Skip to main content

Posts

Showing posts with the label Sri Vittal

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 3

கோவிந்தபுரம் 03வது பகுதி. ஜூலை 27, புதன்கிழமை : காலை 5 மணிக்கு எழுந்து, குளித்து ஸ்ரீவிட்டல்-ருக்மிணி தாயாரின் சுப்ரபாத சேவையின் முன்பகுதியை இன்று தரிஸித்தோம். மஹாராஷ்டிர பாணியில் ஆடை உடுத்திக் கொண்டு ஸ்ரீ அண்ணா பூஜை செய்தார். அவர் அலங்காரம் பண்ணுவதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். பின்னர் அவர் உஞ்சவிருத்தி செய்தார். விஜயா, சாவித்திரி, மாமி மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அவருக்கு அரிசி பிக்ஷை போட்டனர். கடைசியாக பாத சேவை நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, காரில் ஏறினோம். அப்போது மணி காலை 8-30. இந்தக் கோயிலில் ப்ரஸாதம் என ஒன்றுமே தருவதில்லை. கோயில் மிக அழகாக, புனிதமாக இருக்கிறது. பார்க்க வேண்டிய கோயில். மயிலாடுதுறையில் சிற்றுண்டி முடித்து, கடலூர் வரும்போது மணி 11-45. அங்கு பஸ் ஸ்டாண்டில் திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் சாவித்திரியை ஏற்றிவிட்டேன். சாவித்திரி அங்கிருந்து ஹோசூர் செல்வாள். (ஹோசூருக்கு அவள் மாலை 7-15க்குப் போய்ச் சேர்ந்தாள்.) புதுச்சேரி ஸர்குரு ஹோட்டலில் அருமையான மதிய சாப்பாடு. சென்னை வீட்டிற்கு மாலை 4-30 க்கு வந்து சேர்ந்தோம். இவ்வாறாக எங்கள் கோவிந்தபுரம் பயணம் மிக திர...

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 2

கோவிந்தபுரம் பகுதி 02 ஜூலை 26, செவ்வாய்க்கிழமை : விடியற்காலம் 4-45க்கு நான் எழுந்து, குளித்து, அருணாச்சலத்துடன் டாக்ஸியில் கும்பகோணம் ஸ்டேஷனுக்குக் கிளம்பினோம். கோவிந்தபுரத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது. சாவித்திரி 6 மணிக்கு வந்தாள். அறைக்கு வந்தபோது எல்லாரும் குளித்து ரெடியாக இருந்தனர். உடனடியாக் சாவித்திரியும் குளித்து, எல்லாரும் 6-45க்கு கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயில் complex-லியே ரூம் இருக்கிறது. இரண்டு நிமிஷ நடைதான். சுமார் 25-30 படிகள் ஏறவேண்டும். காலை 6-45க்கு சுப்ரபாத சேவை என சொல்லியிருந்தனர். ஆனால், கதவை 7-15 க்கு தான் திறந்தனர். பளிச்சென்று ஒளிவீசும் ஸ்ரீவிட்டல்-ருக்மிணியை தரிஸித்தோம். என்ன தெய்வீகமான அழகு ! ஸ்ரீ அண்ணா (விட்டல்தாஸ் மஹராஜ் இப்படித்தான் அழைக்கப் படுகிறார்) பூஜை செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் பாடல்களும், பஜனைகளும் பாடிக்கொண்டே பூஜை செய்தார். அலங்காரங்களும், பூஜையும் முடிந்த பின்னர் எங்களை ஸ்வாமி அருகில் வந்து அவரது பாதங்களில் நம் தலையை வைத்து நமஸ்காரம் பண்ண இந்தக் கோயிலில் அனுமதிக்கிறார்கள். வட இந்திய வழக்கம் இங்கும் கடைப்பிடிக்க படுகிறது....

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt I

SRI VITTAL RUKMINI SAMASTHAN - GOVINDAPURAM - Part 1 மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் என்னும் ஊரிலுள்ள ஸ்ரீவிட்டல் கோயிலைப் போன்று தமிழ்நாட்டிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை கொண்டு, ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் கும்பகோணத்தின் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்னும் கிராமத்தில் கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். சேங்காலிபுரம் ப்ருஹ்மஸ்ரீ அநந்தராம தீக்ஷிதரும், அவர் தம்பி ப்ருஹ்மஸ்ரீ நாராயண தீக்ஷிதரும் தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பக்திமான்கள். நாராயண தீக்ஷிதரின் பேரனான ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷிதரும் இவர்களைப் போலவே சிறந்த பக்திமான். ஸ்ரீவிட்டல் பகவான் மேல் இவருக்கு இருந்த பக்தியால் இவர் ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் என அழைக்கப்படுகிறார். இந்தியா மற்றும் உலகின் பல ஊர்களிலும் இவரது விட்டல் பஜனை புகழ் பெற்றது. கோயில் கட்டுவதற்கான நிதி உதவியை இவர் பல ஊர்களில் நாம சங்கீர்த்தனம் செய்து திரட்டினார். கோயிலும் வளர ஆரம்பித்தது. இந்த 2011 வருஷம் ஜூலை 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியில் கோயிலின் மஹாகும்பாபிஷேகம் பஜனைகள் பாடல்கள் மற்றும் வேத கோஷங்களும், விட்டல் நாமாக்களும் ஒலிக்க கோலாகலமாக நடந்தது...