Skip to main content

ஸ்ரீமத் பாகவதம் - 9-வது ஸ்கந்தம் - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

**
 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் நேற்று (08-02-2011) பாகவதத்தின் 8-வது ஸ்கந்தத்தை நிறைவு செய்தார். (29-12-2010 அன்று இந்த ஸ்கந்தத்தை ஆரம்பித்தார்.) 8-வது ஸ்கந்தத்தில் முக்கியமாக கஜேந்திர மோக்ஷமும், வாமன அவதாரமும், ஓங்கி உலகளந்த திரிவிக்ரமன் அவதாரமும் சொல்லப்படுகின்றன.

இன்று, புதன்கிழமை 09-02-2011; காலையில் 9-வது ஸ்கந்தம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.  இந்த ஸ்கந்தத்தில் முதலில் ஸூர்ய வம்ஸம் சொல்லப்படுகிறது. அதிதி தேவிக்கும் - காச்யபருக்கும் பிறந்தவர் விவஸ்வான் (ஸூர்யன்) இவரது புத்திரர் சிராத்ததேவர். இவரை வைவஸ்வதன் என்று அழைப்பார்கள் (வைவஸ்வத மநு) இவருடைய புத்திரர் இக்ஷ்வாகு.

ஞானகர்மஸந்யாஸ யோகத்தை அர்ஜுனனுக்கு விளக்கவந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இக்ஷ்வாகுவின் வம்ஸத்தை சொல்லுகிறார் :: (கீதை 4வது அத்தியாயம் முதல் 3 ஸ்லோகங்கள்)

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் |
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே அப்ரவீத் ||

(அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு பகர்ந்தேன். விவஸ்வான் மனுவிற்கு மொழிந்தான். மனு இக்ஷ்வாகுவிற்கு உரைத்தான்)

(இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகம் ... .... 2வது ஸ்லோகம்)

இக்ஷ்வாகுவின் வம்ஸத்தில் ஸத்யவ்ரதர் (த்ரிசங்கு), ஹரிச்சந்திரன், பகீரதன், தசரதன், பின்னர் ஸ்ரீராமபிரான் ஆகியோர் தோன்றினர்.

சிவனை நோக்கி கடுந்தபஸ் செய்த பகீரதனின் தவ பலனால் கங்கை பூமிக்கு கொண்டுவரப்பட்டாள் - கபில ரிஷியால் சாபமிடப்பட்ட தன் 60000 முன்னோர்களை பகீரதன் இந்த கங்கை ஜலத்தினால் உயிர்ப்பித்தான்.

அடுத்து, ஸ்ரீராம காதை சொல்லப்படுகிறது. சித்திரை மாஸம், புனர்வஸு நக்ஷத்திரம், நவமி திதியில் ஸ்ரீராமர் அவதரித்தார். ஸ்ரீராமபிரான்-ஸீதையின் வரலாறு ஒவ்வொரு குழந்தைக்கும் கூட தெரியும்.

ஸ்ரீ ஸீதை பிராட்டியின் முன்னோர் வம்ஸமும் சொல்லப்படுகிறது. ஸீதாவிற்கு அந்தப் பெயர் வந்த காரணமும், வைதேஹி, மைதிலி, ஜானகி என்ற பெயர்க் காரணங்களும் விளக்கப்படுகின்றன.

ஸ்ரீராம காவியத்திற்குப் பிறகு, சந்திர வம்ஸம் சொல்லப்படுகிறது. பிரஹ்மாவின் புத்திரர் அத்ரி; பின்னர் சந்திரன், புதன், புரூரவஸ் என வம்ஸம் போகிறது. பின்னர் ஸத்யவதி; அடுத்து விஸ்வாமித்திரர் => யயாதி =>> புரு என வம்சம் நீளுகிறது.

புருவின் வம்ஸத்தில் பரத மஹாராஜா =>> பின்னர், பாண்டவர்கள், கௌரவர்கள். =>> பின்னர் பரீக்ஷித்.

யயாதி வம்ஸத்தில் தோன்றியவர் ஸ்ருஷ்ணி =>> வஸுதேவர் =>> ஸ்ரீகண்ணன்.

இவ்வாறே 9-வது ஸ்கந்தத்தில் உக்ரஸேனர், தேவகீ, கம்ஸன், குந்தி, சிசுபாலன், பலராமர், ஸுபத்ரா, போன்றோரின் வம்ஸங்களும் சொல்லப்படுகின்றன.

பொறுத்திருந்து தினமும் கேட்போம் - ஸ்ரீராமன், கண்ணனின் அருளைப் பெறுவோம்.

(பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று 326-வது பகுதி ஒளிபரப்பாகியது.)

ராஜப்பா
09-02-2011
காலை 10 மணி

Comments

Shiva said…
You are my impression to watch the devotional speech. I was watch visaka hari's Prahlada vijayam (http://www.youtube.com/watch?v=U2CuYfgQM3I&feature=related) in you tube. Thanks for letting know these good things to next generation people.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011