Skip to main content

Posts

ராஜாஜியின் ராமாயணம்

வால்மீகி, துளஸிதாஸர், கம்பர் ஆகியவர்களைத் தவிர வேறு நிறைய பேர் ராமாயணத்தை (ராம காதையை) எழுதியுள்ளார்கள். குறிப்பாக, தமிழில் “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய ராமாயணம் மிக பிரசித்தம். இந்த புஸ்தகம் இல்லாத வீடே அந்த கால கட்டத்தில் இருந்திருக்காது. “ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ... எல்லாரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும், பகவான் கருணையையும் பெறுவார்கள்” என்று 1967-ல் குறிப்பிட்ட ராஜாஜி மிக எளிமையான தமிழில் - சிறுவர்கள், சிறுமிகள் கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு - ராமாயணத்தை எழுதியுள்ளார். “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் 3-3-1956ல் முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழகம் முழுதும், CRAZE என்று சொல்வார்களே அது போன்று புஸ்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. ஒன்பது பதிப்புகள் வந்தன (வானதி பதிப்பகம்). சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. பல லக்ஷம் பிரதிகளுக்கு மேல் விற்ற இது, ராஜாஜியின் விருப்பத்தின் பேரில் பின்னர் தலைப்பு மாற்றப் பட்டு “ராமாயணம்” என்னும் புதிய தலைப்பில் ஜனவரி 1973ல் வெளிவந்தது. இதுவரை 33 பதிப்புகள் இந்த...

ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்

டாக்டர் சுதா சேஷய்யனைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்க) . இவர் ஒரு MBBS, MS. மருத்துவ யுனிவர்சிட்டியில் ஒரு புரொஃபஸர். இவரது ராமாயண சொற்பொழிவுகளை நீங்கள் கேட்கவேண்டும். கம்பனை “கரைத்துக் குடித்தவர்” - கொட்டும் நீர்வீழ்ச்சி, தெளிந்த நீரோடை எனத் தமிழில் இவர் பேசத் தொடங்கினால், மெய்மறந்து, ஊண் மறந்து, உறக்கம் மறந்து நாள் முழுதும் ராமச்சந்திர மூர்த்தியை “நேரில்” தரிஸித்து, அனுபவிக்கலாம். அவ்வளவு இனிமை, சுவை. சுதா சேஷய்யன் நேற்று (4-4-2010) துவங்கி 9 நாட்களுக்கு ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலில், “ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்” என்ற தலைப்பில் ராமாயணத்தின் இன்னொரு கோணத்தைப் பற்றி பேசுவார். விஜயாவும் நானும் நேற்று மாலை 6-30க்கு சென்றோம். ரசித்துக் கேட்டோம். ராஜப்பா 10:30 மணி 5-4-2010

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை

ஸ்ரீ ஸத்யநாராயணன் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இன்னொரு பெயர். இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்யும் முறைகளை ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. எப்போது செய்யலாம்? பௌர்ணமியன்று ஸாயங்காலம் இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பது உசிதம் என்கிறது ஸ்காந்த புராணம். பௌர்ணமியன்று செய்ய இயலாவிட்டால், அமாவாஸை, அஷ்டமி, த்வாதஸி திதிகளிலும், ஞாயிறு, திங்கள், வெள்ளிக் கிழமைகளிலும், ஸங்க்ராந்தி, தீபாவளி தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்யலாம். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என நிறைய பேர்களை பூஜைக்கு அழைத்து உபசாரம் பண்ண வேண்டும். தேவையான சில முக்கிய ஸாமான்கள். ஸ்ரீ ஸத்யநாராயணன் படம் தேவை. மூன்று கலஸங்கள் (அல்லது ஒரு குடம்) நவக்ரஹ பூஜைக்கு வேண்டிய வஸ்திரங்கள், தானியங்கள் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் புஷ்பங்கள் (நிறைய தேவைப்படும்) 9 கிண்ணங்கள். அரிசி மற்ற, வழக்கமான பூஜை ஸாமான்கள். நிவேதனம் சால்யன்னம் (வெள்ளை சாதம்) க்ருதகுல பாயஸம் (பருப்பு பாயஸம்) மாஷாபூபம் (உளுந்து வடை) குடாபூபம் (அப்பம்) லட்டுகம் (இட்லி) சுண்டல் மோதகம் வாழை, இலந்தை, நாவல், கொய்யாப் பழங்கள். ரவா கேஸரியும் செய்யல...

ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்  ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸத்தை (09-11-2009) ஆரம்பித்து, இன்று 100-வது நாள். விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்ணனின் கதையமுதத்தை பருக, பருக பக்திப் பரவசமும், ஆனந்தமும் கூடுகின்றன. எல்லாருக்கும் கண்ணனின் நல்லருள் கிடைக்கட்டும். ராஜப்பா 11:00 காலை 26-03-2010

Maiya's Restaurant

இன்று (4-3-2010) நான் Maiya's என்ற உணவகத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது பெங்களூரில், ஜயநகர் 4th Blockல் பஸ் ஸ்டாண்ட் அருகில், கணேஷ் கோயிலுக்கு எதிரில் உள்ள 5-மாடி உணவகம். பெங்களூரின் “உணவு ஆலயமான” MTR Restaurant-ஐ சேர்ந்தது. ஏப்ரல் 2009-ல் இது BTM Layout-லிருந்து இங்கு மாற்றப்பட்டது. புகழ்பெற்ற MTR-ன் “வாரிசு” என்பதால், பெங்களூர் வாசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு. விஜயா, நீரஜா, நீரஜாவின் அம்மா, அப்பா, அஷோக், மற்றும் நான் ஆறு பேர் நேற்றிரவு (மார்ச் 3) இங்கு உணவு உட்கொள்ள சென்றோம். ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கொஞ்சம் அசிரத்தையாகவே நான் நுழைந்தேன். 2-வது மாடியில் உணவுக் கூடம். நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அங்கு அமைதி நிலவியது. முதல் ப்ளஸ் பாயிண்ட். பணிவுடனும், புன்சிரிப்போடும் எங்களை கூட்டிப் போய் உட்கார வைத்தார்கள். ப்ளஸ் பாயிண்ட் 2. கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகாத குறைதான் !! தட்டு வந்ததும் வராததுமாக, ஒரு வெள்ளி டம்ள ரில் ( ஆமாம், வெள்ளி டம்ளர்! ) தேன் கலந்த appetizer கொடுத்தார்கள். (இது MTR வழக்கமாம்). மிக ருசியாக இருந்தது. பின்னர் அருமையான no...

சென்னை சங்கமம் - 2010

சென்ற 6 நாட்களாக சென்னையில் பல இடங்களில் நடந்துவந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நேற்றோடு (16-01-2010) நிறைவு பெற்றன. பெஸண்ட்நகர் எல்லியட்ஸ் பீச்சில் இந்த நிறைவு விழாவிற்காக காலையிலிருந்தே பிரம்மாண்டமான தடபுடலான ஏற்பாடுகள் துவங்கின. விஜயாவும் நானும் இரவு 8 மணிக்கு பீச்சிற்குச் சென்றோம்; நிறய கூட்டம். மேடையில் கிராமிய நடனங்கள் FOLK DANCES . பொதிகை டீவியில் வைத்தால் அந்த டீவி பக்கமே போகாதவர்கள், இங்கு மட்டும் எப்படி “ரசிக்கிறார்கள்”? என்று வியந்து போனேன். நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிய பின்னர், வாண வேடிக்கைகள் FIREWORK DISPLAY ஆரம்பித்தன. அடுத்த 10-12 நிமிஷங்களுக்கு வானமே வண்ணமயமானது; நன்றாக இருந்தது. 9-30 மணிக்கு முடிவுற்றது. வீடு திரும்பினோம். பீச் ரோட்டில் இருபது, முப்பது “சாப்பாட்டுக் கடைகள்” வைத்திருந்தனர். ஏராளமானோர் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரோடு முழுதும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டம்ளர்கள் என அசிங்கம். இன்று காலை 7 மணிக்கு walking போகும்போது பார்க்கிறேன் – அதே ரோடு எல்லா CUTOUTகளும் நீக்கப்பெற்று, சுத்தமாகக் காணப்பட்டது; இரவு முழுதும் வேலை செய்திரு...

கோயில்கள்

சென்ற ஒரு மாதமாக மார்கழியில் அருகிலுள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலுக்கும் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தற்போது, தை பிறந்து விட்டது (இன்று தை 2). காலை 7 ம்ணிக்குக் கிளம்பி, நடையாகவே ஆறுபடை முருகன் கோயிலுக்கு ச் சென்றேன். வீட்டிலிருந்து 25 நிமிஷங்கள் ஆகிறது. ஒரு வருஷத்திற்கும் மேலாக இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. Coastal Road வழியாகச் செல்லவேண்டும். ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன், பழனி ஆண்டவன், திருத்தணி முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர்ச்சோலை முருகன் ஆகிய ஆறு முருகப்பெருமான்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருப்பதால், இந்தக் கோயிலில் சாதாரணமாக கூட்டம் வராது. மாலை 5 ம்ணிக்கு நானும், விஜயாவும் நடையாகக் கிளம்பி, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு ச் சென்றோம்; 37 நிமிஷங்கள் ஆயிற்று. இன்று “மாட்டுப் பொங்கல்” – எனவே கோயிலில் உள்ள பசுக்களுக்கு விசேஷ பூஜைகள் பண்ணினார்கள். ஸ்வாமியையும், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனையும தரிஸித்துக் கொண்டு வீடு திரும்பினோம் (பஸ்ஸில்). காலையிலும், மால...