Skip to main content

SOME DEFINITIONS IN APARA KARIYANGAL


SOME DEFINITIONS IN APARA KARIYANGAL

நித்யவிதி

ஜீவன் இறந்த உடனேயே உலகை விட்டுச் செல்வதில்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் 10 நாட்கள் வரை இவ்வுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அந்த ஜீவன் இந்த 10 நாட்களும் தங்கியிருக்க, சில கருங்கற்களை நிலத்தில் ஊன்றி, மண்ணினால் நன்கு மூடி, அந்த கல்லில் ஜீவனை ஆவாஹனம் செய்து, 10 நாட்கள் வரை தினஸரி எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) தந்து நித்யவிதி செய்ய வேண்டும்.

வாஸோதகம், திலோதகம்    நித்யவிதி

இறந்த உடனேயே கல் ஊன்றவேண்டும்; இது முடியாதபோது, 7-ஆம் நாளோ அல்ல்து 9-ஆம் நாளோ கல் ஊன்றலாம் (ஆனால் உத்தமம் இல்லை). கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும். பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். இது நித்யவிதி எனப்படுகிறது.

ஏகோத்தர வ்ருத்தி

முதல் நாளில் மூன்று எனத்தொடங்கி, அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போய் 10-ஆம் நாளில் 12 முறை இந்த வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். (இது ஏகோத்தர வ்ருத்தி எனப்படும்

ஆத்ய மாஸிகம்     ஏகோத்திஷ்டம்

பின்னர் ஆத்ய (முதல் மாத) மாஸிகம் என்னும் சிராத்தம் பண்ணவேண்டும். இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் (முன்னோர்களுடன் சேர்க்கை) கிடைக்காதபடியால், இறந்தவர் ப்ரேத ஸ்வரூபியாக வருவதாக ஐதீகம். ஒரு ஒத்தன் வந்து, தானே சிராத்த சமையலை செய்துகொண்டு அதை சாப்பிட்டுவிட்டு போய்விடுவான். இறந்தவர்க்கு இன்னும் பித்ருத்வம் கிடைக்காததால், இந்த ஆத்ய மாஸிக சிராத்தத்தை ஏகோத்திஷ்டம்” என்னும் முறைப்படி, அதாவது விச்வேதேவர் முதலிய தேவர்கள் இல்லாமல், இறந்தவரையே ஆவாஹனம் செய்து நடத்துவார்கள்

ஷோடஸம்

இறந்தவருக்கு முதல் வருஷத்தில் செய்ய வேண்டியது மொத்தம் 16 சிராத்தங்கள் - அவை :: ஸபிண்டீகரணம் பண்ணுவதற்கு முன் ஆத்ய, த்ரைபக்ஷிக, ஷாண்மாஸிக, அந்வாப்திக ஊனம் 4, அதிகமாஸ்யம்-1, மாஸ்யங்கள்-11 ஆக 16 ச்ராத்தம் ஏகோதிஷ்டமாகப் பண்ணிவிட்டு பின்னரே ஸபிண்டீகரணம் பண்ணவேண்டும் என்பது விதி. காலத்தாலும், நடைமுறையாலும் அது ஸாத்யமில்லை என்பதால் ஆகர்ஷண விதியைக்கொண்டு மேற்படி 16 மாஸ்யங்களை அன்னமாகவோ, ஆமமாகவோ பண்ணிவிட்டு 12ம் நாளே ஸபிண்டீகரணம் பண்ணலாம் என்ற விதிப்படி (சாஸ்திரப்படி) 16 பேருக்கு ஆமமாக அரிசி, வாழைக்காய் இத்யாதிகளுடன் தக்ஷிணை கொடுத்து தத்தம் செய்வது சோடசம் ஆகும்.

சோதகும்பம்

நேற்று (11-ஆம் நாள்) வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஜீவன், இன்று பித்ருத்வம் கிடைத்து, தனது பித்ருக்களுடன் சேர்வதாக ஐதீகம் - இதைத்தான் சபிண்டீகரணம் என சொல்வார்கள். இறந்தவரை நேரடியாக பித்ருவாக வரித்து முதன்முதலாகச் செய்யப்படும் ச்ராத்தம் ஸோதகும்பம். இது ஸாதாரணமாக ஸங்கல்ப விதானத்தில் செய்யப்படும். ஒரு பிராஹ்மணர் சாப்பிடுவார்.

 Rajappa
12-10-2013
5:00 PM
 

 

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...