Skip to main content

Posts

Showing posts with the label Padmavathi Thayar

SRINIVASA KALYANAM - Vishakha Hari

ஸ்ரீநிவாஸ கல்யாணம் - விஷாகா ஹரி உபன்யாஸம் DVD நேற்று, ஜனவரி 3-ஆம் தேதி, இந்த டீவிடீ_யை மயிலாப்பூர் கிரி டிரேடர்ஸில் வாங்கினேன் (ரூ 99/-) இந்த டீவிடீ மூன்று நாட்கள் முன்புதான் டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. ஸ்ரீமதி விஷாகாவின் இன்னொரு அருமையான உபன்யாஸம். B Ananthakrishnan on Violin, Arjun Ganesh on Mridangam, Trichy Murali on Ghatam. வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில், முக்கியமானவை மூன்று - ஸ்ரீரங்கம் (வைஷ்ணவம் வளர்ந்த ஊர்), காஞ்சிபுரம் (பிறந்த ஊர்), திருமலா (வைஷ்ணவத்தின் புகலிடம்). இவற்றில் திருமலாவில் குடி கொண்டுள்ள ஸ்ரீநிவாஸனைப் பற்றியது இந்த உபன்யாஸம். “பரம யோகிகளுக்கு மட்டுமே வைகுண்டத்தில் நீ தரிஸனம் கொடுத்து அருள் பாலிக்க வேண்டுமா? எளியவர்களுக்கும் நீ தரிஸனம் கொடுக்க வேண்டாமா?” என பகவானை நாரதர் வேண்ட, “ஸரி, நீயே ஒரு இடத்தை காண்பி,” என பகவான் சொன்னார். “தொண்டை மண்டலத்தில் ஒ ரு இடம் உள்ளது; அது இருட்டாக மிகவும் க்ஷீணித்து, நலிந்து போயிருக்கும் ஒரு இடம், அங்கு நீங்கள் எழுந்தருள வேண்டும்,” என நாரதர் சொன்னார். அதுதான் திருவேங்கடம் என்றும் திருமலா என்றும் அழைக்...