Skip to main content

Posts

Showing posts with the label Fall on the road

புது பழக்கங்கள் New Habits

ஏப்ரல் 10, 2012 செவ்வாயன்று ரோடில் கீழே விழுந்ததையும், Brain Scan பண்ணிக் கொண்டதையும் முன்பு எழுதினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை 5-30 என மாற்றிக் கொண்டதையும் குறிப்பிட்டேன் இப்போது, ஆகஸ்ட் 18 (சனிக்கிழமை) 5-15க்கும், 19ஆம் தேதி 5 மணிக்கும், 20 ஆம் தேதி முதல் மீண்டும் 4-15க்கும் எழுந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். முழு பாராயணங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஏப்ரல் 11 முதல், ஆகஸ்ட் 20 வரை 4 மாசங்களாக நிறுத்தியிருந்தேன். ஆகஸ்ட் 23 (வியாழன்) முதல் காலை 6-50க்கு மொட்டை மாடிக்கு (Terrace) க்குச் சென்று காலை-சூரிய கிரணத்தில் புதிதாக வேறு பல் பாராயணங்களை சொல்கிறேன். 1/2 மணி நேரத்திற்கு பிறகு அங்கே 30 நிமிஷம் நடக்கிறேன். சுமார் 8 மணிக்கு கீழே வருகிறேன். விடியற்காலம் 5-30க்கு பாலிற்காக கீழே ஒரு மாடி இறங்கி ஏறுவதையும், பின்னர் 6-50க்கு Sun-Bathற்கு மொட்டை மாடி (இரண்டு மாடிகள்) ஏறி இறங்குவதையும் LIFT உபயோகிக்காமல், படி ஏறி இறங்குகிறேன். மூன்று நாட்களாக இன்னொரு வேலையும் செய்கிறேன் - மொட்டை மாடியில் உள்ள 10-12 செடித் தொட்டிகளுக்கு தண்ணீர் விடுகிறேன். இது என்னுடைய DREAM Hobby. காலை 4-30...

Fall - its sequel.

ஏப்ரல் 10, 2012 செவ்வாய்க்கிழமை தெருவில் திடீரென விழுந்ததையும் ஸ்வரம் ஹாஸ்பிடலில் ஒருநாள் இருந்ததையும் “ALL NORMAL, ஒன்றும் இல்லை” என டாக்டர்கள் சொன்னதையும் முன்பே எழுதினேன்.11-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். 12-ஆம் தேதி காலை CGHS சென்றோம். டெஸ்ட் ரிசல்ட்டுகளை பரிசீலித்து விட்டு, “ஒன்றும் இல்லை” என இந்த டாக்டரும் (டாக்டர் பார்த்தஸாரதி) சொன்னார். Aspirin Tablet STROMIX கொடுத்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) டாக்டர் மாதவனிடம் சென்று காண்பித்தோம். அவரும் ஒன்றுமில்லை எனக் கூறினார். ஒரு CT Scan of Brain (plain) எடுத்து வரும்படி சொன்னார். மீண்டும் CGHS இந்திராநகர் 23ஆம் தேதி சென்று, அந்த டாக்டர் மூலமாக scanக்கு PRECISON DIAGONOSTIC LAB, MG ROADற்கு சீட்டு வாங்கிவந்தோம். CGHS மூலமாக் சென்றால் எல்லாம் இலவசம் - சுமார் 3300.00 ரூ மிச்சம் ! ஏப்ரல் 25, 2012 புதன்கிழமை காலை 10 மணி சுமாருக்கு காரில் விஜயாவும் நானும் PRECISION Labற்கு சென்றோம்; அரை மணி கழித்து என்னை Scan அறைக்கு அழைத்தனர். படுக்க வைத்து BRAIN SCAN பண்ணினார்கள். 10 நிமிஷத்தில் முடிந்தது. 11-45க்கு காரில் வீடு திரும்பினோம். ...

Fall On The Road

10 ஏப்ரல் 2012 செவ்வாய்க்கிழமை. அன்றையப் பொழுது வழக்கம்போல விடிந்தது. காலை 4-15க்கு எழுந்து, குளித்து, பாராயணங்கள் படித்து, 6-30க்கு பொதிகை டீவியில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஸ்ரீராமாயணம் உபன்யாஸம் கேட்டேன். காலை 7-30க்கு, விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போது காய்கறி வாங்க பைகள் எடுத்துக் கொண்டு, திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் கிளம்பினேன். காய்களும் வாங்கினேன். திரும்பும் போது மார்க்கெட் வாசலில் நுங்கும் வாங்கினேன். வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடக்க ஆரம்பித்ததுதான் தெரியும் - அடுத்து நான் கண் விழிக்கும் போது ஒரு ஹாஸ்பிடலில் இருந்தேன், கூடவே விஜயாவும், அர்விந்தும் சோகமாக. என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறேன்? ஒன்றுமே நினைவில்லை. டாக்டர்கள் வந்து என்னை டெஸ்ட் பண்ணியதோ, பல டெஸ்ட்டுகளுக்கு ஆட்படுத்தப் பட்டதோ, அருண், காயத்ரி, கிருத்திகா, கணபதி சுப்ரமணியம், சுகவனம், சுதா, சதீஷ், ராமமூர்த்தி அத்திம்பேர் ஆகியோர் வந்தததோ ஒன்றுமே தெரியாது. Total blank. ECR-ல் ”தமிழினி” கடைக்கு அருகில் நடந்து வந்த போது, நான் திடீரென தலைகுப்புற கீழே விழுந்திருக்கிறேன். மயக்கமாகி ...