Skip to main content

Posts

Showing posts from 2007

ஸீதா கல்யாண வைபோகமே - Vishakha Hari

"ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே " - இந்த பாடலுடன் விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) "சீதா கல்யாணம்" உபன்யாசம் நிறைவடைகிறது. இரண்டு VCDக்கள்.சுமார் 3 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டோம். We both were transported to another world, a pristine and sublime world. வால்மீகியும், துளசிதாஸரும், கம்பரும், அருணாச்சல கவிராயரும் ("யாரோ, இவர் யாரோ") மிக முக்கியமாக தியாகராஜரும் விஷாகாவின் இந்த உபன்யாசத்தில் தவழ்ந்து வருகிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகள் தேனாக ஒலிக்கின்றன. என்னை விட விஜயா மிகவும் அனுபவித்தாள். பல கீர்த்தனைகளை கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். அயோத்யாவிற்கு மகரிஷி விஸ்வாமித்திரர் வருவதில் ஆரம்பித்து, அவர் ஸ்ரீராமரை அசுர வதத்திற்கு (யக்ஞத்தை காப்பதற்கு) அழைத்துச் செல்வது, பின்னர் மிதிலாபுரிக்கு செல்வது, இடையில் அகல்யைக்கு சாப விமோசனம் தருவது, மிதிலையில் சிவ தனுஷை முறிப்பது, ஸீதா கல்யாணம் --- என உபன்யாசம் செல்கிறது. கேட்ட கதைதான், ஆனாலும் அந்த அனுபவம் சொல்லி விளக...

மீண்டும் மயிலாப்பூர் Mylapore

இதுக்கு முன்னாலேயே சொல்லிட்டேன் - மயிலாப்பூரை, கோயில் மாடவீதிகளை, கிரி டிரேடிங்ஸ் (Giri Tradings), பத்தி திரும்ப திரும்ப எழுத, எனக்கு அலுக்காது, எப்பவும் சலிக்காதுன்னு. நேற்று (30 டிசம்பர் 2007) மாலையும் சென்றேன் (விஜயாவுடன்). வாசுவிற்கு ஒரு சில சாமான்கள் தேவைப்பட்டதால் அவற்றை வாங்கலாம் எனப் போனோம். நேற்று என்ன விசேஷம்னு தெரியலே, வெள்ளீஸ்வரர் கோயிலிலே ஒரே கூட்டம். வழக்கமான மார்கழி மாச கூட்டம்தானோ? அங்கிருந்து இடது பக்கம் திரும்பி, ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாகப் போனோம். ரெண்டு மாசங்களுக்கு முன்பு இடியால் சேதமுற்ற கோபுரத்தை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது - கோபுரத்தை தென்னங்கீற்றுகளால் மூடியிருந்தார்கள். கோயிலின் உள்ளே போகவில்லை - போலாமா, கூடாதா எனக் குழப்பம். "கோபுர தரிசனம், கோடி பாப விமோசனம்" என அமைதிப்படுத்திக் கொண்டு, கிரி கடையில் நுழைந்தோம். இந்தக் கடையில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஆனந்தம், பரவசம்தான். 2-ம் மாடியில் பாட்டு CDக்களை கேட்க, வாங்க ஒரே கூட்டம். ஸ்ரீமதி விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) உபன்யாச CD / DVDக்களான "சுந்தர காண்டம்" மற்றும் ...

வியப்பும் - திகைப்பும்

முதலில், வியப்பு . இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கறிகாய் கடையில், ஒரு இளைஞன் (25-28 வயசு) கடைக்காரரை கேட்டான் - " புதினா என்ன விலைங்க?" கடைக்காரரின் பதில்: "தம்பி, நீ கையிலே வெச்சிருக்கிறது கொத்தமல்லி - புதினா இல்லே" கொத்தமல்லிக்கும் புதினாவிற்கும் வித்தியாசம் தெரியாதா, ஒரு 26 வயசு இளைஞனுக்கு!!?? எனக்கு ஒரே வியப்பு. அடுத்து, திகைப்பு . இன்று (24 டிச 2007) காலை நான் ஒரு மளிகைக் கடைக்குச் சென்று, கொத்துக்கடலை வேண்டுமென்று கேட்டேன். கடைக்கார ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை - முழித்தான். " என்ன சார் வேணும் ?" திரும்பவும் கேட்டான். " கொத்துக்கடலை " - இது நான், அழுத்தமாக. மீண்டும் அதே முழிப்பு. என்ன சொல்லிக் கேட்பது என்றே எனக்குப் புரியவில்லை - அடிச்சி விட்டேன் "சன்னா" வென்று. தமிழ்நாட்டில் ஹிந்தியா? கடைக்கார ஆளின் முகத்தில் 500W பல்பு எரிந்தது. " ஓ, சன்னாவா, அப்படி சொல்லுங்க " என்று 250 கி "கொத்துக்கடலை"யை கொடுத்தான். ஹிந்தி எதிர்ப்பு 1965-ல் நடந்ததாமே, அப்படியா? எனக்கு ஒரே திகைப்பு. ராஜப்பா 12:...

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் உரித்த சின்ன வெங்காயம் - 10 - 12 கறிவேப்பிலை - கொஞ்சம் உரித்த பூண்டு - 10 - 12 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 1/2 டீஸ்பூன் சிகப்பு மிளகாய் - 7 எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன்; தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை 1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும். 2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். 3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். 4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும். 5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும். 6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும். 7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும். 8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும். சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செ...

மாதங்களில் மார்கழி - 2007

மாதங்களில் நான் மார்கழி - என்றான் கண்ணன். மார்கழி பிறந்தாலே நினைவுக்கு வருவது திருப்பாவை - திருவெம்பாவை தான். (மூடநெய் பெய்து முழங்கை வழிவார - என்று சுடச்சுட வெண்பொங்கலும் கூட!!!!) 2007 ஜனவரி துவங்கி இதுநாள் வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் "பகவத் கீதை" உபன்யாஸத்தை நானும் விஜயாவும் தவறாமல் கேட்டு வருகிறோம். ஸ்ரீ உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக நேர்த்தியாக உபன்யாஸம் செய்கிறார். தெளிவான ஆற்று நீர் ஓட்டம்போல, தங்கு தடையற்ற இனிய தமிழ். பொதிகையில் காலை 6-30 முதல் 6-45 வரை ஒளிபரப்பாகிறது. மார்கழி 1- ஆம் தேதி முதல், திருப்பாவை - திருவெம்பாவையும் ஒளிபரப்பு ஆகிறது, காலை 6 மணிக்கே. எனவே, நான் காலை 5-15க்கே எழுந்து, குளித்து (!!), 5-45க்கு திருப்பாவை படிக்க ஆரம்பித்து விடுகிறேன். விடியலுக்குமுன் குளிப்பதே பரம ஆனந்தம். கீதை உபன்யாஸத்தைக் கேட்டு முடித்த பிறகே மற்ற வேலைகள் ஆரம்பம். சுடச்சுட வெண்பொங்கல் (தொன்னையில்) ?? அது இன்னும் கனவாகவே உள்ளது. ராஜப்பா 12-00 19-12-2007 Velukkudi Krishnan, Bhagavad Gita

சௌ. கிரிஜா

கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம ஐயர் - நாகலக்ஷ்மி தம்பதியர்க்கு, 5-வது மகளாக கிரிஜா சென்னையில் பிறந்தாள். கிரிஜாவிற்கு சபீதா, சாவித்திரி, ரமணா, பாபு என்று 4 அக்காக்கள் உண்டு. கிரிஜாவின் தகப்பனார் நரசிம்ம ஐயர் ஒரு businessman ஆக இருந்தார். கிரிஜா மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்துவிட்டாள். தாய்க்கு. பின்னர், கிரிஜாவை வளர்த்து, பெரியவளாக்கி, திருமணம் செய்து ஒரு மனுஷியாக்கிய பெருங்கடமையை அவளது அக்காக்கள், குறிப்பாக ரமணா மற்றும் பாபுவே செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை "கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி"யில் தனது பள்ளிப்படிப்பை முடித்த கிரிஜா Queen Mary's College-ல் PUC படித்தாள். Mint-ல் உள்ள Govt Arts College-ல் 1975-ம் வருஷம் BA டிகிரி வாங்கினாள். படித்த கையோடு, ஒரு தனியார் அலுவலகத்தில் ஸ்டெனோவாக ஆறு மாதங்கள் வேலை செய்தாள். 1975-ம் வருஷம் டிசம்பர் 12 ஆம் தேதியன்று, கிரிஜாவிற்கும், நமது சுகவனத்திற்கும் திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது திருமண வாழ்க்கை சென்னை திருவல்லிக்கேணியில் துவங்கியது. மகிழ்ச்சியின் அடையாளங்களாக முதலில் 1976 அக்டோபரில் சுதாவும், ...

மாகாளிக் கிழங்கு

அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் கிழங்கின் மருத்துவக் குணங்கள் தெரிய வந்தன. "The root of Sariva is used in the form of powder and infusion to treat wound, bronchial asthma, fever, intrinsic haemorrhage, kushtha, erysipelas, poisoning, paediatric rejuvinative/rasayana and during pregnancy." மருந்தோ, இல்லையோ, மாகாளிக் கிழங்கு என்னும் போதிலே, ஊறுகாய் என்றுதான் எதிரொலிக்கிறது, சரிதானே? கிழங்கை வாங்கிவந்து, தண்ணீரில் சுமார் 10-12 மணி நேரம் போட்டுவைத்து, பின்னர் தோல் சீவி, குறுக்காக வெட்டி, "நரம்பு" என சொல்லப்படும் பகுதியை நீக்கிவிட்டு (இதுதான் மிகவும் கடினமான வேலை), கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, எலுமிச்சம்பழ சாறு, மிளகாய்ப் பொடி, கடுகுப்பொடி, தயிர் சேர்த்து கலந்து வைக்கவேண்டும். ஒரு வாரம் (7-8 தினங்கள்) ஊற வேண்டும். ஊறிய பின்னர் மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தயார். எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய். ராஜப்பா 18:35 --- 21 நவம்பர் 2007 Magaali Kizhangu பி.கு:: நேற்று (2...

பல்லாவரத்தில் நான்

சென்ற நவ 16 வெள்ளிக்கிழமை (அதாவது நேற்று) நான் பல்லாவரம் சென்றேன். சென்னை மாநகரில் ஒரு புறப் பகுதியான இது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சியாகும். இங்கு சுபாவும், மகேஷும் ஒரு FLAT வாங்கி, அதற்கான கிருஹப்பிரவேசம் செய்தனர். நானும் விஜயாவும் திருவான்மியூருக்கு அருண் வீட்டிற்கு முதல்நாள் (15th) இரவே வந்து விட்டோம். காலையில் 4-45 க்கு எழுந்து, குளித்து, ஸௌம்யாவை எழுப்பி, நாலு பேரும் அருணுடைய புதிய காரில் புறப்படும்போது மணி 6-15. பல்லாவரம் கிராமத்தை (ஆமாம், கிராமம்தான்) அடைந்த போது 6-45 இருக்கும். ஊரில் நுழைந்த பின்னர்தான் ஆரம்பித்தது தலைவலி. வீட்டுக்கு செல்லும் சரியான வ்ழியே தெரியவில்லை. ஒருவிதமாக ஊரை சுற்றி சுற்றி வந்தபின், வீடு தென்பட்டது - அப்பாடா! (எல்லாருமே இந்த கஷ்டத்தை அனுபவித்தனர் !) வீடு நன்றாக இருக்கிறது. மின்வசதி, தண்ணீர் வசதி இன்னும் வரவில்லை. கிருஹப் பிரவேச விழா மிக நல்ல முறையில் நடந்தது. (சந்திரன் சாஸ்திரிகள் இல்லை). நிறைய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர். நாங்கள், அருண், காயத்ரி, ஸௌம்யா, கிருத்திகா, அதிதி. கிருத்திகாவின் அப்பா, அம்மா, சரோஜா, அத்திம்பேர், சத்ய...

ஸௌம்யாவும் அரசலாறும்

விஷ்ணுபுரம் - இந்த சிறு கிராமம் கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. அங்கு ஒரு பழைய அக்ரஹாரம் - நெறய ஓட்டு வீடுகள். திண்ணை, தாழ்வாரம், ரேழி, கூடம், முற்றம் என நம்முடைய பாபுராவ் தெரு வீட்டை நினைவுக்கு கொண்டு வரும் வீடுகள். வீட்டிற்குப் பின்னாலேயே, வீட்டைத் தொட்டுக்கொண்டு சலசலவென ஓடும் அரசலாறு. (கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் அதே அரசலாறு. கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால், வந்தியத்தேவனும், குந்தவையும் வந்து விடுவார்கள் ) மண் ரோடுதான்; ஆனாலும் சுத்தமான ஆற்று மணல். ஸௌம்யா வெறுங்காலுடன் மணலில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டே இருந்தாள். வீட்டிற்குள்ளே வர மறுத்து விட்டாள். மிக அருகில் ஆடு பார்த்து, அவள் வியப்பும், சந்தோஷமும் அடைந்தாள். தகதகவென ஓடி வரும் அரசலாற்று நீரின் மிகையைக் கண்டு, அவள் " பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும், புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள் ," என பாரதி வர்ணித்தானே, அந்த அழகுத்தெய்வத்தைப் போல காட்சி தந்தாள். ஆற்றில் உடனே குளிக்க வேண்டுமாம் - " தாத்தா, தண்ணி --- ஜோ ஜோ" எ...

வியப்பாக உள்ளது

சென்ற மாசம் நான் விமானத்தில் மும்பை சென்றேன். 38 வருஷங்களுக்குப் பிறகு இப்போதுதான் விமானத்தில் ஏறினேன். விமானம் எப்படி எழும்புகிறது? மேலே மேலே உயரத்திற்கு எப்படி போகிறது? அவ்வளவு உயரம் (35000 அடி) போனாலும் கீழே விழாமல் அந்தரத்தில் எப்படி இருக்கிறது? சென்னையிலிருந்து மும்பைக்கு எப்படி வழி? பைலட்டுக்கு எப்படி வழி தெரியும்? மும்பை நெருங்கியதும் (நெருங்கி விட்டோம் என்பது எப்படி தெரியும்?), எந்த இடத்திலிருந்து கீழே இறங்க வேண்டும், எந்த ரேட்டில் இறங்க வேண்டும், என்பதெல்லாம் எப்படி தெரியும்? மும்பை ஏர்போர்ட்டில் எப்படி மிக சரியாக விமானம் இறங்குகிறது? ஒரே வியப்பு ! ராஜப்பா 10:45 4 அக்டோபர் 2007

அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம்

அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம் அஷோக் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு கிருஹப் பிரவேசம் செய்தான். 80% முடிந்த நிலையில், 2007 ஆகஸ்ட் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது. நானும் விஜயாவும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூர் போனோம். அருண், அர்விந்த் ஆகியோர் 30ஆம் தேதி விடியற்காலை வந்தனர். காயத்ரியின் அப்பா, அம்மாவும் வந்தனர். அன்று காலை 11 மணிக்கு சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள். இரவு சுகவனமும் கிரிஜாவும் வந்தனர். எல்லாருக்கும் சாப்பாடு "ஐயங்கார்” கடையிலிருந்து தருவித்தோம். அஷோக் மற்றும் நீரஜா இருவரும் நாலு, ஐந்து மாசங்களாகவே அலுக்காமல் சலிக்காமல் புது வீட்டிற்கென ஓடி ஓடி வேலை செய்தனர். கடைசி 7 நாட்களில் தினம் தினம் 5,6 முறையாவது புது வீட்டிற்குச் சென்று வேலை பண்ணினார்கள். அவர்களது அயராத உழைப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி கண்கூடாகத் தெரிந்தது. 30 ஆம் தேதி ஏழு எட்டு தடவையாவது அஷோக் தன்னுடைய புது வீட்டிற்குச் சென்று GAS போன்ற சாமான்களை வைத்து விட்டு வந்தான். அஷோக், நீரஜா இருவரது முகங்களிலும் ஒருவித TENSION காணப்பட்டது. 31 ஆம் தேதியும் விடிந்தது - காலை 2-30க்கே எழுந்து நாங்கள் 4 பேரும...

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. இன்று ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை - ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. எல்லார் வீடுகளிலும் நடந்தது போலவே எங்கள் வீட்டிலும் பூஜை சிறப்பாக நடந்தது. நேற்று மாலை மயிலாப்பூர் (வேறு எங்கு, தெற்கு மாட வீதிக்குத்தான் !) சென்று பழங்கள், புஷ்பங்கள் (விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள் - தாழம்பூ 50 ரூ !!) வாங்கி வந்தோம். அம்மனை அலங்கரித்து மற்ற ஏற்பாடுகளையும் விஜயா , காயத்ரி இருவரும் செய்தனர். அவர்களுக்கு கூடமாட ஒத்தாசையாக இரண்டு குட்டிகளும் இருந்தார்கள் (ஒத்தாசையாக .. ??) இன்று விடியற்காலை சீக்கிரமே எழுந்து, ஸ்நானம் முடித்து, பூஜைக்கான ஏற்பாடுகள், இட்லி வடை, பாயசம், இரண்டு வித கொழுக்கட்டைகள் இன்ன பிற செய்து, பூஜையை ஆரம்பிக்கும் போது மணி 9-30. நான் மந்திரம் சொல்ல, விஜயாவும் காயத்ரியும் பூஜை செய்தனர். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து பூஜை முடியும்போது 10-45 ஆகி விட்டது. வீட்டிலே பூ, பழம், போன்று நெறய்ய சாமான்கள் இருந்தது, ரெண்டு குட்டிகளுக்கும் ஒரே குஷி. எல்லாவற்றையும் வாரி கொட்டி, சந்தன கிண்ணத்தில் குங்குமத்தை கொட்டி, ஆப்பிள்களை DUKES பந்துகளாக நினைத்து பௌன்சர்கள் போட்டு...

ஒரு மொபைல் ஃபோனின் கதை.

ஒரு மொபைல் ஃபோனின் கதை. நேற்று எங்கள் வீட்டில் ஒரு மொபைல் ஃபோன் "தொலைந்து" போய் விட்டது.. கைமறதியாக எங்கேயோ வைத்து விட்டொம் - எங்கு வைத்தோம் என்பது தெரியவில்லை. ஃபோனில் சார்ஜ் இல்லாததால், ரிங் போட்டு இடத்தை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. கடைசியாக ஃபோன் யார் கையில் இருந்தது என்று யோசித்ததில், குழந்தை அதிதி வைத்திருந்தாள் என்பது ஞாபகம் வந்தது. ஆரம்பித்தது வீட்டையே புரட்டிப் போட்டு தேடும் படலம். கட்டில்களின் கீழே, கதவுகளின் பின்னால், துணி மூட்டைக்குள் - என்று வீட்டின் எல்லா இடங்களையும் அலசினோம். ஆறு மாதங்களாக் தேடிக் கொண்டிருந்த பல பொருட்கள், அதிதியின் பல விளையாட்டு சாமான்கள், இன்னும் பலப்பல "எப்போதோ தொலைந்து போன" சாமான்கள் புதையலாக கிடைத்தனவே ஒழிய, போன் கிடைத்தபாடில்லை. கறிகாய், பழம் வைக்கும் கூடை, ஃப்ரிஜ்ஜின் உள்ளே, மர பீரோ, ஸ்டீல் பீரோ, டேபிள் டிராயர்கள், சமையல் பாத்திரங்கள் - லிஸ்ட் நீண்டு கொண்டு போனதே தவிர, போன் ?? அதிதியின் விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் இன்ன பிற சாமான்களை வைப்பதற்கு எங்கள் வீட்டில் நாலு அட்டைப்பெட்டிகள், கூடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ரொம்பி வழியும...

மயிலாப்பூரில் தமி்ழ்ப்புத்தாண்டு

தமி்ழ் வருஷப்பிறப்பு - 14 4 2007 அன்று காலை 10 40 மணிக்கு. ஸர்வஜித் என்னும் பெயர்கொண்ட இந்த வருஷத்தில் பெயருக்கு தகுந்தாற்போல், அனைவருக்கும் அனைத்திலும் வெற்றி கிட்டும்.எல்லாருக்கும் என்னுடைய வருஷப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். பண்டிகை என்றாலே மயிலாப்பூர் களை கட்டிவிடும் - எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத ஒரு இடம் மயிலாப்பூர் தெற்கு மாட வீதி. இன்றும் அப்படித்தான் :- வெ. அக்ரஹாரம் + ராமகிருஷ்ண மடம் சாலை முனையிலிருந்தே தெற்கு மாட வீதி களைகட்டி விட்டது. மல்லிகை, முல்லை, தாமரை, சாமந்தி என குவியல் குவியலாக பூக்களைக் குவித்திருந்தனர்.பழங்களைப் பற்றி எழுதவே தேவையில்லை - வண்டி வண்டியாக பழங்கள். மலை மலையாக தேங்காய்கள் !சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அத்தனை வேப்ப மரங்களையும் "மொட்டை அடித்து" விட்டார்களோ என வியக்கும் வண்ணம் வேப்பம்பூவான வேப்பம்பூ !! மாவிலை கொத்துக்கள். தோரணங்கள். பச்சடிக்கு ஆயிரக்கணக்கான மாங்காய்கள். பூஜைக்கு வேண்டிய கல்பூரம், சாம்பிராணி, ஊதுவத்திகள் என தெருவே ஒரு பக்தி மணத்துடன் வாசம் வீசியது. மக்கள் கூட்டமும் நிறைய. இந...

Vaithisvaran Koil 18-03-2007 Garbha Rakshambikai and other Koils

We two, Ashok and Neeraja went to Vaithisvaran Koil during March 2007. Earlier, we went to this koil on 23 February 2007 for the Mudi Irakkuthal for Sowmya and Aditi. Ashok and Neeraja couldn't join us then. So this visit. We four left Chennai on Saturday, 17 March 2007 , by Rockfort Express for Kumbakonam. Reaching KBK by 0720 the next morning (18th) we took a room there (Rs 250.00) After bath and breakfast, we hired a taxi for Rs 1300.00 to go to Vaithisvaran Koil and other places. We left KBK by 0915 and went to V Koil. Good darshan of Vaithiyanatha Swami. Archanais to all five deities there. Then went to Suriyana Koil (Sun God). And then to Sukranar Koil at Kanjanur. Then we returned to KBK by 2PM and had lunch. At 3-15 PM, after lunch, we proceeded to Karugavur and worshipped at Sri Garbha Raskshambikai Amman. There Ashok-Neeraja performed the படி மெழுகுதல் with ghee. From there, we proceeded to Pattiswaran Koil and then back to the hotel by 6-45 PM. Our return train was...

Vaithisvaran Koil 23 Feb 2007 Sowmya-Aditi Mottai

Mission Mottai, Sowmya, Aditi வைத்தீஸ்வரன் கோயில் Our trip to Vaitheeswaran Koil We two, Arun-Gayathri, Arvind-Krithika went to Vaitheeswaran Koil on 22/23 feb 2007 for Mission-Mottai to our two princesses Aditi and Sowmya. Arun-G-S came to our place Karpagam avenue by 11AM on 22 Feb for lunch and onward travel. We five (except Krithika) left Karpagam Avenue by 3-10PM after the Rahu Kaalam was over. We had booked a Tempo Traveller AC van for the trip (Rs 9.50 per km). Krithika, Aditi and K's parents were waiting at Ashok Nagar for us. Finally, we left at 4-15. The journey was both tedious and enjoyable (there were two great reasons for enjoyment - Sowmi and Aditi). We took GST road, and via Tindivanam, Vikrawandi, Panruti, Neyveli, Vadalur, Bhuvanagiri reached Chidambaram by 9-45PM. Stopping at Hotel Akshya on the East Veedhi, we were aghast to know that the hotel was about to be closed for the day - somehow we could get some morning-made dosai and yesterday-made chappat...