Skip to main content

Karthik-Vasanth Upanayanam

2011 ஃபிப்ரவரி 13, ஞாயிறு காலை 0700 மணிக்கு சாவித்திரியின் பேரன்களும், பாலகிருஷ்ணனின் (ரமேஷ்) புத்திரர்களுமான கார்த்திக் (13), மற்றும் கோகுலகிருஷ்ணன் (வஸந்த்) (7) இருவருக்கும் உபநயனம் வெகு சிறப்பாக நடந்தேறியது. அண்ணாநகர் 8வது மெயின் ரோடில் ஒரு மண்டபத்தில் விழா நடந்தது. உற்றார், உறவினர், நண்பர்கள் என நிறைய பேர் வந்திருந்து சிறுவர்களை ஆசீர்வதித்தனர்.

இனி தொடக்கத்திலிருந்து ...

2010-ல் ஆகஸ்ட் 19ஆம் தேதி சாவித்திரி எனக்கு ஃபோன் பண்ணி முஹூர்த்தம் குறித்துத் தருமாறு கேட்டாள்; நானும் பல நாட்கள் வேலை செய்து, 6 முஹூர்த்த நாட்களை தேர்வு செய்து அவளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தெரிவித்தேன். இந்த 6 நாட்களிலிருந்து அவள் 13 ஃபிப்ரவரி 2011 ஞாயிறு என்ற முஹூர்த்தத்தை முடிவு செய்தாள். ஆக, 5 மாதங்களுக்கு முன்பாக உபநயன வேலைகள் தொடங்கின.

முதலில் ரமேஷ் அண்ணாநகரில் ஒரு மண்டபத்தை முடிவு செய்தான். அடுத்து, பெசண்ட்நகரில் ஸ்ரீநிவாஸன் என்ற கேடரரை முடிவு செய்து நவம்பர் 15-ஆம் தேதி அவருக்கு முன்பணம் கொடுத்தேன். சாவித்திரியும் ரமேஷும் தங்கள் வேலைகளை (பத்திரிகை அடித்தல், PURCHASES etc) துவங்கினார்கள். ஃபிப்ரவரியும் வந்தது.

08-02-2011:: கணேஷும் ஸ்ரீதேவியும் அமெரிக்காவிலிருந்து வந்தனர்; 10ஆம் தேதி இரவு சென்னை வந்தனர்.

11-02-2011 வெள்ளிக்கிழமை:: இன்று ஸமாராதனை பண்ணினாள். ரமேஷ் வீட்டிலேயே இது நடந்தது. சாவித்திரி குடும்பத்தை தவிர நாங்கள் இருவர், சுகவனம், ரமா (ஹைதராபாதிலிருந்து இன்று காலை வந்தாள்), ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டோம். சீர் பக்ஷணங்களை அங்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததால், நாங்கள் ரமேஷ் வீட்டிற்கு ”கால்-டாக்ஸியில்” சென்றோம். விஜயாவும், ரமாவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் படிக்க, விஜயவாணியும், ஸ்ரீதேவியும் பூஜை பண்ணினார்கள்.
ரமேஷ் வீட்டில் ஸமாராதனை
சாவித்திரியும், விஜயவாணியும் சமையல் செய்தனர். சாப்பாட்டிற்கு பிறகு 2 மணிக்கு நாங்கள் கிளம்பி, 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

12-02-2011 சனிக்கிழமை :: இன்று உதக சாந்தி மற்றும் நாந்தி. நானும் விஜயாவும் விடியலில் எழுந்து, பஸ் 47A பிடித்து காலை 8 மணிக்கு மண்டபத்திற்கு வந்தோம். சாவித்திரி குடும்பம், சுகவனம், ரமா, சதீஷ் ஆகியோர் அங்கு 5 நிமிஷங்கள் முன்னதாக வந்தனர். பின்னர், சரோஜா, அத்திம்பேர், மங்களம் வந்தனர். மாலை சுந்தரம் அண்ணாவும், அவர் மகன் பாஸ்கரனும் நெய்வேலியிலிருந்து வந்தனர்.
உதகசாந்தி, 12-02-2011

உதக சாந்தியும், நாந்தியும் சிறப்பாக நடந்தன. 9 சாஸ்திரிகள் வந்து நடத்திக் கொடுத்தனர். காலை டிஃபன், மதியம் / இரவு சாப்பாடு நன்றாக இருந்தன. மண்டபமும் வசதியாக இருந்தது. 9-10 அறைகள் இருந்தன. சௌகரியமாக தூங்கினோம்.

13-02-2011 ஞாயிறு :: இன்று ப்ரஹ்மோபதேஸ முஹூர்த்தம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து ரெடியானோம். 5-15 க்கு சாஸ்திரிகள் வந்து ஆரம்பித்தார். முதலில் குமார போஜனமும், பின்னர் உபநயனமும் நடந்தன. அடுத்து ப்ரஹ்மோபதேஸம். கார்த்திக்கிற்கு அவன் தகப்பனார் ரமேஷும், சின்னவன் வஸந்த்திற்கு அவன் சித்தப்பா கணேஷும் ப்ரஹ்மோபதேஸம் செய்தார்கள். அப்போது மணி சரியாக காலை 7-00.



குமார போஜனம்


சாவித்திரி குடும்பம் (7 பேர்), சரோஜா-அத்திம்பேர் (2), நாங்கள் (2), சுகவனம் (1), ஜெயராமன் குடும்பம் (4), மங்களம், சுதன் (2), ரமா, சதீஷ் (2), ரவி (தில்லியிலிருந்து ஃப்ளைட்டில் வந்தான்), ஸ்ருதி, அருண் குடும்பம் (4), அர்விந்த் குடும்பம் (3), சுதா (4), (மொத்தம் GRS Family 33 பேர்). லலிதா-குமார், சேலம் கோபு அண்ணா, சொர்ணம் அக்கா-அத்திம்பேர், சுகவனம், நெய்வேலியிலிருந்து சுந்தரம் அண்ணா, பாஸ்கர், காயத்ரியின் பெற்றோர் பாலசுப்ரமணியம், மாமி, கிருத்திகாவின் பெற்றோர் கணபதி சுப்ரமணியன், மாமி ஆகியோரும் வந்தனர். ஸ்ரீதேவியின் பெற்றோர் பெங்களூரிலிருந்து வந்தனர்.
ஹோசூர், கடலூர், திருச்சி, தொட்டியம் ஆகிய ஊர்களிலிருந்து பல பேர் வந்தனர். 130-க்கும் மேலாக காலை உணவிற்கு வந்தனர். நல்ல வருகை. காலை டிஃபனுக்கு பின்னர் நிறைய பேர் திரும்பிவிட்டனர். பகல் உணவிற்கு சுமார் 77 பேர்கள் சாப்பிட்டனர்.

ப்ரஹ்மோபதேஸம்

ஆக, விழா மிக மிக சிறப்பாக, GRANDஆக நடந்தேறியது. சாவித்திரியின் ஐந்து மாஸ உழைப்பும், ஸ்ரத்தையும், பங்களிப்பும் வீண் போகவில்லை. HATS OFF TO SAVITHRI. ரமேஷும், ரமாவும், சுகவனமும், கார்த்திக்கும், நன்கு உழைத்தனர், ஸ்ரீராமருக்கு அணில் செய்த உதவிபோல விஜயாவும், நானும் எங்களால் முடிந்ததை செய்தோம்.

வந்த உறவினர்களில் ஒரு பகுதி

மண்டபத்தை காலி செய்து, 2 மணிக்கு நாங்களும் 3-30க்கு சாவித்திரி, ரமா ஆகியோரும் கிளம்பினோம். 15-02-2011 செவ்வாய்க் கிழமை காலை சாவித்திரி, கணேஷ், ஸ்ரீதேவி ஆகியோர் காரில் ஹோசூர் / பெங்களூர் திரும்பினர்.

இவ்வாறாக, கார்த்திக்-வஸந்த உபநயனம் நடந்து முடிந்தது. எல்லாம் ஆண்டவன் அருள்.

ராஜப்பா
15-02-2011
காலை 10:00 மணி

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை ...