ராஜா (சுந்தரராமன்) 60-வது பிறந்த நாள். விஜயாவின் அக்கா இந்திராவின் பெண் அகிலா - ராஜா விற்கு சஷ்டிஅப்தபூர்த்தி 13 ஜுலை 2013 (சனிக்கிழமை) வந்தது. இதற்கு 20 நாட்கள் முன்னதாகவே எங்கள் இருவரையும் அகிலா- ராஜா ஃபோனில் அழைத்தனர். பின்னர், அபர்ணா - வஸந்த் இருவரும் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தனர். ஜூலை 11 வியாழன்: இன்று சுமங்கலிப் பிரார்த்த்னை . காலை 7:00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினோம். TSG தன்னுடைய காரில் வளசரவாக்கம் கொண்டு போய் விட்டார். அங்கு போய் விஜயா குளித்துவிட்டு, மடிப்புடைவை கட்டிக்கொண்டாள். ”பெண்டுகள்” 5 பேரில் அவளும் ஒருவள். பிரார்த்தனை முடிந்து “பெண்டுகள்” சாப்பிட்டதும் நாங்கள் சாப்பிட்டோம். ராஜாவின் தங்கைகள் ரமாவும், பத்மாவும் வந்திருந்தனர். ரமாவின் கணவரும், ரமாவும் விசாகப்பட்டினத்திலிருந்து வந்தனர். பத்மா வேளச்சேரியில் இருக்கிறார். ராஜாவின் தம்பி வெங்கட், அவரது மனைவி, இரண்டு பெண்கள், ஒரு பையன் ஆகியோர் பெங்களூரிலிருந்து வந்தனர். அகிலாவும், ரமாவும் சமையல் பண்ணினார்கள்; அருமையாக இருந்தது. நாங்கள் இரவு அங்கேயே தங்கினோம். ஜூலை 12 வெள்ளிக்கிழமை : ரு...