Skip to main content

தமிழ் சினிமா பழைய பாடல்கள்

VINTAGE SONGS FROM TAMIL FILMS


25-04-2009 சனிக்கிழமை. காலையில் மயிலாப்பூர் டைம்ஸ் பார்த்ததுமே, முடிவெடுத்து விட்டோம் - சாயங்காலம் PS High School-க்கு போவோம் என.

பழைய தமிழ் சினிமாப் பாடல்களை வீடியோவில் காண்பிக்க இருப்பதாக அந்த அறிவிப்பு சொன்னது. மாலை 6-10க்கு ஹாலுக்குப் போய்விட்டோம் - கூட்டம் அவ்வளவு இருக்காது என எண்ணிய எனக்கு, வியப்பு - 120க்கும் மேலாக வந்திருந்தனர். Dr சுதா சேஷய்யனுக்குக் கூட இவ்வளவு பேர் வரவில்லை, போன வாரம்.

1940-50 களில் வந்த தமிழ் சினிமா பாடல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது - சிவகவியில் (1943) MK தியாகராஜ பாகவதரின் வஸந்த ருதுதான் முதல் பாட்டு. பின்னர் சகுந்தலையில் GNBயும் MS-ம் சேர்ந்து பாடிய பாட்டு. MS எவ்வளவு இளமையாக காணப்படுகிறார்! ஜெமினியின் அபூர்வ சகோதரர்களிலிருந்து பானுமதி பாடிய “ஆடுவோமே, கீதம் பாடுவோமே” அடுத்த பாட்டு.

நீல வானும் நிலவும் போல” -இது பொன்முடி பாட்டு. பின்பு இதயகீதம் பட பாட்டு. மந்திரிகுமாரி படத்தின் புகழ்பெற்ற “ உலவும் தென்றல் ஓடம் இதே...” க்குபிறகு, வனசுந்தரி படப்பாட்டு. பாதாளபைரவியின் “காதலே தெய்வீக காதலே” தொடர்ந்தது.

வான் மீதிலே, இன்பத்தேன் மாரி பெய்யுதே..” சண்டிராணியின் hit song, பானுமதி பாடியது. அடுத்து “ஓ தேவதாஸ் .. ஓ பார்வதிதேவதாஸாக நாகேஸ்வர ராவும், பார்வதியாக சாவித்திரியும். பின்பு, ஜெயசிம்மன், எதிர்பாராதது, இல்லறஜோதிக்குப் பிறகு, சுகம் எங்கேயில் “செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து பாடித் திரியும் குயிலே” இனித்தது.

நான் செய்த பூஜா பலன்” - ஓ, what a hit song. குணசுந்தரியில் ஜெமினி கணேசனும், சாவித்திரியும் நடித்து பாடியது. கூட்டம் முழுதும் ரசித்து அனுபவித்தது. மகேஸ்வரி, கோமதியின் காதலனுக்குப் பின் “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா வா” குலேபகாவலியிலிருந்து.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - MGR படம் - “மாசில்லா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே --- பேசும் வார்த்தை உண்மைதானோ, பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமோ” - காலையிலிருந்தே நான் முணுமுணுத்துக் கொண்டிருந்த, எனக்கு மிகவும் பிடித்த பாடல் - எம்ஜியார், சாவித்திரி.

தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு .. “ இது அமரதீபம்; மஹாதேவி, மதுரை வீரனுக்குப் பிறகு, “ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே, ஆடிடுதே விளையாடிடுதே ..” ஜெமினி கணேசன், சாவித்திரி, கண்டசாலா - படம் மாயாபஜார். மறக்க முடியாத இனிமையான பாட்டு.

சதாரத்திற்க்கு பின், மனோகரா (சிங்காரப் பைங்கிளியே பேசு”).

சுமார் 30 பாடல்களுக்கு பிறகு, நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. இரண்டு மணி நேரம் இனிமையாக கழிந்தது.

நிறைய பாடல்களை ஒன்றாகப் பார்க்கும்போது, அந்த நாட்களில் தமிழ் சினிமாவில் தெலுங்கின் ஆதிக்கம் 95% க்கு மேல் இருந்ததை காண முடிந்தது. நிறையப் பாடல்களில் இரவு நேரங்களில் ஹீரோவும் ஹீரோயினும் படகில் போவதை பார்க்க முடிந்தது.

rajappa
26-04-2009 11.45am

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011