பகவான் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையில் 17-வது அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தில் பகவான் மூன்றுவித சிரத்தைகளைப் பற்றி விவரிக்கிறார். தேகம் எடுத்தவர்களுக்கு இயல்பாக உண்டான சிரத்தையானது சாத்விக மென்றும், இராஜஸமெ ன்றும், தாமஸ மென்றும் மூன்று விதமாயிருக்கிறது. எந்தெந்த ஆகாரங்களினால் இந்த மூன்று வகை சிரத்தை உண்டாகும் என விவரித்தவர், மேலும் கூறுகிறார்: ஆராதனையாகச் செய்தே ஆகவேண்டுமென்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, வினைப்பயனை விரும்பாதவர்களால் சாஸ்திர விதிப்படி எந்த யாகம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமானது. பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ செய்யப்படுகிற ஆராதனைகள் ராஜஸமானது என்கிறார். வேதநெறி வழுவியதும், அன்னதானமில்லாததும், மந்திரமற்றதும், தக்ஷிணையில்லாததும், சிரத்தையற்றதுமாகிய யக்ஞம் தாமஸிகம் என சொல்லப்படுகிறது. மனிதன் சிரத்தையோடு எதை பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணையாகிறது. தவம் யாது? விளக்குகிறார் பகவான். தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். மெய் (உடல்), மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் கொண்டவன் மனிதன். இம்மூன்று கரணங்க...