Skip to main content

Dr சுதா சேஷய்யன் - கம்ப ராமாயணம்

Dr Sudha Seshayyan and Kamba Ramayanam

சுதா சேஷய்யன் இன்று மாலை மயிலாப்பூர் PS High School-ல் ஸ்ரீராம அவதாரம் என்கிற தலைப்பில் உரையாற்றுவார்” என்ற செய்தியை நேற்று காலை (18-04-2009) மயிலாப்பூர் டைம்ஸில் பார்த்தவுடன், இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் போகவேண்டும் என விஜயாவும், நானும் தீர்மானித்துக் கொண்டோம்.

சுதா சேஷய்யன் அவர்கள் ஒரு தலைசிறந்த சொற்பொழிவாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கம்ப ராமாயணத்தை “கரைத்துக் குடித்து” அதில் “முழுகி எழுந்தவர் ". அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகள் மிக பிரசித்தம். தமிழில் நல்ல புலமை. (ஆங்கிலத்திலும்). அவரது சொல்லாற்றலும், தடையில்லா சொல் பெருக்கும் கேட்க கேட்க ஆனந்தமாயிருக்கும்.



மாலை 5-45க்கு ஹாலை சென்றடைந்தோம்; எனக்கு வியப்பும், நிறைய ஏமாற்றமும். 80-85 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒரு குட்டி ஹால்! இந்தச் சிறிய ஹாலிலா சுதா பேசப்போகிறார்?! “இருக்காது, தவறான இடத்திற்கு நாம் வந்துள்ளோம்” என நினைத்த போது, “இல்லை, சுதா சேஷய்யன் இங்குதான் பேச இருக்கிறார்” என்பது உறுதியாகியது.

வழக்கம்போல, அவர் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராம அவதாரத்தின் சீரிய பண்புகளை - தன்னை மட்டுமல்லாமல், தன்னையும் கூடியிருக்கிற மற்றவர்களையும் பண்பில் உயர்ந்தவர்களாக ஆக்கிய ஸ்ரீராமனை நம் கண் முன் கம்பனின் பார்வையில் காட்டினார்.

”பட்டாபிஷேகம் பரதனுக்குத்தான், உனக்கல்ல, நீ மரவுரி அணிந்து 14 வருஷங்கள் வனவாஸம் போகவேண்டும், அரசன் இயம்பினன்,” என்று கைகேயி கூற --- அரசன், அதாவது தசரத மஹாராஜாவின் உத்தரவு, எனச் சொன்னால்தான் ஸ்ரீராமன் கேட்பான் என எண்ணி, அரசன் இயம்பினன் என சொன்னாள். அந்த க்ஷணம் வரை இந்த சேதியை கேட்டிராத ஸ்ரீராமன் என்ன பதிலளித்தான் தெரியுமா? “அரசன் மட்டுமல்ல, என் தாயாகிய நீங்கள் சொன்னாலே நான் வனவாஸம் போவேன்” என்றான்.

“14 வருஷம் வனவாஸம்” என்றுதானே சொன்னோம், என்றையிலிருந்து என சொல்லவில்லையே, இந்த ஸ்ரீராமன் இரண்டு வருஷம், ஒரு வருஷம், 6 மாஸங்கள் என நாள் கடத்திவிடுவானோ என கைகேயி மயங்க, ஸ்ரீராமன் அடுத்த வார்த்தையிலேயே “ இன்றைக்கே!” என சொன்னார்.

’இன்றைக்கே’ என்றாலும், ’எப்போது என்று சொல்லவில்லையே, மாலையில்தான் போவானா, இல்லை பின்னிரவிலா’ என கைகேயி யோசிக்க, ஸ்ரீராமனின் அடுத்த வார்த்தை வருகிறது, ‘விடை கொடுங்கள், கிளம்பி விட்டேன்’. அடுத்த க்ஷணம் ஸீதையுடனும், லக்ஷ்மணனுடனும் காட்டிற்கு கிளம்புகிறான் ஸ்ரீராமன். என்ன உயர்ந்த பண்பு. 30 விநாடிகள் முன்புவரை மஹாராஜாவாக இருந்தவன் அப்போதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கவில்லை; இப்போது வனவாஸத்திற்கு கிளம்பும் போதும் முகத்தில் துக்கத்தின் அறிகுறி கூட இல்லை. ஸ்ரீராமனுக்கு மட்டுமல்ல, ஸீதைக்கும், லக்ஷ்மணனுக்கும் கூட !

இதுபோன்று பல காட்சிகளை சுதா சேஷய்யன் கம்பனின் காவியத்திலிருந்து விளக்கினார்.

சுதா சேஷய்யன் ஒரு MBBS, MS, Professor in Medical College, கம்ப ராமாயண சொற்பொழிவுகளை 30 வருஷங்களுக்கும் மேலாக இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உரையாற்றி வருகிறார்.

ராஜப்பா
19-04-2009 12:15 பகல்

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...