Skip to main content

சாணை பிடிக்கலையோ, சாணா .... knife sharpening

இந்தக் குரலை சமீபத்தில் எப்போது கேட்டீர்கள்? பல ஊர்களில் இது முற்றிலுமாக அழிந்துவிட்ட்து என்றே தோன்றுகிறது.

டெக்னாலஜியும் பணச் செழிப்பும் வளர்ந்துள்ள இந்நாட்களில், ”கத்திக்கு சாணை பிடிப்பது என்றால் என்ன,” என்று அதிசயப்படும் ஒரு  தலைமுறையே உள்ளது. இப்போதும், சாணை பிடிக்கும் தொழிலாளி தன் உபகரணங்களை தன் கையிலும் முதுகிலுமே தூக்கிக்கொண்டு, எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார். ஆண்டாண்டு காலமாக இந்த உபகரணங்களும் மாறவில்லை, தொழிலாளியும் மாறவில்லை. அதே உழைப்பு, அதே வறுமை.

சாணை பிடிக்கும் (கூர் தீட்டும்) வட்ட வடிவமான “சொரசொரப்பு” சக்கரம் (grinding stone), சக்கரத்தை இணைக்க ஒரு பெல்ட், கீழே ஒரு பெரிய சைக்கிள் சக்கரம், இந்த சக்கரத்தைச் சுற்ற ஒரு கால்மிதி (foot pedal). இவ்வளவுதான் உபகரணங்கள். கால்மிதியை அழுத்த அழுத்த, மேலே உள்ள சொரசொரப்பு சக்கரம் வேகமாக சுழல்கிறது. கத்தியின் ஒரு முனையை தன் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, கத்தியின் இரண்டு பக்கங்களையும் சுழலும் சக்கரத்தில் ஓட்டினால் நெருப்புப் பொறிகள் பறக்கும். பொறிகள் பறப்பதைப் பார்க்கவே சிறுவர்கள்-சிறுமிகள் கூடுவார்கள்.

ஒரு கத்திக்கு 20 ரூபாய். பெரிய கத்திகளுக்கும், அரிவாள்மணைக்கும் கூடுதல் பணம். இன்றைக்கும் சென்னை மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் இரண்டு, மூன்று சாணை பிடிப்பவர்கள் வருகிறார்கள். நாங்களும் அவர்கள் “பிழைக்க” வேண்டுமே என்று கத்திகளை கூர் தீட்டிக் கொள்கிறோம் தேவையில்லாவிட்டால் கூட.

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு?

ராஜப்பா
10:45 மணி 28-10-2009
inspired from an article in today's Indian Express

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011