VINTAGE SONGS FROM TAMIL FILMS 25-04-2009 சனிக்கிழமை . காலையில் மயிலாப்பூர் டைம்ஸ் பார்த்ததுமே, முடிவெடுத்து விட்டோம் - சாயங்காலம் PS High School-க்கு போவோம் என. பழைய தமிழ் சினிமாப் பாடல்களை வீடியோவில் காண்பிக்க இருப்பதாக அந்த அறிவிப்பு சொன்னது. மாலை 6-10க்கு ஹாலுக்குப் போய்விட்டோம் - கூட்டம் அவ்வளவு இருக்காது என எண்ணிய எனக்கு, வியப்பு - 120க்கும் மேலாக வந்திருந்தனர். Dr சுதா சேஷய்யனுக்குக் கூட இவ்வளவு பேர் வரவில்லை, போன வாரம். 1940-50 களில் வந்த தமிழ் சினிமா பாடல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது - சிவகவி யில் (1943) MK தியாகராஜ பாகவதரின் வஸந்த ருது தான் முதல் பாட்டு. பின்னர் சகுந்தலை யில் GNBயும் MS-ம் சேர்ந்து பாடிய பாட்டு. MS எவ்வளவு இளமையாக காணப்படுகிறார்! ஜெமினியின் அபூர்வ சகோதரர்களி லிருந்து பானுமதி பாடிய “ ஆடுவோமே, கீதம் பாடுவோமே” அடுத்த பாட்டு. “ நீல வானும் நிலவும் போல ” -இது பொன்முடி பாட்டு. பின்பு இதயகீதம் பட பாட்டு. மந்திரிகுமாரி படத்தின் புகழ்பெற்ற “ உலவும் தென்றல் ஓடம் இதே ...” க்குபிறகு, வனசுந்தரி படப்பாட்டு. பாதாளபைரவி யின் “ காதலே தெய்வீக காதலே ” தொடர்ந்தது. “...