நாங்கள் வாங்கும் காய்கறிகளை வரிசைப்படுத்தி நான் ஜூலை 2011-ல் ஒரு அட்டவணை போட்டு அலச ஆரம்பித்தேன். மொத்தம் 51 விதமான் காய்கறிகள் (கீரைகளையும் சேர்த்து) காய்களின் விவரம் -- முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, புதினா, பாலக், வெந்தயக்கீரை, கீரைத்தண்டு (8) தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம், சின்ன வெங்காயம், எலுமிச்சம்பழம், பூண்டு (7); கொத்தவரங்காய், புடலங்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர்,சின்ன உருளைக்கிழங்கு; கோவைக்காய்;(8) கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய், அவரைக்காய், முள்ளங்கி, பாகற்காய், நூல்கோல், மிதிபாகற்காய்; (8) முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, சௌசௌ, பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சுண்டைக்காய் (8) வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ; (3) சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு; (4) வெள்ளரிக்காய்,கொட்டைவகைகள், வேர்க்கடலை, சோளம், காராமணி (5) இவற்றில் எதை அதிக முறை வாங்கினோம் என அலசியதில், கீழ்க்கணட விவரங்கள் பதிந்தன:- ஜூலை 2011 _ல் அதிகம் வாங்கியவை. முள...