ஹோட்டலில் சாப்பாடு - Hotel Amavaravathy, TTK Road ரொம்ப நாளாகவே ஹோட்டலுக்குப் போக வேண்டும், முழு சாப்பாடு சாப்பிட வேண்டும் என ஆசையாக இருந்தது. சமீபத்தில், அக்டோபரில் கோயம்பத்தூரில், ஊட்டியில் சாப்பிட்டோம் என்றாலும், சென்னையில் சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை - அதுவும் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட ஆசை. டிச 27 (சனிக்கிழமை) காலை இந்த என் எண்ணத்தை சொன்னவுடன், அர்விந்த், விஜயா ஆகியோர் உடனே ஒத்துக் கொண்டனர். அஷோக்கும், நீரஜாவும் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருந்தார்கள். அவர்களும் வர சம்மதித்தனர். அவர்கள் அருண் வீட்டிலிருந்து, காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருண் காரில் வருவதாக சொன்னார்கள். 7 பேரும், 3 குழந்தைகளுமாக இரண்டு கார்களில், ஹோட்டல் அமராவதி க்குச் சென்றோம். ஆழ்வார்பேட்டை TTK வீதியில், ம்யூசிக் அகாடெமி அருகில் உள்ளது இது. ஆந்திரா சாப்பாட்டிற்கு இது புகழ்பெற்றது. ஆந்திரா பருப்பு சாதத்தில் ஆரம்பித்து, கீரை, சாம்பார், காரக்குழம்பு, ரசம், 2 வித பொரியல், பருப்புப் பொடி, அப்பளம், வடாம், தயிர், கோங்கூரா சட்டினி, ஆவக்காய் ஊறுகாய், ஜாங்கிரி, வாழைப்பழம், பீடா என சாப்பாடு ...