Skip to main content

Posts

Showing posts with the label கோயில்கள்

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், அடையாறு.

நேற்று (ஞாயிறு, 9th மே) மாலை 5 மணி சுமாருக்கு விஜயாவும் நானும் “சிறிதாக கொஞ்சம்" walking போகலாம் என எண்ணி, 3rd அவென்யூவில்  போனோம். கொஞ்ச தூரம் என்பது 3rd அவென்யூவைத் தாண்டி, பெசண்ட் அவென்யூவில் தொடர்ந்தது. பெசண்ட் அவென்யூ முழுதும் நடந்த பிறகு, அங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலிற்கு போக ஆசைப்பட்டோம். டிராஃபிக்கினுள் நுழைந்து, புகுந்து கோயிலுக்குப் போனோம். கடைசியாக இந்தக் கோயிலுக்குச் சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும். திருவனந்தபுரத்தில் இருப்பது போலவே இங்கும் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சயன கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். மூன்று வாசல்கள் வழியாகத்தான் பெருமாளைத் தரிஸிக்க முடியும். கோயிலில் நுழைந்த சமயம் பெருமாளுக்கு தீபாராதனை ஆரம்பித்தனர். மனம் குளிர, மிக மகிழ்ச்சியோடு ஸ்வாமியை தரிஸித்தோம். தீபாராதனைக்குப் பிறகு, ப்ராகாரம் சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். கோயிலில், பூமாதேவி, ப்ரஹ்மா, தக்ஷிணாமூர்த்தி, திவாகர கருடன், இஷ்ட ஸித்தி விநாயகர், மஹாவிஷ்ணு, நவக்கிரகம், வீர ஆஞ்சனேயர் முதலானோர்க்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. அனந்த பத்மநாப ஸ்வாம...

கோயில்கள்

சென்ற ஒரு மாதமாக மார்கழியில் அருகிலுள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலுக்கும் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தற்போது, தை பிறந்து விட்டது (இன்று தை 2). காலை 7 ம்ணிக்குக் கிளம்பி, நடையாகவே ஆறுபடை முருகன் கோயிலுக்கு ச் சென்றேன். வீட்டிலிருந்து 25 நிமிஷங்கள் ஆகிறது. ஒரு வருஷத்திற்கும் மேலாக இந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை. Coastal Road வழியாகச் செல்லவேண்டும். ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன், பழனி ஆண்டவன், திருத்தணி முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன், திருப்பரங்குன்றம் முருகன், பழமுதிர்ச்சோலை முருகன் ஆகிய ஆறு முருகப்பெருமான்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருப்பதால், இந்தக் கோயிலில் சாதாரணமாக கூட்டம் வராது. மாலை 5 ம்ணிக்கு நானும், விஜயாவும் நடையாகக் கிளம்பி, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு ச் சென்றோம்; 37 நிமிஷங்கள் ஆயிற்று. இன்று “மாட்டுப் பொங்கல்” – எனவே கோயிலில் உள்ள பசுக்களுக்கு விசேஷ பூஜைகள் பண்ணினார்கள். ஸ்வாமியையும், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனையும தரிஸித்துக் கொண்டு வீடு திரும்பினோம் (பஸ்ஸில்). காலையிலும், மால...

திருப்பாதிரிப்புலியூர் கோயில்கள் Amma 100th Birthday, 23Mangalam, Gopi July 2009

இந்த வருஷம் (2009), ஜூலை 23, 24 தேதிகளில் நானும், விஜயாவும் திருப்பாதிரிப்புலியூர் சென்றோம். அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கும், ஸ்ரீ பாடலீஸ்வரர்க்கும், ஸ்ரீ ப்ருஹந்நாயகி அம்மனுக்கும் அபிஷேகம் /அர்ச்சனை செய்வதாக திட்டம். வரும் ஆகஸ்ட் 14, 2009 ஆடிக்கிருத்திகை அன்று அம்மாவிற்கு (ஸ்ரீமதி சம்பூரணம் அம்மாள்) 100-வது பிறந்தநாள் வருவதை ஒட்டி தானதர்மங்களும், அபிஷேக, அன்னதானங்களும் செய்து அம்மாவின் நினைவை கொண்டாடலாம் எனத் திட்டமிட்டோம். அபிஷேகங்கள் / அர்ச்சனைகளை சென்னையில் செய்வதை விட, அம்மா 35 வருஷங்களுக்கு மேல் வசித்த திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் செய்தால் இன்னும் நிறைவாக இருக்குமே எனத் தோன்றியது. திடீரெனத் தோன்றிய இந்த எண்ணத்தை விரைவாக செயல்படுத்தினோம். ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடித்தேன். அர்விந்த் தன் காரை எடுத்துப் போகுமாறு சொன்னான். முதலில் அருணைத்தான் கார் கேட்டிருந்தேன்; அவனும் தர ஒப்புக்கொண்டிருந்தான்; இடையில் அர்விந்த் வெளியூர் செல்லவேண்டி வந்ததால், அவனது காரையே பயன்படுத்தினோம். சாவித்திரியை வருகிறாயா என அழைத்தேன்; சந்தோஷமாக சம்மதித்தாள்; மங்களமும் அவ்வாறே ச...

காஞ்சிபுரம் சென்றோம் Kanchipuram

KANCHIPURAM ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன். போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல். பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது. எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர். பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள். அ...