Skip to main content

மயிலாப்பூர் கோயில் தேர் மற்றும் 63வர் உத்ஸவம்

Mylapore temple Ther and 63var Uthsavam


06-04-2009 திங்கட்கிழமை அன்று காலை மயிலாப்பூர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விஜயாவும் நானும் 10-15க்கு சென்றபோது, தேர் வடக்குமாட வீதியில் இருப்பதாக அறிந்தோம். வடக்கு மாட வீதிக்குச் சென்று தேரில் உலா வந்த ஸ்வாமி, அம்மன், முருகன் ஆகியோரை தரிசித்தோம்.

கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய இடங்களில் சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, மோர் ஆகியவற்றை கொடுத்துக் கொண்டே இருந்தனர். வெயில் கொளுத்தியதால், தெருவில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே போனார்கள்; இந்த வருஷம் ஒரு தண்ணீர் லாரியை ஏற்பாடு செய்து அதிலிருந்து நீர் கொட்டுமாறு செய்திருந்தார்கள் - நல்ல யோசனை.

07-04-2009 செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலம். இதை பார்ப்பதற்கு லலிதாவும், குமாரும் ஆவடியிலிருந்து காலை 11-45க்கு வந்தனர். சாப்பிட்ட பிறகு 3-15க்கு அவர்கள் 2 பேர், நாங்கள் 2 பேர், சதீஷ் ஆகிய 5 பேரும் கோயிலுக்குப் புறப்பட்டோம். கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ராமகிருஷ்ண மடம் தெரு, தெற்கு மாட வீதி வழியாக கோயில் கோபுரம் போனோம். கீழ வீதிக்குச் சென்று ஸ்வாமி, அம்மன், முருகன் ஆகியோரைத் தரிசித்தோம்.

சரியான கும்பல். Stampede-ல் மாட்டிக்கொள்ள இருந்தேன்; தப்பித்தேன். திரும்ப கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டே, தெற்கு மாட வீதிக்கு வந்தோம். அங்கு நாயன்மார்களை தரிசித்துக் கொண்டோம். மீண்டும் Stampede! ஒரு வழியாக ஆதம் தெருவிற்குள் நுழைந்தோம், மூச்சு விட முடிந்தது.

இன்றைய விழாவிற்கு 2 லக்ஷத்திற்கும் அதிகமானோர் வந்ததாக போலீஸ் கூறுகிறது; இருக்கும் - என்ன கூட்டம்!!

சாலையர் தெரு RK Mutt Road-ஐ சந்திக்கும் இடத்திலிருந்து கீழ வீதி சன்னதி வரை நாங்கள் நடந்தோம் - பத்தடிக்கொன்றாக எவ்வளவு இடங்களில் அன்னதானம், இனிப்புகள், எவ்வளவு இடங்களில் மோர், ஜூஸ், ரோஸ் மில்க் - ஓ, என்னாலேயே நம்ப முடியவில்லை! குமாரும், லலிதாவும் பார்த்து அசந்து விட்டார்கள்.

ராமகிருஷ்ண மடம் வாசலில் டிரம், டிரம்மாக கெட்டி மோர்; நாங்கள் 5 பேரும் ஆளுக்கு 3 டம்ளர் மோர் குடித்தோம். அவ்வளவு வெயில். பின்னர் இன்னொரு இடத்தில் பிஞ்சு வெள்ளரி, VHP-யினர் வழங்கிய பானகம் சாப்பிட்டோம். ஆதம் தெரு முனையில் அப்போதுதான் வீட்டில் பண்ணி ஒரு பெரிய்ய்ய டிரம் நிறைய, முழங்கை வழிவார நெய், முந்திரி, திராட்சை அள்ளிக் கொட்டிய மணமணக்கும் ரவா கேசரி - இரண்டு பெண்கள் தொன்னை தொன்னையாக கொடுக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அங்கேயே சாப்பிட்டு விட்டு, 3 தொன்னை கேசரியை குழந்தைகளுக்கு டப்பாவில் போட்டு கொண்டுபோனோம்.

எல்லாரும் ஒருமுறை இந்த 63-வர் உத்ஸவத்தை கண்டு இன்புறவேண்டும்.

ராஜப்பா
08-04-2009
பகல் 1 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...