Skip to main content

Posts

Showing posts from 2010

Vaithisvaran Koil - 2010

வைத்தீஸ்வரன் கோயில் எங்கள் குடும்பத்தினர் 11 பேரும் (குழந்தைகள் உட்பட) வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போக திட்டமிட்டு, இரண்டு கார்களில் செல்வதாக எண்ணம். அஷோக், நீரஜா இருவரும் பெங்களூரிலிருந்து வியாழன் டிசம்பர் 23 (2010) அன்று இரவு சென்னை வந்தனர். மறுநாள் காஞ்சிபுரம் சென்றோம். அடுத்த நாள் (சனிக்கிழமை, 25-12-2010) காலை இரண்டு கூட்டாக வை.கோயில் புறப்பட்டோம். சென்னையிலிருந்து சுமார் 267 கிமீ தூரத்தில் உள்ளது. ECR roadல் பயணித்தோம். அருண் காரில், அருண் குடும்பமும், அஷோக்-நீரஜாவும் 6-45க்கு கிளம்பினர். பிச்சாவரம் சென்றுவிட்டு, எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ப்ளான். அர்விந்த், கிருத்திகா, அதிதி, விஜயா, நான் ஆகியோர் காலை 11-15க்கு அர்விந்த் காரில் (LINEA) கிளம்பினோம். புதுச்சேரியை பகல் 2 மணிக்கு அடைந்து, அங்கு HOTEL SURGURU (SV Patel Road) வில் சுவையான லஞ்ச் சாப்பிட்டோம் (ரூ 83/-). அங்கிருந்து 2-45க்கு கிளம்பி, சிதம்பரத்தை 4-20 க்கு அடைந்தோம். அங்கு அருண் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நல்ல தரிஸனம் கிடைத்தது. மாலை ஏழு மணிக்கு சிதம்பரத்தை விட்டு ...

ஸ்ரீமத் பாகவதம் - 8-வது ஸ்கந்தம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் 7-வது ஸ்கந்தத்தை நேற்று (28-12-2010) நிறைவு செய்தார். 7-வது ஸ்கந்தம் சென்ற நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று ஆரம்பித்தது. இன்று காலை (29-12-2010) 8-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 8-வது ஸ்கந்தத்தில், நான்கு கதைகள் சொல்லப்படுகின்றன. அதைத் தவிர மனுக்களின் வம்ஸாவழிகளும் சொல்லப்படுகின்றன. 1. கஜேந்திர மோக்ஷம்: முதல் மனு ஸ்வாயம்புவர்; பின்னர், 2-வது, 3-வது மனுக்களுக்கு பிறகு, 4-வது மனுவாக தாமஸர் என்பவர் இருந்தார். இவரது காலத்தில்தான், ஸ்ரீமன் நாராயணன் ஹரியாக உருவெடுத்து, முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட கஜேந்திரன் என்கிற யானை ஆதிமூலமே என ஹரியை அழைக்க, கருடன் மீதேறி ஓடோடி வந்து தன் பக்தனை (யானையை) காப்பாற்றினார். 2. அமுதம் கடைந்தது: 6-வது மனுவின் (சாக்ஷூஷர்)  காலத்தில் இது நிகழ்ந்தது. மந்திர மலையை மத்தாக நாட்டி, வாஸூகி என்கிற பாம்பை கயிறாகச் சுற்றி, பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தார். மந்திர மலை கடலில் அமிழ்ந்து விடாமல் இருக்க, தானே கூர்மாவதாரம் எடுத்து, மலையை கீழிருந்து தாங்கினார். கடலிலிருந்து காலகட்ட விஷம், ஐராவதம் என்...

காஞ்சிபுரம் - Kanchipuram Dec 2010

சென்ற வாரம் 2010, டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை யன்று நான், விஜயா, அஷோக், நீரஜா ஆகிய நால்வரும் காஞ்சிபுரம் சென்றோம். காலை 6-45க்கு அர்விந்த் காரில் பெஸண்ட்நகரிலிருந்து கிளம்பினோம். போரூர், ஸ்ரீபெரும்பூதூர் வழியாக சென்றோம். சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள ”வேடல்” என்ற கிராமத்தில்  முதலில் காரை நிறுத்தி அங்கு சங்கர மடத்தினர் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் சில பகுதிகளைப் -பார்த்தோம். இது சென்னை-பெங்களூர் சாலையில் சுமார் 68-வது கிமீட்டரில் L & T Factory (Blue color building) அடுத்து இருக்கிறது. சிவன் சிலையை ரோட்டிலிருந்தே பார்க்கலாம். சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். இதனை 18/10/2010 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணித்தார்.   இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் ...

ஸ்ரீ கிருஷ்ண லீலை - விஷாகா ஹரி

விஷாகா ஹரியின் ஸ்ரீ கிருஷ்ண லீலை சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் “குசேலோபாக்கியானம் ” நடந்தது. (படிக்க) இந்த 2010 வருஷமும் நேற்று (15-12-2010) மாலை விஷாகா ஹரியின் ஸ்ரீ கிருஷ்ண லீலை நடந்தது. இதைக் கேட்கவென்றே பெங்களூரிலிருந்து நான் ஓடோடி வந்தேன். நேற்று மாலை 4-30க்கு நானும் விஜயாவும் ஆட்டோ பிடித்து ஹாலிற்கு சென்றோம். 4-45க்கு ஹாலினுள் நுழைய அனுமதித்தனர். உள்ளே நுழைய 3-30 மணியிலிருந்தே க்யூ வரிசை நின்றதாக அறிந்தோம். வழக்கம்போல ரொம்பி வழியும் மக்கள் கூட்டம். தனது வழக்கமான் புன்னகையோடு விஷாகா ஹரி 6-45க்கு ஸ்ரீ கிருஷ்ண லீலை கதையை சொல்ல ஆரம்பித்தார். தியாகராஜரின் பிரபல “ஸாமஜ வர கமனா” (ஹிந்தோளம்) பாட்டுடன் ஆரம்பித்தார். உக்ரஸேனனின் மகனான கம்ஸன் எவ்வாறு தன் தங்கை தேவ கியின் முதல் ...

ஸ்ரீமத் பாகவதம் - 7வது ஸ்கந்தம் (ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்)

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது ஸ்கந்தத்தை அக்டோபர் 15-ஆம் தேதியன்று ஆரம்பித்தார். (இங்கு படிக்க) நேற்று (நவம்பர் 17-ஆம் தேதி இந்த 6-வது ஸ்கந்தம் நிறைவு பெற்றது. இன்று (18-11-2010) காலை அவர் 7-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 269-வது நாள். ஸ்கந்தம் 3-ல் பகவான் வராஹப் பெருமாளாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றினார். இந்த ஹிரண்யாக்ஷனின் அண்ணா ஹிரண்யகசிபு பிரமனைக் குறித்து கடுந்தவம் புரிந்து, “சாகா வரம்” பெற்றான். வரம் பெற்றவுடன், மிகக் கொடூரமாக எல்லாரையும் கொன்று குவிக்க ஆரம்பித்தான். பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்து இவனை எப்படி சம்ஹாரம் செய்தார், இவனுடைய மகனான ப்ரஹ்லாதனின் அத்யந்த பக்திக்கு ஆட்பட்டு, குழந்தை அழைத்தவுடன் எப்படி தூணிலிருந்து தோன்றி ராக்ஷசனை கொன்றார் என்பது 7-வது ஸ்கந்தத்தில் விவரிக்கப் படுகிறது. கேட்தல், பாடுதல், சிந்தித்தல், திருவடிகளுக்கு தொண்டு புரிதல், அர்ச்சித்தல், வணங்குதல், அடிமை செய்தல், நட்போடு இருத்தல், ஆத்மாவை ஸமர்ப்பித்தல் - என்ற ஒன்பது விதமான பக்தியை ப்ரஹ்லாதன் உபதேசம் பண்ணுவதும் இந்த ஸ்கந்தத்தி...

The Lamps

சென்னையின் பல தெருவோரங்களிலும், கடற்கரைகளிலும், இன்னபிற இடங்களிலும் தள்ளுவண்டிகளில், இரவு நேரங்களில் பளிச்சென ஒளி வீசிக்கொண்டிருக்கும் மின் ட்யூப் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். (உங்கள் ஊர்களிலும் கூட இவை காணப்படும்) இந்த விளக்குகளுக்கு மின்இணைப்பு எங்கிருந்து கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு வியப்பான விஷயமாக இருந்து வந்தது. சென்ற மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில் தெருவில் நான் நடந்து கொண்டிருக்கையில் திடீரென எனது கவனம் ஒரு சைக்கிள்-ரிக்‌ஷா போன்ற ஒரு வண்டியின் மீது விழுந்தது. அந்த வண்டியில் ஒரு ஆள் கிட்டத்தட்ட 50-60 விளக்குகளை (பார்ப்பதற்கு பழைய பெட்ரோமாக்ஸ் விளக்குகளை போலிருக்கும்) ஏற்றி வந்து ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் வீதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் மர்மம் துலங்கியது - 100-200 விளக்குகளை வாங்கி தினமும் பகல் பொழுதில் அவற்றின் BATTERY களை Charge பண்ணி மாலை வேளையில் அவற்றை வாடகைக்குக் கொடுக்க வேண்டியது, ஒரு இரவுக்கு இத்தனை என பணம் வசூலித்துக் கொள்வது, பின்பு இரவு 9-30, 10 மணிக்கு திரும்ப வந்து விளக்குகளைப் பெற்றுச் செல்வது - இதுதா...

ஆண்டவனின் திருநாமங்கள்

மிக முக்கிய குறிப்பு (எச்சரிக்கையும் கூட ..) இந்த போஸ்ட் ஆன்மிகம் பற்றியது. நீள ... ... மானதும் கூட. DRY யாக இருக்க மிகவும் வாய்ப்புள்ளது. படிக்க வேண்டாமென்றால் ... இத்தோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் அடுத்த வேலையைப் பார்க்கலாம். என்னுடைய சமீபத்திய பாகவதம் blog post-ல் குறிப்பிட்டுள்ளது போல ஸ்ரீமத் பாகவதத்தில் தற்போது 6-வது ஸ்கந்தத்தை ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபந்யாஸம் பண்ணி வருகிறார். 6-வது ஸ்கந்தம் (அத்தியாயம்) ஆண்டவனின் நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுவதன் மஹிமைகளை விளக்குகிறது. எப்போதும், ஸதா ஸர்வகாலமும் பகவானின் நாமங்களை ஸ்மரித்துக் கொண்டு இருக்கவேண்டும் என சொல்கிறது. நான்கு யுகங்களில் முதலாவதான் கிருத யுகத்தில் தியானத்தால் முக்தி அடையலாம் எனச் சொல்லப்பட்டது. அடுத்த யுகத்தில் ( த்ரேதா யுகம் ), யாகங்கள் செய்வதனால் ( ஆராதனைகள் ) மட்டுமே முக்தி கிட்டும் என சொல்லப்பட்டது. மூன்றாவது  ( துவாபரம் ) யுகத்தில் அர்ச்சனை பண்ணுவதாலேயே இது கிடைக்கும் எனப்பட்டது. தற்போது நடக்கும் கலி யுகத்தில் இதை விட சுலபமாக, கேசவன் நாமங்களை சங்கீர்த்தனம் மூலமாகவே அடையலாம் என சொல்லப்ப்டுகிறத...

ஸ்ரீமத் பாகவதம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

பாகவதம் 6-வது ஸ்கந்தம். ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத உபந்யாஸத்தை சென்ற வருஷம் (2009) நவம்பர் 9 ஆம் தேதியன்று ஆரம்பித்து, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-க்கு பொதிகை டீவியில் நிகழ்த்தி வருவது தெரிந்ததே. நேற்று (15 அக்டோபர் 2010) அன்று பாகவதத்தின் 5-வது ஸ்கந்தத்தை முடித்து, 6-வது ஸ்கந்தம் ஆரம்பித்தார். 5-வது ஸ்கந்தத்தில் பூகோளம் விவரிக்கப்பட்டது. ஸூர்ய மணடலத்திற்கு மேலே ஏழு லோகங்களும், பூமிக்கு கீழே அதலம் முதல் பாதாளம் வரை ஏழு லோகங்களும் விளக்கப்பட்டன. 6-வது ஸ்கந்தம் பகவானின் திருநாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை எடுத்துச் சொல்கிறது. “ நாராயண கவசத்”தை விவரிக்கிறது.  பொறுத்திருந்து வேளுக்குடி ஸ்வாமிகளை கேட்போம் - பகவானின் அருளைப் பெறுவோம். ராஜப்பா 16-10-2010 காலை 10:00 மணி

விடியல் நேரத்தில் ...

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவுகின்றனவோ இல்லையோ, புள்ளும் சிலம்பியதோ இல்லையோ, புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்கிறதோ இல்லையோ ... விடியற்காலை. பொழுது எப்போதுமே, எந்த ஊரிலுமே மிக இனிமையான பொழுது என்பது உண்மை. 6-45 மணி என்பதை சிற்றஞ் சிறுகாலை எனச் சொல்ல முடியாவிட்டாலும், ”விடியற்காலை” எனச் சொல்லலாமா? அந்த இனிமையான நேரத்தில் சென்னையில் என்ன நிகழ்கிறது? அதோ பாருங்கள் - புத்தம் புதிய, அச்சு மையின் நறுமணத்தோடு கூடிய செய்தித்தாள்கள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டுள்ளன! தமிழில்தான் எத்தனை எத்தனை நாளேடுகள், வார. மாத இதழ்கள் !! எல்லாம் வண்ண மயம். விற்பனை பரபரப்பு. எதிரிலே, வண்டியிலே சுடச்சுட (நிஜமாலுமே சூடாக) இட்லி, தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - இட்லி மணமும், சாம்பார் மணமும் “வா வா” என அழைக்கின்றன. வண்டியைச் சுற்றி 5 - 6 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத்தான் வறட்டு கௌரவம் .... ரோடை கடக்க வேண்டுமா, பார்த்து கடக்கவும்; காலை 6-45 தானே என அலக்ஷியம் வேண்டாம். வேல், பனிமலர், வெங்கடேசா, செட்டிநாடு வித்யாக்ஷ்ரம், PS செகண்டரி ஸ்கூல...

மயிலாப்பூர் இன்று.

இன்று (27-09-2010) மாலை மயிலாப்பூர் சென்றோம். அடுத்த பத்து நாட்களில் (அக் 8 ஆம் தேதி முதல்) நவராத்திரி பண்டிகை வர இருப்பதால், மயிலாப்பூர் இப்போதே களை கட்டி விட்டது. காதி கிராமோத்யோக் கடையிலும், வடக்கு மாட வீதி முழுதும் பொம்மைகள் குவிந்துள்ளன. எவ்வளவு பொம்மைக் கடைகள் ! அம்மாடியோவ். அழகு, அழகான பொம்மைகள். விலையைக் கேட்கவில்லை - மயக்கம் போட்டு விடுவேனோ என்ற பயம்தான். வடக்கு மாட வீதியில் உள்ள விஜயா பூஜைப் பொருட்கள் கடை என்னமாக ஜொலிக்கிறது! நவராத்ரிக்கு வேண்டிய சாமான்கள் கொட்டிக் குவிந்துள்ளன, வண்ண வண்ணமாக. அடுத்த வாரத்தில் கடையினுள் நுழைவதே கஷ்டமாக இருக்கும். கடை பெரிதாக்கப் பட்டுள்ளது. 2 - 3 வருஷங்களுக்கு முன்னால், இந்தக் கடை இவ்வளவு பெரியதாக இல்லை. சுக்ரா ஜுவல்லரியிலும் புதுப் புது வெள்ளி சாமான்கள் நவராத்திரி ஸ்பெஷல் குவிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல கறிகாய்கள் நிறைய்ய இருந்தன. காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி வண்டி வண்டியாக இருந்தன. பழங்களும் இவ்வாறே - கொய்யா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, மற்றும் ஆச்சரியகரமாக ஸீதாப் பழங்கள் குவிந்திருந்தன. தேங்காய், புஷ்பங்களைப் பற்றி எழுதவே வேண்...

ஸ்ரீ சங்கரா டீவி

சமீப காலமாக (19 Sept 2007) ஸ்ரீ சங்கரா டீவி என்னும் ஒரு புதிய சானல் துவங்கியுள்ளது. பங்களூரை தலைமையகமாகவும், சென்னையை Regional  அலுவலமாகவும் கொண்டு, முற்றிலும் ஆன்மீக, பக்தி, ஆலய விஷயங்களை ஒளிபரப்புகிறது, பல சமயங்களில் நேரடியாக (LIVE Telecast). தினமும் மாலை 6 மணிக்கு குருகுலம் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் என்னும் சம்ஸ்கிருத புரொஃபஸர் 15 சிறுமிகள் / சிறுவர்களுக்கு (எல்லாரும் 10-12 வயதிற்குள் இருக்கிறார்கள்) சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்கிறார். அவர் முதலில் சொல்ல, குழந்தைகள் அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள். தினமும் 2 அல்லது 3 Stanza க்கள் தான். முந்தின நாள் சொல்லிக் கொடுத்ததை அடுத்த நாள் ஆரம்பத்தில் மனப்பாடமாக எல்லாக் குழந்தைகளும் சொல்கிறார்கள்; பின்னர் அன்றைய புது ஸ்லோகங்கள் கற்றுக் கொள்கிறார்கள். சென்ற ஒரு மாதமாக நான் இதை பார்ப்பதை / கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்; அப்போது ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்   சொல்லிக் கொடுத்தார். பின்னர் சிவ மானஸா ஸ்தோத்ரம் . தற்போது (17-9-2010) பஜ கோவிந்தம் சொல்லிக் கொடுக்கிறார். இது முடியும் நிலையில் உள்ள...

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

10-09-2010 வெள்ளிக்கிழமை  மாலை அர்விந்த், கிருத்திகா, அதிதி மூவரும் பெஸண்ட்நகர் வல்லப விநாயகர் கோயிலுக்கு அருகில் சென்று பிள்ளையார் பொம்மையையும் (50.00), புஷ்பங்கள், பழங்கள், பத்ரங்கள் ஆகியவற்றையும் வாங்கி வந்தனர். வீட்டுத் தோட்டத்திலிருந்து துளஸி, வில்வம், மாவிலை, அருஹம்புல் போன்ற பலவகையான பத்ரங்களை விஜயா பறித்து வந்தாள். 11-09-2010 சனிக்கிழமை  காலை எழுந்து, குளித்து, பிள்ளையாரை அலங்கரித்த பின்னர், நைவேத்யத்திற்கு கொழுக்கட்டை (2 விதம்), பாயஸம், வடை ஆகியவற்றை விஜயாவும், கிருத்திகாவும் செய்தனர். நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை பண்ணினான். அருண்-காயத்ரியும், பெங்களூரில் அஷோக்-நீரஜாவும் இதே போன்று பூஜை முடித்தனர். தில்லி, தாணே, புணே, ஆகிய இடங்களிலும் விநாயகர் பூஜை சிறப்பாக நடந்தது. தங்கள் வீட்டில் மிக சிறப்பான முறையில் கொண்டாடியதை வாசு விரிவாக தன்னுடைய வ்லைப்பதிவில் எழுதியுள்ளான். 12-09-2010 மாலை 5 மணி அளவில் அர்விந்த், விஜயா, கிருத்திகா, அதிதி ஆகியோர் அருகிலுள்ள பெஸண்ட் நகர் கடற்கரைக்குச் சென்று, பிள்ளையாரை பிரியாவிடை கொடுத்து அனுப்பினோம். அதிதிக்கு ஒரே குறை - நம் வீட்ட...

விநாயகர் சதுர்த்தி

பாத்ரமாத சுக்ல பக்ஷ சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்று காலை எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, வீட்டை பெருக்கி, மெழுக வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். ஒரு மண்டபம் அல்லது சுத்தமான ஒரு பலகையில் தலைவாழை இலை போட்டு அதன்மேல் நெல் அல்லது பச்சரிசி போட்டு பரப்பி, அதில் ஒரு தாமரையை வரைந்து, அதன் மேல் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து அருஹம்புல், சந்தனம் இன்னும் பலவித இலைகள், பூக்கள் ஆகியவற்றால் பூஜை செய்து, தூப, தீபம் காண்பித்து, நெய்யில் செய்த கொழுக்கட்டை (மோதகம்), மாவுப்பலகாரங்கள், தேங்காய், வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிக்காய், அப்பம், இட்லி, முதலானவற்றை நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி பூஜையை முடிக்க வேண்டும். 11-09-2010 சனிக்கிழமை காலை சுமார் 1010 மணி வரை திருதியை இருப்பதால், ராகுகாலம் சென்றபிறகு, 10-30க்கு மேல் விநாயகர் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த 21 விதமான இலைகள்: 1. மாசிப்பச்சை, 2. கணடங்கத்திரி, 3.பில்வம் , 4. அருஹம்புல் , 5. ஊமத்தை, 6. இலந்தை, 7. நாயுருவி, 8. துளஸி , 9. மாவிலை, ...

Annai Velankanni Shrine, Besantnagar

All of us would have heard about the Annai Velankanni Shrine , near Nagapattinam. Hundreds of thousands of devout Christians and Hindus alike visit this shrine to have the blessings of Virgin Mary, Our Lady of good Health. ஆரோக்கிய மாதா.   நாகப்பட்டினத்தில் மூன்று அற்புதங்கள் நிகழ்ந்தன. முதல் அற்புதம் 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. ஒரு ஹிந்து சிறுவன் பாத்திரத்தில் பால் எடுத்துச் சென்றபோது, ஒரு பெண்மணி அவனிடம் வந்து தன் குழந்தைக்குப் பால் கொஞ்சம் தருமாறு கேட்க, அவனும் கொடுத்தான். பின்னர் வீட்டிற்குச் சென்ற பையன் இந்த நிகழ்ச்சியை எல்லாரிடமும் சொன்னான்; பாத்திரத்தை திறந்து பார்த்தால் அதில் பால் நிறைய தளும்பிக் கொண்டிருந்தது. வந்த பெண்மணி அன்னை மேரி மாதா என உணர்ந்து அன்னை தோன்றிய இடத்தில் ஒரு ஓலைக் கு டிசையில் மாதாவிற்கு சிறிய அளவில் கோயில் கட்டினார்கள். அற்புதம் நிகழ்ந்த குளம் “மாதா குளம்” என அழைக்கப்படுகிறது. 2-வது அற்புதம்: 16-ஆம் நூற்றாண்டு இறுதியில் வேளாங்கண்ணியில் ஒரு ஏழை பெண்மணி தன் பையனுடன் இருந்தாள். பையனுக்கு பிறவியிலேயே கால் ஊனம்; நடக்க இயலாது. தினமும் அவன் “நடுத்திட...

Sri Varalakshmi Vratham - 2010

Varalakshmi Vratham was celebrated this year (2010) on 20 Aug. Vijaya started preparations like Idli maavu, kuzhakkattai maavu, cleaning of the vesseles, decorating the mandapam etc on the previous day/night itself. Krithika was also very busy. It was a hectic day's work for both. On 20th, Vijaya got up by 5 and started work. Krithika was busy in decorating mandapam and the Amman itself. Gayathri also came early and started helping. Rice, Idli, vadai, two types of kuzhakkatai, Panchamrutam etc were prepared. Arun, Sowmya, Sriram also came. Arvind had gone to office. When everything was ready, I started the poojai at 0945; i chanted the poojai-slokas and Vijaya, Gayathri, Krithika (and Aditi) performed the poojai. We had kept three mukhams for the poojai. It was completed by 1100. All five (Sowm and Aditi incl) tied the sacred SARADU on their right wrists. Afterwards, we had lunch. Evening, a few guests came to have Amman's darshan. TSG and mami came; so did Sruthi for S...

ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் - விஷாகா ஹரி

ஸ்ரீ ருக்மிணி கல்யாணம் ருக்மிணிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் நடந்த தெய்வீகக் கல்யாணம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் 10-வது ஸ்கந்தத்தில் 52-53-54 அத்தியாயங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நேரில் பலமுறை இந்த சங்கீத உபன்யாஸத்தை விஷாகா ஹரி பண்ணியிருந்தாலும், அவரது உபன்யாஸம் DVD வடிவில் இப்போது தான் வெளிவந்துள்ளது (Moser Baer, Rs 99/-) விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகா (Bhishmaka) என்பவனுக்கு 5 ஆண் குழந்தைகள் (ருக்மி, ருக்மரதா, ருக்மாபஹு, ருக்மகேஸா, ருக்மமாலி). ஒரு அழகிய பெண் குழந்தை. ருக்மிணி (வைதர்ப்பி) எனப் பெயர் கொண்ட இவள் படிப்பு, சங்கீதம், பக்தி போன்றவற்றில் தேர்ந்து விளங்கினாள். பல ஸத் கதைகளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள உறுதி கொண்டாள். தந்தை ஒத்துக் கொண்டாலும், அண்ணன் ருக்மி மறுத்து விட்டான்; தன் நண்பன் சிசுபாலனைத் தான் கல்யாணம் பண்ணிகொள்ள வேண்டுமென நிச்சயித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான். துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தன் நிலையை விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதி, அதை அரச சபைக்கு வ...

ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதம் (கண்ணன் கதையமுது) உபன்யாஸங்களை 09 நவம்பர் 2009 அன்று ஆரம்பித்தார். (பொதிகை டீவி, காலை 06-30 மணி) இன்று - 13 ஆகஸ்ட் 2010 - வெள்ளிக்கிழமை இதன் 200 -வது பகுதி. 5வது ஸ்கந்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏன் பகவானின் நாமங்களை எப்பொழுதும் ஸ்மரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என  ஆண்டாளின் திருப்பாவையிலிருந்து மேற்கோள்கள் காட்டி இன்று விளக்கமாக சொன்னார். ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ராஜப்பா 13-08-2010 காலை 10:30 மணி

Vishakha Hari ஸ்ரீமதி விஷாகா ஹரி

ஸ்ரீமதி விஷாகா ஹரி (விஸாகா ஹரி??) சென்ற வாரம் 26-06-2010 மற்றும் 27-06-2010 தேதிகளில் பெஸண்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலில் உபன்யாஸம் செய்தார். 26-06-2010 சனிக்கிழமை மாலை 6-45க்கு ” ஸ்ரீ சுப்ரமண்ய வைபவம் ” என்ற தலைப்பில் உபன்யாஸம் செய்தார். முருகன் மீது பல பாடல்களைப் பாடினார். அடுத்த நாள், ஞாயிறன்று, “ ஸ்ரீ ராம நாம மஹிமை ” குறித்து உபன்யாஸம் செய்தார். இந்த இரண்டு உபன்யாஸங்களுக்கும் என்னால் போக இயலவில்லை (கால் பந்து உலகக் கோப்பை !!) . விஜயா முதல் நாள் மட்டும் போனாள். இரண்டு உபன்யாஸங்களுமே நன்றாக இருந்தன என அறிந்தேன்; நிறையக் கூட்டமும். ராஜப்பா 29-06-2010 காலை 11:00 மணி

காஞ்சிபுரம் சென்றோம் ... Kanchipuram 2010

சென்ற ஞாயிறு (ஜூன் 6) நாங்கள் காஞ்சிபுரம் சென்றோம். நான், விஜயா, சுகவனம் ஆகிய மூவர் மட்டும் அர்விந்த் காரில் ஓட்டுனர் வைத்துக் கொண்டு சென்றோம். காலை 7-15 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றோம். எங்கள்  பெரியப்பாவின் கொள்ளுப் பேத்திக்கு காஞ்சியில் 7-ஆம் தேதி கல்யாணம். முதலில், சரோஜாவும், அத்திம்பேரும் வருவதாக இருந்தனர். சரோஜாவிற்கு காலில் அடி பட்டதால், அவர்கள் வரவில்லை. பெரியப்பா சாம்பமூர்த்தியின் 4 பிள்ளைகளில் மூத்தவர் வீரராகவன; இவரது மூத்த மகன் சுப்ரமணியத்தின் (மணி) மகளுக்கு கல்யாணம். கல்யாணம் தவிர நிறைய கோயில்கள் பார்த்து தரிஸிப்பதுதான் எங்கள் காஞ்சி பயணத்தின் முக்கிய நோக்கம். 6ஆம் தேதி காலை காஞ்சியில் இட்லி-பொங்கல்-வடை சாப்பிட்டு விட்டு, நேராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பல்லவர்களால் 1053ல் கட்டப்பெற்ற புராதனக் கோயில் இது. பெருந்தேவி தாயாருடன் ஸ்ரீவரதராஜப் பெருமான் இருக்கிறார். மிகப் பெரிய கோயில். பல இடங்களில் நிறையப் படிகள் ஏறி, இறங்கவேண்டும். இங்குதான் தங்கப் பல்லி,  வெள்ளிப் பல்லி உள்ளன. ஸ...

கல்யாண சமையல் சாதம் ...

நேற்று மாலை ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்னால் இன்னொரு வரவேற்பிற்கு. இரண்டு விழாக்களிலும் பல ஒற்றுமைகள் கண்டேன். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே வரவேற்பு. கூட்டமான கூட்டம். உணவருந்தும் கூடம் மிகச்சிறியது. முதல் பந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு காத்திருந்த அடுத்த பந்தி! சாப்பிட்ட இலைகளை எடுப்பதற்கு முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டிய கட்டாயம். காலத்தின் கோலம். ஒருவழியாக பந்தியில் அமர்ந்து விட்டீர்களா? கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். இதோ - பரிமாற வந்துவிட்டார்கள். வரவேற்பு உணவு வகைகளும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஆகிவிட்டன; பாதி அல்லது கால் (1/4) ருமாலி ரோட்டி (நாங்களெல்லாம் பஞ்சாபி உணவுதான் சாப்பிடுவோம், தெரியுமா?), ஒரு டேபிள்ஸ்பூன் குருமா, ஒரு டீஸ்பூன் பச்சடி (மன்னிக்கவும், ராய்த்தா). ஒரு சிறிய ரசக் கரண்டி புலவ், இன்னொரு ரசக் கரண்டி சாம்பார் சாதம். கோஃப்தா ஒன்று, ஒரு ரசக் கரண்டி தயிர் சாதம். சாப்பிட்டாச்சா? எழுந்திருங்கள், அடுத்த இலையை எடுத்தாகி விட்டது...

மெரீனா பீச்

மெரீனா பீச் போக மே மாதம் 8ஆம் தேதியன்று நான் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பிசுபிசுத்துப் போனது. இங்கு படிக்கவும்  அடுத்த முயற்சியாக நேற்று (25 மே) மாலை மீண்டும் பஸ் நிறுத்தத்தில் 1/2 மணி நேரம் நின்றோம். நொந்து போய், வீடு திரும்ப பத்து அடிகள் எடுத்து வைத்தபோது 21-D வந்தது, அதுவும் காலியாக. அரைமணி நேரத்தில் நாங்கள் ராணி மேரிக் கல்லூரி வாசலில் இருந்தோம். காமராஜர் சாலையை (Beach Road) குறுக்காக கடந்து பீச் பக்கம் போய் நடக்க ஆரம்பித்தோம். மிகவும் அழகிய, சுத்தமான நடைபாதை பளபளத்தது. இரண்டு கிமீ நடந்த பின்னர் கொஞ்சம் உட்கார்ந்தோம். கண்ணகி சிலை நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீடு திரும்பினோம். மெரீனா பீச் நிஜமாலுமே மிக அழகாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் திரு ஸ்டாலினுக்கு நன்றிகள். LightHouse-லிருந்து சிவானந்தா சாலை வரை (அல்லது அதையும் தாண்டி) பளபளக்கும் நடைபாதை உள்ளது. உட்கார, குழந்தைகள் ஓடியாடி விளையாட நிறைய இடங்கள் இருக்கின்றன. நீணட நெடிய புல்தரைகள் பச்சைக் கம்பளமாக விரிந்திருக்கின்றன. நீங்களும் போய்ப் பாருங்கள்.   ராஜப்பா 10 மணி 26-05-2010

இயற்கையின் இன்னொரு பக்கம்.

இயற்கையின் கொள்ளை அழகை (விரிந்து பரந்த வங்கக்கடலை வர்ணித்து) போனமுறை எழுதியிருந்தேன் . இன்று (19-5-2010) இயற்கையின் இன்னொரு அழகிய பக்கத்தைப் பற்றி ...   நேற்று முதல் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அதனால் சென்னையில் பலத்த மழையும், காற்றும் இருக்குமென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இரவு முழுதும் பெரிய தூற்றல்களாக மழை பெய்து கொண்டேயிருந்தது. காலையில் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” ஊரே இருட்டாக இருந்தது. மழையும் இருந்தது. காலை 6 1/2 மணிக்கு விஜயாவும் நானும் மழையிலேயே குடை பிடித்துக் கொண்டு கிளம்பினோம். பீச் பக்கம் சென்றால், அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு உயரம் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன. தண்ணீர் அருகில் சென்றோம். நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்க்க பார்க்க, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் உயரத்திற்கு அல்லது இரண்டு ஆள் உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதுவரை சாதுவாக, அலையின் ஓசையே அதிகம் கேட்காமல், மென்மையாகத் “தளும்பிக்” கொண்டிருந்த கடலா இது? என்ன ஒரு மாற்றம்! இயறகையின் இன்னொரு பக்கமும் அழகுதான். பத்து நிமிஷங...

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், அடையாறு.

நேற்று (ஞாயிறு, 9th மே) மாலை 5 மணி சுமாருக்கு விஜயாவும் நானும் “சிறிதாக கொஞ்சம்" walking போகலாம் என எண்ணி, 3rd அவென்யூவில்  போனோம். கொஞ்ச தூரம் என்பது 3rd அவென்யூவைத் தாண்டி, பெசண்ட் அவென்யூவில் தொடர்ந்தது. பெசண்ட் அவென்யூ முழுதும் நடந்த பிறகு, அங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலிற்கு போக ஆசைப்பட்டோம். டிராஃபிக்கினுள் நுழைந்து, புகுந்து கோயிலுக்குப் போனோம். கடைசியாக இந்தக் கோயிலுக்குச் சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும். திருவனந்தபுரத்தில் இருப்பது போலவே இங்கும் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சயன கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். மூன்று வாசல்கள் வழியாகத்தான் பெருமாளைத் தரிஸிக்க முடியும். கோயிலில் நுழைந்த சமயம் பெருமாளுக்கு தீபாராதனை ஆரம்பித்தனர். மனம் குளிர, மிக மகிழ்ச்சியோடு ஸ்வாமியை தரிஸித்தோம். தீபாராதனைக்குப் பிறகு, ப்ராகாரம் சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். கோயிலில், பூமாதேவி, ப்ரஹ்மா, தக்ஷிணாமூர்த்தி, திவாகர கருடன், இஷ்ட ஸித்தி விநாயகர், மஹாவிஷ்ணு, நவக்கிரகம், வீர ஆஞ்சனேயர் முதலானோர்க்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. அனந்த பத்மநாப ஸ்வாம...

மெரீனா பீச்சில் நாங்கள் !!

இன்று (8-5-2010) மாலை மெரீனா கடற்கரை செல்லலாம் என எண்ணி, 5 மணி சுமாருக்கு பஸ் நிறுத்தத்தில் போய் நின்றோம். வரும் பஸ்களில் எல்லாம் மந்தை மந்தையாக மனித கூட்டம் இறங்கி உள்ளூர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எல்லாமே வேறு பஸ்கள்; மெரீனா செல்லாத பஸ்கள். 1/4 மணி, 1/2 மணி, 40 நிமிஷங்கள் மெரீனா செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்து, ஏமாந்து பின்னர் நாங்களும் உள்ளூர் பீச்சிற்கே சென்றோம்!! KALEIDOSCOPE என்று சொல்வார்களே, கடற்கரையில் KALEIDOSCOPE OF HUMANITY இருந்தது. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம். மெரீனா பீச் செல்லும் எங்கள் முதல் முயற்சி இவ்வாறாக பிசுபிசுத்து போயிற்று !! ராஜப்பா இரவு 8 மணி 8-5-2010

இயற்கையின் கொள்ளை அழகு

காலை வேளையில், ஏழு மணி சுமாருக்கு, வங்கக் கடலை பார்த்திருக்கிறீர்களா? சூரியன் கிழக்கே உதித்து, சிறிதே மேல் எழும்பி தன்னுடைய பொன்னிறக் கிரணங்களை தண்ணீர் மேல் அள்ளித் தெளித்திருப்பான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்த நீர்ப் பரப்பும் சூரிய ஒளி பட்டு, தகத் தகவென தங்கத் தாம்பாளமாக, பளபளக்கும் வெள்ளித் தட்டாக காட்சி அளிக்கும் -  இந்த அழகு மனதை அள்ளிக் கொண்டு போகும். தினந்தோறும் காலை நான் இந்த கண்கொள்ளா இயற்கை அழகை ரசித்து, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என அவனுக்கு நன்றி சொல்கிறேன். ராஜப்பா காலை 10:30 மணி 04-05-2010

மாதவப் பெருமாள் கோயில், மயிலாப்பூர்

மயிலாப்பூரில் சம்ஸ்கிருத காலேஜுக்குப் பின்னால் இந்த மாதவப் பெருமாள் கோயில் உள்ளது. 500 வருஷங்களுக்கும் மேல் புராதனமான, கீர்த்தி வாய்ந்த, அழகான கோயில். கோயிலுக்குப் போய் ஒன்றிரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. போக வேண்டும் என தினமும் நினைத்துக் கொள்வேன்; கடைசியில், ஆறு நாட்களுக்கு முன்னால் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை இந்த மாதவனை தரிஸிக்க சென்றோம். மூலவர் : மாதவப் பெருமாள். உற்சவர் : அர்விந்த மாதவன். தாயார் : அமிர்தவல்லி தாயார் . கோயிலில் பூவராஹன், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பெருமாளையும், தாயாரையும் கண்குளிர தரிஸித்து ஆனந்தமடைந்தோம். உற்சவப் பெருமாள் என்ன அழகு! இந்தக் கோயிலின் பக்கத்திலேயே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன் கோயில் உள்ளது. மிக சக்தி வாய்ந்த அம்மன். கோயிலுக்கு போய் அம்மனை தரிஸித்தோம். அன்று காலை 1008 பால்குடம் எடுத்து விழா நடந்தது (அன்று சித்ரா பௌர்ணமி). “வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை, ” இருவரில் மாதவனை தரிஸித்தாயிற்று; அடுத்து கேசவன். (மயிலாப்பூரிலேயே கோயில் உள்ளது). ராஜப்பா காலை 10:00 மணி 04-05-2010

ராஜாஜியின் ராமாயணம்

வால்மீகி, துளஸிதாஸர், கம்பர் ஆகியவர்களைத் தவிர வேறு நிறைய பேர் ராமாயணத்தை (ராம காதையை) எழுதியுள்ளார்கள். குறிப்பாக, தமிழில் “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய ராமாயணம் மிக பிரசித்தம். இந்த புஸ்தகம் இல்லாத வீடே அந்த கால கட்டத்தில் இருந்திருக்காது. “ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ... எல்லாரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும், பகவான் கருணையையும் பெறுவார்கள்” என்று 1967-ல் குறிப்பிட்ட ராஜாஜி மிக எளிமையான தமிழில் - சிறுவர்கள், சிறுமிகள் கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு - ராமாயணத்தை எழுதியுள்ளார். “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் 3-3-1956ல் முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழகம் முழுதும், CRAZE என்று சொல்வார்களே அது போன்று புஸ்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. ஒன்பது பதிப்புகள் வந்தன (வானதி பதிப்பகம்). சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. பல லக்ஷம் பிரதிகளுக்கு மேல் விற்ற இது, ராஜாஜியின் விருப்பத்தின் பேரில் பின்னர் தலைப்பு மாற்றப் பட்டு “ராமாயணம்” என்னும் புதிய தலைப்பில் ஜனவரி 1973ல் வெளிவந்தது. இதுவரை 33 பதிப்புகள் இந்த...

ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்

டாக்டர் சுதா சேஷய்யனைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்க) . இவர் ஒரு MBBS, MS. மருத்துவ யுனிவர்சிட்டியில் ஒரு புரொஃபஸர். இவரது ராமாயண சொற்பொழிவுகளை நீங்கள் கேட்கவேண்டும். கம்பனை “கரைத்துக் குடித்தவர்” - கொட்டும் நீர்வீழ்ச்சி, தெளிந்த நீரோடை எனத் தமிழில் இவர் பேசத் தொடங்கினால், மெய்மறந்து, ஊண் மறந்து, உறக்கம் மறந்து நாள் முழுதும் ராமச்சந்திர மூர்த்தியை “நேரில்” தரிஸித்து, அனுபவிக்கலாம். அவ்வளவு இனிமை, சுவை. சுதா சேஷய்யன் நேற்று (4-4-2010) துவங்கி 9 நாட்களுக்கு ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலில், “ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்” என்ற தலைப்பில் ராமாயணத்தின் இன்னொரு கோணத்தைப் பற்றி பேசுவார். விஜயாவும் நானும் நேற்று மாலை 6-30க்கு சென்றோம். ரசித்துக் கேட்டோம். ராஜப்பா 10:30 மணி 5-4-2010

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை

ஸ்ரீ ஸத்யநாராயணன் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இன்னொரு பெயர். இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்யும் முறைகளை ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. எப்போது செய்யலாம்? பௌர்ணமியன்று ஸாயங்காலம் இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பது உசிதம் என்கிறது ஸ்காந்த புராணம். பௌர்ணமியன்று செய்ய இயலாவிட்டால், அமாவாஸை, அஷ்டமி, த்வாதஸி திதிகளிலும், ஞாயிறு, திங்கள், வெள்ளிக் கிழமைகளிலும், ஸங்க்ராந்தி, தீபாவளி தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்யலாம். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என நிறைய பேர்களை பூஜைக்கு அழைத்து உபசாரம் பண்ண வேண்டும். தேவையான சில முக்கிய ஸாமான்கள். ஸ்ரீ ஸத்யநாராயணன் படம் தேவை. மூன்று கலஸங்கள் (அல்லது ஒரு குடம்) நவக்ரஹ பூஜைக்கு வேண்டிய வஸ்திரங்கள், தானியங்கள் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் புஷ்பங்கள் (நிறைய தேவைப்படும்) 9 கிண்ணங்கள். அரிசி மற்ற, வழக்கமான பூஜை ஸாமான்கள். நிவேதனம் சால்யன்னம் (வெள்ளை சாதம்) க்ருதகுல பாயஸம் (பருப்பு பாயஸம்) மாஷாபூபம் (உளுந்து வடை) குடாபூபம் (அப்பம்) லட்டுகம் (இட்லி) சுண்டல் மோதகம் வாழை, இலந்தை, நாவல், கொய்யாப் பழங்கள். ரவா கேஸரியும் செய்யல...

ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்  ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸத்தை (09-11-2009) ஆரம்பித்து, இன்று 100-வது நாள். விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்ணனின் கதையமுதத்தை பருக, பருக பக்திப் பரவசமும், ஆனந்தமும் கூடுகின்றன. எல்லாருக்கும் கண்ணனின் நல்லருள் கிடைக்கட்டும். ராஜப்பா 11:00 காலை 26-03-2010

Maiya's Restaurant

இன்று (4-3-2010) நான் Maiya's என்ற உணவகத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது பெங்களூரில், ஜயநகர் 4th Blockல் பஸ் ஸ்டாண்ட் அருகில், கணேஷ் கோயிலுக்கு எதிரில் உள்ள 5-மாடி உணவகம். பெங்களூரின் “உணவு ஆலயமான” MTR Restaurant-ஐ சேர்ந்தது. ஏப்ரல் 2009-ல் இது BTM Layout-லிருந்து இங்கு மாற்றப்பட்டது. புகழ்பெற்ற MTR-ன் “வாரிசு” என்பதால், பெங்களூர் வாசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு. விஜயா, நீரஜா, நீரஜாவின் அம்மா, அப்பா, அஷோக், மற்றும் நான் ஆறு பேர் நேற்றிரவு (மார்ச் 3) இங்கு உணவு உட்கொள்ள சென்றோம். ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கொஞ்சம் அசிரத்தையாகவே நான் நுழைந்தேன். 2-வது மாடியில் உணவுக் கூடம். நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அங்கு அமைதி நிலவியது. முதல் ப்ளஸ் பாயிண்ட். பணிவுடனும், புன்சிரிப்போடும் எங்களை கூட்டிப் போய் உட்கார வைத்தார்கள். ப்ளஸ் பாயிண்ட் 2. கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகாத குறைதான் !! தட்டு வந்ததும் வராததுமாக, ஒரு வெள்ளி டம்ள ரில் ( ஆமாம், வெள்ளி டம்ளர்! ) தேன் கலந்த appetizer கொடுத்தார்கள். (இது MTR வழக்கமாம்). மிக ருசியாக இருந்தது. பின்னர் அருமையான no...

சென்னை சங்கமம் - 2010

சென்ற 6 நாட்களாக சென்னையில் பல இடங்களில் நடந்துவந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நேற்றோடு (16-01-2010) நிறைவு பெற்றன. பெஸண்ட்நகர் எல்லியட்ஸ் பீச்சில் இந்த நிறைவு விழாவிற்காக காலையிலிருந்தே பிரம்மாண்டமான தடபுடலான ஏற்பாடுகள் துவங்கின. விஜயாவும் நானும் இரவு 8 மணிக்கு பீச்சிற்குச் சென்றோம்; நிறய கூட்டம். மேடையில் கிராமிய நடனங்கள் FOLK DANCES . பொதிகை டீவியில் வைத்தால் அந்த டீவி பக்கமே போகாதவர்கள், இங்கு மட்டும் எப்படி “ரசிக்கிறார்கள்”? என்று வியந்து போனேன். நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிய பின்னர், வாண வேடிக்கைகள் FIREWORK DISPLAY ஆரம்பித்தன. அடுத்த 10-12 நிமிஷங்களுக்கு வானமே வண்ணமயமானது; நன்றாக இருந்தது. 9-30 மணிக்கு முடிவுற்றது. வீடு திரும்பினோம். பீச் ரோட்டில் இருபது, முப்பது “சாப்பாட்டுக் கடைகள்” வைத்திருந்தனர். ஏராளமானோர் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரோடு முழுதும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டம்ளர்கள் என அசிங்கம். இன்று காலை 7 மணிக்கு walking போகும்போது பார்க்கிறேன் – அதே ரோடு எல்லா CUTOUTகளும் நீக்கப்பெற்று, சுத்தமாகக் காணப்பட்டது; இரவு முழுதும் வேலை செய்திரு...

கோயில்கள்

சென்ற ஒரு மாதமாக மார்கழியில் அருகிலுள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலுக்கும் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தற்போது, தை பிறந்து விட்டது (இன்று தை 2). காலை 7 ம்ணிக்குக் கிளம்பி, நடையாகவே ஆறுபடை முருகன் கோயிலுக்கு ச் சென்றேன். வீட்டிலிருந்து 25 நிமிஷங்கள் ஆகிறது. ஒரு வருஷத்திற்கும் மேலாக இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. Coastal Road வழியாகச் செல்லவேண்டும். ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன், பழனி ஆண்டவன், திருத்தணி முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர்ச்சோலை முருகன் ஆகிய ஆறு முருகப்பெருமான்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருப்பதால், இந்தக் கோயிலில் சாதாரணமாக கூட்டம் வராது. மாலை 5 ம்ணிக்கு நானும், விஜயாவும் நடையாகக் கிளம்பி, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு ச் சென்றோம்; 37 நிமிஷங்கள் ஆயிற்று. இன்று “மாட்டுப் பொங்கல்” – எனவே கோயிலில் உள்ள பசுக்களுக்கு விசேஷ பூஜைகள் பண்ணினார்கள். ஸ்வாமியையும், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனையும தரிஸித்துக் கொண்டு வீடு திரும்பினோம் (பஸ்ஸில்). காலையிலும், மால...