Skip to main content

Posts

கவரப்பட்டு கிராமம் - ஸீதா கல்யாணம்

கவரப்பட்டு என்னும் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் 6-7 கிமீ தூரத்தில் உள்ளது. இதுதான் எங்கள் “சொந்த ஊர்” எங்கள் அப்பாவின் இனிஷியலான G என்பது இந்த கிராமத்தைத்தான் குறிக்கிறது. இங்கு எங்கள் தாத்தா (ராமசேஷ ஐயர்) வசித்து வந்தார். (அவர் காலமானதும் இங்குதான்) அவருக்கு முன்பு அவரது தந்தை - எங்கள் கொள்ளுத்தாத்தா ஸ்ரீமான் நடராஜ ஐயரும் இந்த கிராமத்தில் தான் வசித்திருக்க வேண்டும். எங்கள் தாத்தா ஸ்ரீமான் ராமசேஷ ஐயர் எங்கள் தாத்தா ஒரு ராமர் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்தப் படத்தை அவர் பின்னால் ஊருக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஸ்ரீ ராம நவமியின் போது இந்தப் படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முதலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் வீடுகளில் நடைபெற்று வந்தது; பின்னர், கிராமத்து பக்தகோடிகள் பணம் திரட்டி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் ஸ்ரீராமரை வைத்து ராமநவமியை கொண்டாட ஆரம்பித்தனர். ராமர் மடம், கவரப்பட்டு 150 வருஷங்களாக இந்த ஸ்ரீராம நவமி உத்ஸவம் கவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2011) 151-வது உத்ஸவம். ஜனனோத்ஸவமாக ஸ்ரீராம நவமி திதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறத...

Gruha Pravesam - 17 April 2011 (Arun)

சென்னை அடையாரிலிருந்து 25 கிமீ தூரத்தில் OMR எனப்படும் பழைய மஹாபலிபுரம் ரோடில் (now, Rajiv Gandhi Salai) உள்ள படூர்   என்னும் இடத்தில், அருண் ஒரு 2 BHK Flat க்கு முன்பதிவு செய்தான். இதற்கான பதிவு (Registration) 19-11-2009 அன்று திருப்போரூர் என்னும் ஊரில் (படூரிலிருந்து மஹாபலிபுரம் நோக்கி இன்னும் 10 கிமீ தூரம்) sub-registrar அலுவலகத்தில் நடந்தது ( விவரங்கள் இங்கே ) வீடு கட்டி முடித்தபின் வீட்டிற்கான சாவி ஏப்ரல் 2011-ல் அருணிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே க்ருஹ ப்ரவேஸத்திற்கான முஹூர்த்தம் ஃபிப்ரவரி 16 என நிச்சயிக்கப்பட்டு இருந்தது; ஆனால், சாவி கிடைக்காததால், முஹூர்த்தம் ஏப்ரல் 17, 2011 (ஞாயிற்றுக்கிழமை) என மீண்டும் நிச்சயிக்கப்பட்டது. கிருஹப் ப்ரவேஸத்திற்கான வேலைகள் முழுமூச்சுடன் ஆரம்பிக்கப் பட்டன்; எல்லாரையும் ஃபோன் மூலமே அருண் - காயத்ரி அழைத்தனர். அருகிலுள்ள ஓரிருவரை மட்டும் நேரில் சென்று அழைத்தனர். சாஸ்திரிகள், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய உடைகள் வாங்கப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன, முஹூர்த்தமும் வந்தது. ஏப்ரல் 16 (சனிக்கிழமை) புது வீட்டிற்கு காயத்ரி சென்று வீட...

ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக ஸமாஜத்தில் இந்த 2011 மார்ச் 29-30-31 ஆகிய மூன்று தினங்கள் தினமும் மாலை 6-30க்கு உபன்யாஸங்கள் நிகழ்த்தினார். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு :: “ ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள்” வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்திற்கு நாரதர் வந்தார்; அவரிடம் ஒரு பதினாறு கல்யாண குணங்களைப் பட்டியலிட்டு, இந்த 16 குணங்களும் ஒருவனிடத்தில் ஒரே சமயத்தில் இருக்குமா, அப்படியென்றால் யார் அந்த மனிதன் என்று சொல்ல முடியுமா என வால்மீகி கேட்டார். ஒரே வார்த்தையில் “ஸ்ரீ ராமன்” என நாரதர் பதிலளித்தார். இந்த 16 குணங்களையும் வேளுக்குடி தனக்கே உரித்தான தெளிய தமிழில் சலசலத்து ஓடும்  காவிரியாக, பொங்கிப் பெருகும் கங்கையாக - வால்மீகியையும், கம்பரையும், ஆழ்வார்களையும் நம் கண் முன்னே நிறுத்தி விளக்கிச் சொன்னார். மிக அருமையாக இருந்தது. உபன்யாஸம் பண்ணிய 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ராஜப்பா 01-04-2011 காலை 1000 மணி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு) உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள். சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும். இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து...

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

பாகவதம் 10-வது ஸ்கந்தம் பாகவதத்தில் 9-வது ஸ்கந்தத்தின் “முன்னுரை”யை இங்கு படிக்கலாம். 9-வது ஸ்கந்தம் ஃபிப்ரவரி 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று (25-03-2011) காலை நிறைவு பெற்றது. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று காலையே 10-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். ஸ்ரீமத் பாகவதம் 9-வது ஸ்கந்தத்தில் ஸூர்ய வம்ஸமும், சந்திர வம்ஸமும் விளக்கிச் சொல்லப்பட்டன. அத்ரியின் வம்ஸத்தில் சந்திரன் => புதன் => புரூரவஸ் => ஸத்யவதி => விஸ்வாமித்திரர் => ஜமதக்னி => பரசுராமர் என நீள்கிறது. விஸ்வாமித்திரருக்கு யயாதி என்ற பேரன் பிறந்தார். யயாதிக்கு யது, புரு, அநு என 3 பிள்ளைகள். புருவின் வம்ஸத்தில் திருதராஷ்டிரன், பாண்டு பிறந்தனர்; இவர்களுக்கு கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்தனர். இவர்கள் வம்ஸம் மஹாபாரதத்தில் விரிவாக சொல்லப்படுகிறது. அநுவின் வம்ஸத்தில் அதிரதர் பிறந்தார்; இவர்தான் பின்னால் கர்ணனை வளர்த்த தேரோட்டி. யயாதியின் இன்னொரு மகனான யதுவிற்கு குகுரர், யஜமானர் என 2 பிள்ளைகள். குகுரருக்கு தேவகர், உக்ரஸேனர் பிள்ளைகள். தேவகருக்கு தேவகி என்ற பெண்; உக்ரஸேனருக்கு கம்ஸன் என்ற மகன். (த...

Mylapore Ther 16March2011

இது ஒரு Digital புகைப்பட blo g . மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது பங்குனி ப்ரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று புதன்கிழமை 16 மார்ச் 2011 தேர் உத்ஸவம் . காலை 9-45க்கு நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். அங்கு கண்ட சில காட்சிகளை காமிராவில் பதிந்து கொண்டேன். நீங்களும் பாருங்கள்: RK Math ரோடில் கடை விரிக்கிறார்கள் பக்கத்திலேயே மோர் தருகிறார்கள் (Ramakrishna Math at the back) ராமகிருஷ்ண மடத்திற்கு அருகில் மோர் உபசரிப்பு இது தெற்கு மாட வீதி -  மாவடு சீஸன் தெற்கு மாட வீதியில் விஜயா தாக சாந்தி கோயிலின் அருகில் ... காவல் அறிவிப்பு கோயில் சன்னதி தெருவில் கிரி ட்ரேடர்ஸ் ஸ்வாமி தேர் நிலைக்கே வந்து விட்டது. இன்று 7 மணிக்கே புறப்பாடு ஆகியது. இது கீழ வீதியில். ஸ்வாமி தேரின் இன்னொரு காக்ஷி அம்பாள் மற்றும் முருகன் தேர்கள். கிழக்கு வீதியில். ஸ்வாமி தேரின் பின்புற காக்ஷி கீழ வீதியில் அம்பாள் தேர் முருகன் தேர் கீழ வீதி கீழ வீதியில் கற்பகாம்பாள் மெஸ் எதிரில் தயிர் சாதம் உபசரிப்பு மீண்டும் தெற்கு மாட வீதி மாவடு கொட்டி குவி...

Gruha Pravesam - 06 March 2011 (Arvind)

அர்விந்த் - கிருத்திகாவின் புது வீட்டிற்கான கிருஹப் ப்ரவேஸம் நேற்று, 6 மார்ச் 2011 (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக நடந்தேறியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான முஹூர்த்தம் குறிக்கப்பட்ட பிறகு அர்விந்தும் கிருத்திகாவும் சுறுசுறுப்பாக பணிகளை ஆரம்பித்தனர். பத்திரிகை அச்சடிப்பது முதல், சாஸ்திரிகள் ஏற்பாடு, உணவு ஏற்பாடு, புத்தாடைகள் வாங்குவது, விருந்தினர்கள் அழைப்பு போன்ற வழக்கமான வேலைகளை முடித்து 6-ஆம் தேதிக்கு தயாராகினர். 4-ஆம் தேதி வெள்ளி காலை அஷோக்கும், நீரஜாவும் பங்களூரிலிருந்து வந்தனர். 5-ஆம் தேதி ஸ்ரீகாந்த் தில்லியிலிருந்து வந்தான். சதீஷும், ஸ்ருதியும் வந்தனர். 4-ஆம் தேதி இரவு முதலே வெளியிலிருந்துதான் சாப்பாடு. 5-ஆம் தேதி மாலை நீரஜாவும், கிருத்திகாவும் புது வீட்டிற்கு போய் கோலம் போட்டனர். அர்விந்த், கிருத்திகா, மற்றும் விஜயா விழாவிற்கு தேவைப்படும் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்தனர். 6-ஆம் தேதி - முஹூர்த்த நாள். காலை 4 மணிக்கே எழுந்து குளித்து, 5-30 மணிக்கு புது வீட்டிற்குப் புறப்பட்டோம். அருண் காயத்ரி, குழந்தைகள் 6-15க்கு அங்கு வந்தனர். கிருத்திகாவின் பெற்றோரும் 6-15...