Skip to main content

Posts

Vishaka Hari and Sri Venkatadri Mahatmiyam

ஸ்ரீமதி விஷாகா ஹரி உபன்யாஸம். ஸ்ரீ வெங்கடாத்ரி மஹாத்மியம். பேப்பர்களில் இந்த உபன்யாஸத்தைப் பற்றி அறிவிப்புகள் வந்தன. ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் மாலை 6-30 முதல் 8-30 வரை இருக்கும் என அறிவித்திருந்தனர். Most Mesmerising விஷாகா ஹரி என்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பது தெரிந்ததே; எனவே, அன்று மாலை 4-45க்கே 12-B பஸ் பிடித்து ஆஸ்திக சமாஜத்திற்கு 5-10க்கு போய்விட்டோம். 5-10க்கே 70% நிரம்பி விட்டது. வேதபாராயணம் முதலில் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஷாகாவின் உபன்யாஸம் அன்று நடைபெறவில்லை. கூட்டம் கலைந்து போய்விட்டது. மறுநாள் ( 7-6-2008, சனிக்கிழமை ) மாலை 4-30க்கே கிளம்பினோம். அர்விந்த் காரில் எங்களை கொண்டு விட்டான். 5-30க்கு முன்பாகவே ஹால் பிதுங்கி வழிந்தது - என்ன ஒரு கூட்டம் ! வேத பாராயணத்திற்கு பிறகு, சரியாக 6-30க்கு உபன்யாஸம் துவங்கியது. Trademark 9-கஜம் மடிசார் பட்டு புடவை, வாய் நிறைய மலர்ந்த சிரிப்பு, கணீர் குரல் - விஷாகா ஹரி ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மிய உபன்யாஸத்தை ஆரம்பித்தார். எள்ளு போட்டால் எள்ளு விழும் நிசப்தத்...

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் Sri Parthasarathy Perumal Koil

SRI PARTHASARATHY PERUMAL KOIL, TIRUVALLIKKENI ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி நேற்று (08-மே-2008) மாலை 5-15 மணி அளவில், நானும் விஜயாவும் சும்மா "நடை பயில" (walking) புறப்பட்டோம். திடீரென எனக்கு "கோயிலுக்குப் போகலாமே" எனத் தோன்றியது. உடனடியாக 21L பஸ் பிடித்து, கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். பஸ் வந்த வழியே திரும்பி நடந்து - அடுத்த முறை விவேகானந்தர் இல்லத்திலேயே இறங்கிக் கொள்ளவேண்டும் - சுங்குவார் தெருமுனையில் உள்ள " கீழக் கோபுர நுழைவாயிலின் " வழியாக நடக்க ஆரம்பித்தோம். 5 நிமிட நடைக்குப் பிறகு, கோயில் குளம் தென்பட்டது - குளத்தில் தண்ணீர் இருக்கிறது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாங்கள் நுழையும்போது மாலை 6 மணி. பிரம்மோத்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உத்சவ மூர்த்திக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். நிறையக் கூட்டம். Sri Parthasarathy Perumal கோயில் உள்ளே கூட்டம் இல்லை. பெருமாளுக்கு மிக அருகில் நின்று கொண்டு தரிசித்தோம். மனசுக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீவேதவல்லித் தாயாரையும் தரிசித்து, ஆண்டாள், யோக...

Srimad Bhagavad Gita Ch 6 Sloka 40

அத்தியாயம் 6 ஸ்லோகம் 40 ஸ்ரீ பகவானுவாச பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி பார்த்தா, இவ்வுலகில் எல்லாருக்கும் நன்மையே செய்பவன் எவனும் கேடு அடைவதில்லை. இம்மையிலும், மறுமையிலும் அவனுக்கு அழிவென்பதே இல்லை. நலம் செய்யும் யாருமே நலிவுறுதில்லை This sloka was discussed on 20 Feb 2008 by Sri Velukkudi Krishnan rajappa 1020 on 20-2-2008

துணையெழுத்து S. Ramakrishnan

துணையெழுத்து S. Ramakrishnan Thunaiezuththu திரு எஸ் ராமகிருஷ்ணனின் இன்னொரு அருமையான கட்டுரைத் தொகுப்பு. தான் சந்தித்த, பேசிய, பார்த்த மனிதர்களை, இடங்களைப் பற்றிய ஆசிரியரின் மன எண்ணங்கள். "வாழ்வின் கசப்பும், தித்திப்பும் நாக்கில் மறுமுறையும் தோன்றி மறைந்தது," என ஆசிரியர் குறிப்பிடுவது மிகவும் பொருந்துகிறது. சுமார் 30-35 கட்டுரைகள் உள்ளன - ஒவ்வொன்றும் ஒரு புதிய, வித்தியாசமான அனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருகிறது. நெஞ்சைத் தொடுகின்றன. மிகவும் அருமையாக உள்ளது. Ramakrishnan எழுதிய "தேசாந்திரி" Desandhiri இங்கே பார்க்கவும். ராஜப்பா 08-45 12-2-2008

ஸுந்தர காண்டம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளைப் பற்றி (Sri Velukkudi Krishnan)ஏற்கனவே எழுதியுள்ளேன், தினமும் அவர் சொல்லும் கீதை உபன்யாஸத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். ( இங்கே படிக்கவும்). ஸ்ரீ வேளுக்குடி அவர்கள் "ஸுந்தர காண்டம்" பற்றி ஒரு உபன்யாஸம் செய்துள்ளார். VCD (2) விலை ரூ. 150.00 DVD ரூ. 250.00. விசிடியை 2008 ஜனவரி 25-ஆம் தேதியன்று கிரியில் (Giri Traders, Mylapore) வாங்கினேன். நேற்று (8-2-2008) வெள்ளிக்கிழமை இதைக் கேட்டோம். இரண்டு விசிடிக்களும் சேர்த்து சுமார் இரண்டு மணி 30 நிமிஷங்கள் ஓடுகின்றன. வேளுக்குடியை (Velukkudi Krishnan) பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? அதே கம்பீர, கணீர் குரல், தங்கு தடையற்ற இனிய தமிழ் ஓட்டம், எல்லாருக்கும் புரியும்படியான எளிய சொற்கள். வால்மீகியும், கம்பரும், ஆழ்வார்களும் மிக சரளமாக வந்து போகிறார்கள். மிக அற்புதமாக உள்ளது. ஸுந்தர காண்டத்தை ஸ்ரீமதி விஷாகா ஹரி (Srimathy Vishakha Hari) யின் குரலில், இன்னிசையில் ஏற்கனவே கேட்டுள்ளோம். ( இங்கே ) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரையில், விஷாகா ஹரி இன்னிசைத் தேன். வேளுக்குடி ஸ்லோக மஹாச...

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் - பகவத் கீதை Sri Velukkudi krishnan

சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு சென்றிருந்தோம். அங்கு இரண்டு பெரிய போஸ்டர்களை பார்த்தோம், படித்தோம். யாரோ ஒரு "வேளுக்குடி கிருஷ்ணன்" (Sri Velukkudi Krishnan) என்பவர் தினமும் பொதிகை டிவியில் காலை 6-30 முதல், 6-45 வரை பகவத் கீதை (Bhagavad Gita) உபன்யாசம் செய்ய இருக்கிறார் எனப் படித்தோம். அப்போது இந்த ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. காலையில் எழுந்து ஒரு நாள் கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டோம். 2007, ஜனவரி 18, வியாழக்கிழமையும் வந்தது. 6-15க்கு எழுந்துகொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டோம்; 6-30 ஆயிற்று. வேளுக்குடி வந்தார். கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். என்ன ஒரு கம்பீரமான குரல்! தெளிவான நடை. இனிய, எளிய தமிழ் தங்குதடையின்றி நீரோட்டமாக ஓடி வருகிறது. மேற்கோள் காட்ட பலப்பல பாசுரங்கள், ஸ்லோகங்கள். மகுடி கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அது போன்று நானும், விஜயாவும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணனின் (Velukkudi Krishnan) பரம ரசிகர...

ஸுந்தர காண்டம் Vishakha Hari

"கண்டேன் ஸீதையை" ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸுந்தர காண்டம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மைப் பக்தியும் வாய்க்கப் பெற்றுள்ள ஹநுமானின் வீரச்செயல்கள் இக்காண்டத்துள் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளன். மொத்தம் 68 ஸர்க்கங்கள் கொண்டது. ஹநுமான் சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்கு போனதிலிருந்து ஆரம்பிக்கிறது. மஹேந்திர பர்வதத்திலிருந்து கிளம்பி, மைநாக பர்வதத்தை தாண்டி, அரக்கி ஸூரஸையின் வாயில் நுழைந்து புறப்பட்டது, அரக்கி ஸிம்ஹிகையை அழித்து லங்கை சென்றது - அங்கு ஸீதையைத் தேடியது, அசோக வனத்திற்கு சென்றது, அங்கு ஹநுமான் ஸீதையைக் கண்டது, ஸீதையின் கஷ்டத்தைப் பார்த்து துக்கம் கொண்டது, பின்பு ஹநுமான் ஸ்ரீராம காவியத்தை ஆரம்பத்திலிருந்து பாடியது, ஸ்ரீராமனுடைய கணையாழியை ஸீதையிடம் அளித்தது, ஸீதை தன்னுடைய சூடாமணியை ஸ்ரீராமருக்குக் கொடுத்தது, ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தது, நிறைய அரக்கர்களை அழித்துக் கொன்றது, ராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு உபதேசம் செய்தது, ஆஞ்சநேயரின் வாலில் அரக்கர்கள் தீ வைத்தது, அந்த தீயினிலாயே லங்கையை அழித்தது, பின்னர் ராமனிடம் திரும்பி வந்து ...