Skip to main content

Posts

Showing posts from February, 2008

Srimad Bhagavad Gita Ch 6 Sloka 40

அத்தியாயம் 6 ஸ்லோகம் 40 ஸ்ரீ பகவானுவாச பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி பார்த்தா, இவ்வுலகில் எல்லாருக்கும் நன்மையே செய்பவன் எவனும் கேடு அடைவதில்லை. இம்மையிலும், மறுமையிலும் அவனுக்கு அழிவென்பதே இல்லை. நலம் செய்யும் யாருமே நலிவுறுதில்லை This sloka was discussed on 20 Feb 2008 by Sri Velukkudi Krishnan rajappa 1020 on 20-2-2008

துணையெழுத்து S. Ramakrishnan

துணையெழுத்து S. Ramakrishnan Thunaiezuththu திரு எஸ் ராமகிருஷ்ணனின் இன்னொரு அருமையான கட்டுரைத் தொகுப்பு. தான் சந்தித்த, பேசிய, பார்த்த மனிதர்களை, இடங்களைப் பற்றிய ஆசிரியரின் மன எண்ணங்கள். "வாழ்வின் கசப்பும், தித்திப்பும் நாக்கில் மறுமுறையும் தோன்றி மறைந்தது," என ஆசிரியர் குறிப்பிடுவது மிகவும் பொருந்துகிறது. சுமார் 30-35 கட்டுரைகள் உள்ளன - ஒவ்வொன்றும் ஒரு புதிய, வித்தியாசமான அனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருகிறது. நெஞ்சைத் தொடுகின்றன. மிகவும் அருமையாக உள்ளது. Ramakrishnan எழுதிய "தேசாந்திரி" Desandhiri இங்கே பார்க்கவும். ராஜப்பா 08-45 12-2-2008

ஸுந்தர காண்டம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளைப் பற்றி (Sri Velukkudi Krishnan)ஏற்கனவே எழுதியுள்ளேன், தினமும் அவர் சொல்லும் கீதை உபன்யாஸத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். ( இங்கே படிக்கவும்). ஸ்ரீ வேளுக்குடி அவர்கள் "ஸுந்தர காண்டம்" பற்றி ஒரு உபன்யாஸம் செய்துள்ளார். VCD (2) விலை ரூ. 150.00 DVD ரூ. 250.00. விசிடியை 2008 ஜனவரி 25-ஆம் தேதியன்று கிரியில் (Giri Traders, Mylapore) வாங்கினேன். நேற்று (8-2-2008) வெள்ளிக்கிழமை இதைக் கேட்டோம். இரண்டு விசிடிக்களும் சேர்த்து சுமார் இரண்டு மணி 30 நிமிஷங்கள் ஓடுகின்றன. வேளுக்குடியை (Velukkudi Krishnan) பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? அதே கம்பீர, கணீர் குரல், தங்கு தடையற்ற இனிய தமிழ் ஓட்டம், எல்லாருக்கும் புரியும்படியான எளிய சொற்கள். வால்மீகியும், கம்பரும், ஆழ்வார்களும் மிக சரளமாக வந்து போகிறார்கள். மிக அற்புதமாக உள்ளது. ஸுந்தர காண்டத்தை ஸ்ரீமதி விஷாகா ஹரி (Srimathy Vishakha Hari) யின் குரலில், இன்னிசையில் ஏற்கனவே கேட்டுள்ளோம். ( இங்கே ) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரையில், விஷாகா ஹரி இன்னிசைத் தேன். வேளுக்குடி ஸ்லோக மஹாச