Skip to main content

Pancharathna Keerthanai Mahathmiyam - VISHAKHA HARI

பஞ்சரத்ன கீர்த்தனை மஹாத்மியம் - விஷாகா ஹரி

டிசம்பர் 25-ஆம் தேதி (2008) காலை 10 மணிக்கு மயிலாப்பூரில் விஷாகா ஹரியின் (VISHAKHA HARI) உபன்யாஸம். கூட்டம் வரும் என்பது தெரிந்த விஷயமாதலால், காலை 8-30க்கே அங்கு போய்விட்டோம். அப்போதே முதல் 20 வரிசைகள் நிரம்பிவிட்டன.

10 மணிக்கு உபன்யாஸம் ஆரம்பித்தது - தியாகராஜ ஸ்வாமிகளின் "பஞ்ச ரத்ன கீர்த்தனை மஹாத்மியம்" என்ற தலைப்பில். இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் ப்ற்றி யாவரும் அறிந்ததே. தியாகராஜ ஆராதனையில் ஆண்டுதோறும் பாடப்படுவது. மொத்தம் 5 கீர்த்தனைகள். ஒவ்வொரு கீர்த்தனையாகப் பாடி, அதன் மஹாத்மியத்தை விளக்கிக் கூறினார்.

முதல் கீர்த்தனை - "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என ஆரம்பிக்கும், ஸ்ரீராமரைக் குறித்த பாட்டு. ஸ்ரீராம சரித்திரத்தையே சுருக்கமாக விஷாகா ஹரி சொல்லி (பாடி) முடித்தார். ஸ்ரீராமனின் குணவிசேஷங்களை விவரிக்கும் கீர்த்தனை. மிக நன்றாக இருந்த்து.

2-வது - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல். "மானிட ஜன்மம் கிடைத்தற்கு அரியதென்று பரமானந்தம் அடையாமல், மதம், பொறாமை, காமம், கருமித்தனம், மோகம் முதலியவ்ற்றுக்கு அடிமையாகிப் போனேன். என்னைக் காப்பாற்ற எந்த அரசகுமாரன் வரப்போகிறான்?" ("வானவ தனு துர்லப மனுசு ...")

3-வது - "ஸாதிஞ்செனே ஓ மனஸா - போதிஞ்சின ஸன் மார்க்க வசனமுல பொங்கு ஜேஸிதா பட்டின பட்டு" என்பது. இதுவும் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்ளும் பாடல். "ஹரே ராமசந்த்ர ரகுகுலேச ம்ருது ஸுபாஷ, சேஷ சயன பரநாரீ ஸோத ராஜ விராஜ ... " என்று ஸ்ரீராமனின் குணங்களை உள்ளம் நெகிழ்ந்து தியாகராஜ ஸ்வாமிகள் பாடும் பக்தி பரவசமான பாடல். விஷாகா ஹரி எங்கள் யாவரையும் எங்கோ கொண்டு சென்று விட்டார்.

4-வது - "கன கன ருசிரா கனக வஸன நின்னு - தின தின முனு மனஸூன சனுவுன நின்னு" என்று ஆரம்பிப்பது. "அனுதினமும் என் மனதில் அன்பு பெருகி உன்னைக் காணக்காண ருசி அதிகரிக்கிறது". "தளதளமனு முககன கலிகின ஸீத குலுகுசுனோர கன்னுலனு சூஸே நின்னு" (தளதள வென்று முகப்பொலிவு படைத்த ஸீதை, ஒய்யாரத்துடன் தன் கடைக்கண்ணால் பார்க்கும் உன்னைக் காணக்காண ருசி பெருகிறது." பக்தியும், பரவசமும் பீறிடுகின்றன தியாகராஜரின் வார்த்தைகளில்.

5-வ்தும் கடைசியுமான கீர்த்தனை - "எந்தரோ மஹானுபாவு அந்தரிகி வந்தனமு" - (இந்த உலகில் எத்தனை மஹானுபாவர்கள் உளரோ அவர்கள் அனைவருக்கும் என் நமஸ்காரம்.")

உனது திருவுருவத்தையும், நாமத்தின் வைபவத்தையும், பராக்ரமத்தையும், தைரியத்தையும், , சாந்தம் குடிகொண்ட மனத்தையும், பொய்யாமொழியையும் சேவித்து, உன்னிடத்தில் பக்தி பெருகாமற் செய்யும் துர்மதங்களை அழிக்கும் உன் மனதை அறிந்து, அனவரதமும் உன் கல்யாண குணங்களை ஆனந்தமாக ஸங்கீர்த்தனம் செய்யும் "எந்தரோ மஹானுபாவு அந்தரிகி வந்தனமு" -

இத்துடன் 2 1/2 மணி நேர உபன்யாஸம் நிறைவு பெற்றது.ஸ்ரீராமனின் குண விசேஷங்களில், பக்தி மழையில் மண்டபத்தில் குழுமியிருந்த 2000 பேர்களும் நனைந்து, ஸ்ரீராமனையே நேரில் தரிசனம் செய்தாற்போன்று ஒரு ஆனந்த அனுபவத்தில் வீடு திரும்பினோம். Thank you Smt Vishakha Hari.

rajappa
26-12-2008 6PM

Comments

Srini said…
என்ன ஒரு வர்ணனை ! விசாகா ஹரி, ராமபிரான், தியாகராஜர் அனைவரையும் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். படிக்கும் போதே பரவசமாக உள்ளது.

உங்களை போல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளது.

போட்டி போட இல்லை - என் திறமையை வளர்த்துக்கொள்ள தான்.

ராமபிரான் அருள் வேண்டி வணங்குகிறேன்

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011