணம்.

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார்.

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆக மூன்று காண்டங்களை முடித்து விட்டார்.

இன்று 2013 செப்டம்பர் 11 புதன்கிழமை. 374-வது பகுதியாக கிஷ்கிந்தா காண்டம் தொடங்குகிறது. மொத்தம் 67 ஸர்கங்கள்.  ஸ்ரீ ஹனுமானை முதன்முதலாக சந்திக்கப் போகிறோம்.

ராமனும் லக்ஷ்மணனும் பம்பா ஏரியின் (பம்பா என்றால் தாமரை) அழகை ரசிக்கிறார்கள். ராமனுக்கு ஸீதையின்  ஞாபகம் வந்து அவனை துன்புறுத்துகிறது. மலைப்பகுதியில் ஒளிந்து வாழும் சுக்ரீவன் இவர்களைப் பார்த்து சந்தேகம் கொண்டு பயப்படுகிறான். ஆயுதங்கள் கொண்டு இருவரையும் தாக்க எண்ணுகிறான். வாலிதான் வந்துவிட்டான் என வானரங்கள் அஞ்சுகிறார்கள்.

இப்போது ஹனுமான் முதன்முதலாக அறிமுகமாகிறான். “அஞ்சாதே! எதற்கும் பயப்படாதே!! என்பதுதான் ஹனுமானின் சொல். {ஸர் 2]

தானே சென்று அவர்களை பார்த்து வருவதாக ஹனுமான் புறப்படுகிறான். பார்த்து இனிய மென்மைக் குரலால் பேச ஆரம்பிக்கிறான். முதலில் நமஸ்காரம் தெரிவிக்கிறான். யாராயிருந்தாலும் முதலில் காணும்போது நமஸ்காரம் தெரிவிக்க வேண்டும் என்பது எவ்வளவு நல்ல நியதி !

“நீங்கள் இருவரும் அரச குலத்தை சார்ந்தவர்களாக் இருக்க வேண்டும். எதற்கு இந்த இடத்திற்கு வந்தீர்கள்?” “பம்பா நதியை இங்குமங்கும் பார்க்கிறீர்கள், வீரர்களாக தோற்றம் அளித்த போதிலும் உங்கள் முகத்தில் ஏதோ இனம் புரியாத சோகம் குடி கொண்டுள்ளது, ஏன்” என பலவாறு கேட்ட ஹனுமான் அவர்களது உருவத்தையும் அங்கங்களையும் ஸ்லாகித்து பேசுகிறான். ஆனால் ராமரும் லக்ஷ்மணனும் வாய் திறக்காமல் இருந்ததை கண்டு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் [ஸர் 3 ஸ்லோ 21]

தான் சுக்ரீவன் என்ற வானர அரசனின் மந்திரி என்றும், தான் வாயு புத்திரன் என்றும், சுக்ரீவன் உங்களுடன் தோழமை கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறான்.

இதுவரை ராமரும் லக்ஷ்மணனும் ஒன்றுமே பேசவில்லை; தற்போது ராமன் லக்ஷ்மணனை கூப்பிட்டு பதில் அளிக்க சொல்கிறார். ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் இவை எல்லாவற்றையும் நன்கு படித்து அறிந்தவனே இவ்வாறு (அதாவது ஹனுமன் பேசியவாறு) பேச முடியும் என ராமர் லக்ஷ்மணனிடம் கூறுகிறார். ஹனுமானின் பேச்சு வன்மையையும், வேதங்களில் அவனது புலமையையும் ஸ்லாகித்துப் பேசுகிறார்.

இனி ஸர்கம் 4: லக்ஷ்மணன் தாங்கள் யார் என்பதை தெரிவித்து, ஸீதையை யாரோ கடத்திச் சென்றதையும் அந்தக் கொடியவனை தேடி வந்ததையும், தேடுவதில் சுக்ரீவனின் உதவி தேவைப்படும் என்பதையும் விளக்குகிறான். [ஸர் 4]

ராமனையும் லக்ஷ்மணனையும் சுக்ரீவனிடம் ஹனுமன் அழைத்துப் போகிறான். சுக்ரீவனும் ராமனும் நண்பர்களாக ஆகிறார்கள். [ஸர் 5]

ஸீதி எங்கிருந்தாலும் அவரை கண்டுபிடித்து ராமரிடம் சேர்ப்பிப்பதாக சுக்ரீவன் உறுதியளிக்கிறார்.

சுக்ரீவனுக்கும் வாலிக்கும் எதற்கு போர் நிகழ்ந்தது என ராமர் வினவ சுக்ரீவன் பதிலளிக்கிறான் [ஸர் 8]

வாலியை ஒரு போருக்கு அழைக்குமாறு சுக்ரீவனிடம் ராமர் சொல்கிறார். சுக்ரீவனும் அவ்வாறே அழைக்க சண்டை மூள இருக்கிறது. [ஸர் 12]

எல்லாரும் கிஷ்கிந்தை நோக்கி செல்கிறார்கள். வாலியின் மனைவி தாரா நற்பண்புகள் நிறைந்த ஒரு உத்தமி. சுக்ரீவனுடன் சண்டை போடவேண்டாமென அவள் வாலிக்கு புத்திமதி சொல்கிறாள். ஆனால் வாலி கேட்பதாக இல்லை. [ஸர் 15]

சண்டையில் வாலி ஜெயித்துக் கொண்டிருக்க, அப்போது ராமர் அம்பு எய்து வாலியை வீழ்த்துகிறார். [ஸர் 16]

உனக்கும் எனக்கும் ஒருவிதமான தொடர்பும் இல்லாத போது எதற்கு அம்பு எய்து தன்னை வீழ்த்தினாய் என வாலி வினவ அதற்கு ராமனும் பதிலளிக்கிறான் [ஸர் 18] வாலி மயக்கமுற்று கீழே விழுகிறான்..

செய்தி கேட்ட தாரா அங்கு ஓடி வந்து, அழுகிறாள். தாரா ப்ருஹஸ்பதியின் புத்திரி [ஸர் 19 -20]

ஹனுமான் அவளைத் தேற்ற முற்படுகிறார்.  மயக்கத்திலிருந்து மீண்ட வாலி தன் தந்தை கொடுத்த மாலையை சுக்ரீவனிடம் கொடுத்து அவனையே நாட்டை ஆளுமாறு சொல்லுகிறான். வாலி உயிர் துறக்கிறான். [ஸர் 21-22]

சுக்ரீவனும் தாராவும் அழுது புலம்புகின்றனர். [ஸர் 23]

ஸ்ரீராமனை திட்டுவதற்கு அவன் அருகில் வந்த தாரா, அவனை நேரில் பார்த்து, மனம் மாறி, புகழத் தொடங்குகிறாள்.  கிஷ்கிந்தா காண்டத்தில் இந்த ஸர்கத்தின் 31வது ஸ்லோகம் மிகவும் ஆழமான, நயமான கருத்துக்களை உள்ளடக்கியது. பகவத் கீதையின் ஸாரத்தையும் [கீதை 9 - 11 ], நாராயணா உபநிஷத்தையும் [ 1-10 ] அப்படியே தாரா கூறுகிறாள். படித்து, ஸ்ரீராமனின் குணங்களை அறிய முயற்சி செய்யுங்கள். [ஸர் 24 ஸ்லோ 31]


தன்னையும் கொன்று விடுமாறு தாரா ராமனிடம் இறைஞ்சுகிறாள், மறுத்த ராமன், தாராதான் இனியும் மஹாராணியாக இருப்பாள், அங்கதன் தான் இளவரசனாக் இருப்பான் எனவும் ஆறுதல் கூறுகிறார். சுக்ரீவனும் தாராவை மீண்டும் மணம் புரிந்து கொள்கிறான். [ஸர் 24]

வாலியின் இறுதிக் காரியங்கள் நடைபெறுகின்றன. (ஸர் 25)

சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ராமன் தன்னுடைய வனவாசத்தில் ஊர்களுக்கோ, கிராமங்களுக்கோ நுழையக் கூடாதாகையால் அவர் மலையிலேயே இருக்கிறார். (ஸர் 26)

சுக்ரீவனின் பட்டாபிஷேகம் முடிந்ததும், ராமனும் லக்ஷ்மணனும் ப்ரஸவனா என்னும் மலையில் இருக்கத் தொடங்குகின்றனர். அடுத்த நாலு மாஸங்களுக்கு மழை காலமானதால் எங்கும் செல்ல இயலாது என அங்கு தங்கி மழையை ரசிக்கின்றனர். சுக்ரீவன் காம களியாட்டத்தில் ஈடுபடுகிறான். சுக்ரீவனிடமிருந்து எந்த ஒரு விஷயமும் வராததால், ராமன் லக்ஷ்மணனை அவனிடம் அனுப்புகிறான். (ஸர் 27 - 30)

லக்ஷ்மணனின் கோபத்தை தணித்து, ஸீதையை தேடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள போவதாக தாரை சொல்லுகிறாள். லக்ஷ்மணனின் கோபமும் தணிகிறது. (ஸர் 31 - 35)

ராஜப்பா
30-10-2013


*** கிஷ்கிந்தா காண்டம் தொடர்கிறது ... Part 2






Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...