Skip to main content

Posts

Showing posts with the label Velukkudi Krishnan

Kishkindha Kaandam - Part 1

கிஷ்கிந்தா காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆக மூன்று காண்டங்களை முடித்து விட்டார். இன்று 2013 செப்டம்பர் 11 புதன்கிழமை. 374-வது பகுதியாக கிஷ்கிந்தா காண்டம் தொடங்குகிறது. மொத்தம் 67 ஸர்கங்கள்.  ஸ்ரீ ஹனுமானை முதன்முதலாக சந்திக்கப் போகிறோம். ரா மனும் லக்ஷ்மணனும் பம்பா ஏரியின் (பம்பா என்றால் தாமரை) அழகை ரசிக்கிறார்கள். ராமனுக்கு ஸீதையின்  ஞாபகம் வந்து அவனை துன்புறுத்துகிறது. மலைப்பகுதியில் ஒளிந்து வாழும் சுக்ரீவன் இவர்களைப் பார்த்து சந்தேகம் கொண்டு பயப்படுகிறான். ஆயுதங்கள் கொண்டு இருவரையும் தாக்க எண்ணுகிறான். வாலிதான் வந்துவிட்டான் என வானரங்கள் அஞ்சுகிறார்கள். இப்போது ஹனுமான் முதன்முதலாக அறிமுகமாகிறான். “அஞ்சாதே! எதற்கும் பயப்படாதே!! என்பதுதான் ஹனுமானின் சொல். {ஸர் 2] தானே சென்று அவர்களை பார்த்து வருவதாக ஹனுமான் புற...

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - 3வது பகுதி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினம்தோறும் காலை 06:30 க்கு ராமாயணம் உபன்யாஸம் செய்து வருகிறார். 23/02/2013 அன்று நான் அயோத்யா காண்டம் 64வது ஸர்கம் எழுதினேன். அதன் தொடர்ச்சி. துக்கம் தாளாமல் தசரத மஹாராஜா இறந்து போகிறார். செய்தி கேட்ட கௌஸல்யா தேவி அழுது அரற்றி கைகேயியை திட்டுகிறாள். அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கக் கூடாது என சொல்லி, வஸிஷ்டர் ஒரு புதிய அரசனிற்கு முடிசூட்ட எண்ணுகிறார். பரதனை கூட்டி வர ஆட்களை அனுப்புகிறார் [ஸர்கம் 65 - 68] அவர் அனுப்பிய ஆட்களும் பரதன் இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். கேகேய ராஜாவிடம் பரதனை அனுப்புமாறு விண்ணப்பிக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். பரதனும் அயோத்யா செல்கிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து அவன் மிகவும் துக்கப்படுகிறான். [ 69 - 72 ] தன அம்மா கைகேயியை திட்டுகிறான். ராமன் தான் ராஜா, நான் அவனை கூட்டி வருவேன் என சொல்கிறான். தந்தை தசரதனுக்கு சரயு நதி தீரத்தில் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து முடிக்கிறான். {72 -76] பட்டம் வேண்டாம் என மறுத்து விட்டு, ராமனை கூட்டி வர சுமந்திரனுடனும் சேனைகளுடனும் காடு நோக்கி புறப்படுகிறான். சேனைகள...

Srimad Ramayanam - Sri Velukkudi Krishnan

ஸ்ரீராமாயணம். 100th Episode ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவைகளுக்கு அடுத்து, தற்போது ஸ்ரீராமாயணம் சொல்லி வருகிறார். கீதை சொல்ல ஆரம்பித்தது 18 ஜனவரி 2007-ல். 735 நாட்கள் சொன்னபிறகு, 6 நவம்பர் 2009-ல் கீதை நிறைவு பெற்றது. பின்னர் ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்ல ஆரம்பித்தார். 621 நாட்கள் சொன்னார்; 2012 மார்ச் 30-ஆம் தேதி நிறைவு. முடித்த அடுத்த நாளே ( 31-03-2012 அன்று ) ஸ்ரீராமாயணம் சொல்ல ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை ஆனபோதிலும் அன்று ஸ்ரீராம நவமியானதால் ஆரம்பித்து விட்டார். பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30 லிருந்து 6-45 வரை சொல்லி வருகிறார். முதல் ஆறு ஏழு நிமிஷங்க்ளுக்கு ஏதாவ்து ஒரு ராமர்/ஆஞ்சநேயர் கோயிலை காண்பித்து, கோயிலைப் பற்றிய விவரங்களை விஸ்தாரமாக விளக்குகிறார்; பின்னர் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து ராமகாதையை சொல்லுகிறார். திங்கள் கிழமை ஆரம்பித்து ஒரு கோயிலை குறித்து தினமும் வெள்ளி வரை சொல்வார்; அடுத்த திங்கட்கிழமை வேறு ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இன்று ( 17-08-2012 வெள்ளி ) ராமாயணத்தின் 100-வது பகுதி யை சொ...

Srimad Ramayanam - Velukkudi Sri Krishnan Swamigal

Rama + Ayana translating roughly to "Rama's journey" is the oldest epic (itihasa), apart from Mahabharat, in Indian culture. Written by the saint Valmiki in about 5th to 4th century BC, this epic has 6 kandas (காண்டங்கள்) - பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம். (ஏழாவது காண்டமாக உத்தர காண்டம் சொல்லப்படுகிறது, ஆனால் இது வால்மீகியால் எழுதப்படவில்லை, பின்னால் சேர்க்கப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்). 645 ஸர்க்கங்களும், 24000 ஸ்லோகங்களும் அடங்கியது. 1.    பால காண்டம் = 77 ஸர்கங்கள் -- 2266 ஸ்லோகங்கள் 2.    அயோத்யா காண்டம் = 119 ; 4185 3.    ஆரண்ய காண்டம் = 75;  2441 4.    கிஷ்கிந்தா காண்டம் = 67;  2453 5.    சுந்தர காண்டம் = 68;   2807 6.     யுத்த காண்டம் = 128;  5675 7.     உத்தர காண்டம் = 111;  3373 ஸ்லோகங்கள் மொத்தம், 7 காண்டங்கள்;  534+111 = 645 ஸர்கங்கள்; 19827...

திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் முந்தாநாளும், நேற்றும் (31-03-2012 மற்றும் 01-04-2012) அடையாறு ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் மாலை 6-30க்கு “திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் உபந்யாஸம் செய்தார். 31-ஆம் தேதியன்று விஜயாவும் நானும் சென்றோம். 5 மணிக்கே சென்று முதல் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். 6-30க்கு ‘எள் போட்டால் எள் விழாத’ அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. நிறைய விஷயங்கள் சொன்னார். பெருமாளை தரிஸிக்க ஏன் மூன்று த்வாரங்கள் என்பதை விளக்கினார். முதலில் திருவடிகள், அடுத்து நாபிக்கமலம், இறுதியில் திருமுடி (திருமுகம்) என தரிஸிக்கும் முறையை சொன்னார். அனந்த காடு குறித்த வரலாறையும், தேங்காய் சிரட்டையில் அரிசி நொய்க் கஞ்சி, உப்பு மாங்காய் ஏன் நைவேத்யமாக ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப் படுகிறது என்பதற்கான வரலாற்றை கூறினார். இன்னும் பல பல விஷயங்களை சொன்னார். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதி நாங்கள் போகவில்லை. கோயில் இருக்கும் ரோடையே அடைத்து விட்டு அங்கும் நாற்காலிகள் போட்டு பக்தர்களை உட்கார்த்தி வைத்தனர் எனவும், இதுவும் போத...

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்.

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-லிருந்து 6-45 வரை உபந்யாஸம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் 18-ஜனவரி-2007 வியாழனன்று பகவத்கீதை சொல்ல துவங்கினார். மொத்தம் 735 உபந்யாஸம் செய்தார்; இறுதியில், 06-நவம்பர்-2009 அன்று கீதை நிறைவு பெற்றது. 09-நவம்பர்-2009 அன்று ஸ்ரீமத் பாகவத புராணம் ஆரம்பித்தார். 12 ஸ்கந்தங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமன் நாராயணனின் 10-அவதாரங்களையும், மற்றும் பல பெருமைகளையும் விளக்குகிறது. முக்கியமாக கண்ணனின் அவதார பெருமைகளை சொல்லுகிறது (10-வது ஸ்கந்தம்). 621 பகுதிகளுக்குப் பிறகு, இன்று (30-03-2012, வெள்ளிக்கிழமை) ஸ்ரீமத் பாகவதமும் நிறைவுற்றது. 735 + 621 = 1326 நாட்கள். 5 வருஷங்களுக்கும் மேலாக (18-01-2007 முதல் 30-03-2012 வரை) இந்த உபன்யாஸங்களை நானும் விஜயாவும் ஒரு நாள் தவறாமல், தினமும் குளித்து, கேட்டு வருகிறோம். 18 ஜனவ்ரி 2008-ல் நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: “சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெரு...

ஸ்ரீமத் பாகவதம் - 12வது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதத்தின் கடைசியும், 12-வதுமான ஸ்கந்தம் இது. மொத்தம் 13 அத்தியாயங்கள் கொண்டது. ஸ்ரீஸுகதேவ கோஸ்வாமி இதில் கலியுகத்தில் தோன்றப் போகும் அரசர்களையும் அவர்கலது வம்ஸங்களையும் பற்றி பரீக்ஷீத் மஹாராஜாவிற்கு கூறுகிறார். ஸ்கந்தம் 12 - அத்தியாயம் 1-ல் 41 ஸ்லோகங்கள் உள்ளன. 12:02 கலியுகத்தின் தீமைகளை விளக்குகிறார். கலியுகத்தின் அழிவில் பகவான் கல்கி அவதாரம் எடுத்து தீயவர்களை அழிப்பார் என கூறுகிறார். மொத்தம் 44 ஸ்லோகங்கள் உள்ளன. 12:03 மொத்தம் 52 ஸ்லோகங்கள். கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது. அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர். The people of Satya yuga are for the most part self-satisfied, merciful, friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from within, see all things equally and always endeavor diligently for spiritual perfection.   In Treta-Yuga each leg of religion is gradually reduced by one quarter by the influ...

ஸ்ரீமத் பாகவதம் - 11வது ஸ்கந்தம் (2)

11-வது ஸ்கந்தம்   17-11-2011 அன்று காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. முதல் பகுதி ஏற்கனவே 29 ஜனவரியன்று எழுதினேன். அதன் தொடர்ச்சி ... 11:06 முதல் 11:14 வரை பகவான் உத்தவருக்கு அருளியவை விளக்கப் படுகின்றன. 11:14, 11:15, 11:16 யோக முறைகளை உத்தவருக்கு பகவான் சொல்லுகிறார். 11:17, 11:18 வர்ணாசிரமம விளக்கப்படுகிறது. 11:24ல் சாங்கிய யோகம் சொல்லப்படுகிறது. 11:27ல் க்ரிய யோகம் [DEITY WORSHIP] உத்தவருக்கு சொல்லப்படுகிறது. The details of the worshiping process are as follows: The devotee should bathe both physically and by chanting mantras, and then he should perform the utterance of Gāyatrī at the prescribed juncture of the day. He should arrange a seat facing either east or north, or else directly facing the Deity, and should bathe and clean the Deity. Then he should present clothing and ornaments, sprinkle water on the vessels and other paraphernalia to be used in the worship, and offer water for bathing the Deity's feet, arghya, water for washing His mouth, fragr...

ஸ்ரீமத் பாகவதம் - 600-வது பகுதி

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (01 மார்ச் 2012) தனது 600-வது உபந்யாஸத்தை செய்தார். சென்ற சில ஆண்டுகளாக ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத புராணத்தை பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30க்கு சொல்லி வருகிறார். இன்று 01-03-2012 வியாழன் இதன் தொடர்ச்சியாக 600-வது உபந்யாஸத்தை செய்தார். ஸ்கந்தம் 11, அத்தியாயம் 30, ஸ்லோகம் 28. ராஜப்பா 01 மார்ச் 2012 காலை 8 மணி பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது.

ஸ்ரீ மத் பாகவதம் 11 வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

11-வது ஸ்கந்தம் இன்று (17-11-2011) காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது. இந்த 11-ஆம் ஸ்கந்தம் முதல் அத்தியாயத்தில் யது குலம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் சொல்லப்படுகின்றன. குருக்ஷேத்திர யுத்தத்தில் பல பேரை அழித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், இப்போது கர்வமும் திமிரும் படைத்த தன்னுடைய யது குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார். யதுகுல சிறுவர்கள் எப்படி சாம்பா என்னும் சிறுவனை ஒரு பிள்ளைத்தாய்ச்சி பெண் போல நடிக்க வைத்து ரிஷிகளை ஏமாற்ற நினைத்தார்கள், விஸ்வாமித்ரா, அசிதா,கண்வா, துர்வாஸா, ப்ருகு, ஆங்கீரா, காஷ்யபா, வாமதேவா. அத்ரி, வஸிஷ்டா ஆகிய ரிஷிகள் கோபமடைந்து எப்படி ”ஒரு உலக்கையினால் உங்கள் யதுகுலமே நாசமாகும்,” என சபித்தார்கள், எப்படி உலக்கை யதுகுலத்தையும் ஸ்ரீகிருஷ்ணனையும் முடித்தது என்பதை முதல் அத்தியாயம் விளக்குகிறது [11:01] 11:02 நாரதர் வசுதேவருக்கு பாகவத தர்மத்தை விளக்குகிறார். விதேஹ நாட்டு மஹாராஜா நிமி ஒன்பது யோகேந்திரர்களிடம் “பாகவத தர்மத்தை” விளக்கிச் சொல்லுமாறு வேண்ட, ஒவ்வொரு ரிஷியாக தர்மத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். 11:03 இதில் பகவானின் மாயா குறித்து விவரமாக...

Vaikunta Ekadasi

ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதிக்க மிகச்சிறந்த நாள் ஏகாதசி. ஒவ்வொரு வருஷத்தி்லும் 25 ஏகாதசிகள் உள்ளன; இவற்றில் மார்கழி மாசம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிதான் "வைகுண்ட ஏகாதசி" என அழைக்கப்படுகிறது. இன்று உபவாஸம் இருந்து நியமத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜிப்பவருக்கு இம்மையில் வைகுண்டத்தைப் போன்ற சுகமும், வாழ்க்கையின் இறுதியில் ஸ்ரீவைகுண்டமும் கிடைக்கும் என்பதால் இது "வைகுண்ட ஏகாதசி" எனப்படுகிறது. நேற்று (05 ஜன 2012) வியாழன் விடிகாலையில் - பல பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீஆதிகேசவ பெருமாள் - மயூரவல்லித் தாயார் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு விடியற்காலம் 4 மணிக்கு சென்று, விஜயா பெருமாளைத் தரிசித்து வந்தாள்; மாதவனை தரிசிப்பதாகத்தான் முதலில் இருந்தது; பின்னர் கேசவன் என ஆயிற்று. நல்ல கூட்டம் எனச் சொன்னாள். எதிர்வீட்டு உமா மாமி, மாமா, TSG மாமா, மாமி ஆகியோரும் சென்றனர். வந்த எல்லா பக்தர்களுக்கும் THE HINDU சார்பில் ஒரு HINDU பேப்பரும் அதனுடன் “வைகு...

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 3 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10வது ஸ்கந்தம் - பகுதி 3 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த ஸ்கந்தம் மிக நீளமானதால் (மொத்தம் 90 அத்தியாயங்கள் உள்ளன) இதை நான் மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். இது 3-வது பகுதி. ஜராசந்தன் வதம் : ஸ்ரீகிருஷ்ணன் இந்திரப்ப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுடன் இருந்தார். ஜராசந்தனை அழிக்க பீமனை கருவியாக்கிக் கொண்டு, பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தார். (10:72) பாண்டவர்கள் (தர்மபுத்திரர்) செய்த ராஜஸுய யாகத்தில் முதல் நமஸ்காரம் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தான் செய்ய வேண்டும் என பாண்டவர்கள் விரும்பினார்கள்; ஆனால், சிசுபாலன் இதை எதிர்த்தான்.(10:73) ராஜஸுய யாகம் இங்கு நன்கு விளக்கி சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் அரண்மனையில் புகுந்த துரியோதனன் தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பதாக நினைத்து நடந்ததையும், தண்ணீர் இருந்த இடத்தில் இல்லையென்று எண்ணி, வழுக்கி விழுந்ததையும் பார்த்து பீமன், திரௌபதி முதலானோர் அவனை பார்த்து சிரித்தனர். (10:75) சால்வா என்ற அ...

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 2 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10 வது ஸ்கந்தம் பகுதி 2 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. மறுநாள் காலை கம்ஸனுடைய அரண்மனை சென்றபோது அங்கிருந்த குவலயாபீடம் என்னும் பெருத்த யானையை வீசி எறிந்து முடித்தான். பின்னர் 5 மாமல்லர்களையும் அழித்து முடித்தான். (10:43) கம்ஸவதம் : முதலில் சனூரா என்ற அசுரனுக்கும் கண்ணனுக்கும் மாபெரும் மல்யுத்தம் நடந்தது. பலராமன் முஷ்டிகா என்ற அசுரனுடன் போரிட்டார். ஸ்ரீகிருஷ்ணன் சனூராவை அழித்து முடித்தார். சனூரா,முஷ்டிகா, குதா,சாலா, டோசாலா என்னும் பல அசுரர்கள் மாண்டார்கள். கடைசியில், கம்ஸனும் மாண்டான். (10:44) ஸ்ரீகிருஷ்ணன் தன் தாய் தகப்பனாரை சிறையில் இருந்து விடுவித்து, உக்ரஸேனரை மீண்டும் மஹாராஜாவாக்கினார் (10:45) கண்ணன் திரும்ப வராததால் மிகுந்த சோகத்தில் இருந்த நந்தனையும், யசோதாவையும் ஆறுதல் கூறி தேற்றுமாறு உத்தவரை வ்ரஜா பூமிக்கு அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்தார் (10:46). உத்தவர் மதுரா திரும்பினார். (10:47) அக்ரூரர் ஹஸ்தினாபுரம் சென்று...

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 1 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. 10 வது ஸ்கந்தம் 90 அத்தியாயங்கள் கொண்டது, மிக முக்கியமானது,  மிக நீளமானது. இதை நான் மூன்று பகுதிகளாக பிரித்து, எழுதப் போகிறேன். மதுரா நகரில் தேவகிக்கும், வஸுதேவருக்கும் கண்ணன் எட்டாவது குழந்தையாகப் பிறந்தான். தேவகியின் அண்ணன் கம்ஸனுக்கு “எட்டாவது குழந்தை” மூலம் இறப்பு என சாபம் இருந்தபடியால், கம்ஸன் தேவகி-வஸுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கொன்று முடித்தான். ஏழாவது கர்ப்பத்தை வெளியில் இழுத்து, அதை கோகுலத்திற்கு  கொண்டு போய் அங்கு வசித்த [வஸுதேவரின் இன்னொரு மனைவியான] ரோஹிணி யின் கர்ப்பத்தில் பகவான் செலுத்தினார். இந்தக் குழந்தை பலராமன். [கர்ப்பத்தில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டதால், பலராமனுக்கு ஸங்கர்ஷ்ணன் என்ற இன்னொரு பெயரும் உண்டு.] ரோஹிணிக்குப் பிறந்த பெண் குழந்தையை தேவகியோடு சிறையில் விட்டார். எட்ட...

ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக ஸமாஜத்தில் இந்த 2011 மார்ச் 29-30-31 ஆகிய மூன்று தினங்கள் தினமும் மாலை 6-30க்கு உபன்யாஸங்கள் நிகழ்த்தினார். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு :: “ ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள்” வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்திற்கு நாரதர் வந்தார்; அவரிடம் ஒரு பதினாறு கல்யாண குணங்களைப் பட்டியலிட்டு, இந்த 16 குணங்களும் ஒருவனிடத்தில் ஒரே சமயத்தில் இருக்குமா, அப்படியென்றால் யார் அந்த மனிதன் என்று சொல்ல முடியுமா என வால்மீகி கேட்டார். ஒரே வார்த்தையில் “ஸ்ரீ ராமன்” என நாரதர் பதிலளித்தார். இந்த 16 குணங்களையும் வேளுக்குடி தனக்கே உரித்தான தெளிய தமிழில் சலசலத்து ஓடும்  காவிரியாக, பொங்கிப் பெருகும் கங்கையாக - வால்மீகியையும், கம்பரையும், ஆழ்வார்களையும் நம் கண் முன்னே நிறுத்தி விளக்கிச் சொன்னார். மிக அருமையாக இருந்தது. உபன்யாஸம் பண்ணிய 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ராஜப்பா 01-04-2011 காலை 1000 மணி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல ஊர்களிலும் சென்று ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாஸங்கள் செய்து வருகிறார். இதன் அங்கமாக நேற்று அவர் ஹோசூர் சென்று உபன்யாஸம் செய்து வருகிறார். நேற்று, இன்று, நாளை (25,26,27 ஆகிய மூன்று தேதிகளில் மாலை 6 மணிக்கு) உபன்யாஸம் செய்யும் இடம் சாவித்திரி வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது. சாவித்திரி நேற்று மாலை போயிருந்தாள்; இன்றும் போயிருப்பாள். சாவித்திரியும் ஹோசூரில் அவளது குழுவினரும் சேர்ந்து பஜனைகள், விசேஷ பூஜைகள், சஹஸ்ரநாமம் சொல்லுதல் இன்ன பிற ஆன்மீக விஷயங்களில் / தொண்டுகளில் ஈடுபடுவது எல்லாருக்கும் தெரியும். இவற்றை நடத்துவதற்காக சாவித்திரி வீட்டின் பக்கத்தில் ஒரு மாமி (புவனா மாமி) தன் வீட்டின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். வருஷம் முழுதும் இங்கு பலவித பக்தி, ஆன்மீக சம்பந்தமான விழாக்கள் நடைபெறும். நானும் விஜயாவும் கூட சில பூஜைகளுக்கு சென்றுள்ளோம். BLOGம் எழுதியுள்ளேன். இந்த இடத்திற்கு “தபோவனம்” என பெயரிட்டுள்ளார்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி ஹோசூர் வருகிறார் என்பது தெரிந்ததும், அவரை தபோவனத்திற்கு அழைத்து...

ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

பாகவதம் 10-வது ஸ்கந்தம் பாகவதத்தில் 9-வது ஸ்கந்தத்தின் “முன்னுரை”யை இங்கு படிக்கலாம். 9-வது ஸ்கந்தம் ஃபிப்ரவரி 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று (25-03-2011) காலை நிறைவு பெற்றது. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று காலையே 10-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். ஸ்ரீமத் பாகவதம் 9-வது ஸ்கந்தத்தில் ஸூர்ய வம்ஸமும், சந்திர வம்ஸமும் விளக்கிச் சொல்லப்பட்டன. அத்ரியின் வம்ஸத்தில் சந்திரன் => புதன் => புரூரவஸ் => ஸத்யவதி => விஸ்வாமித்திரர் => ஜமதக்னி => பரசுராமர் என நீள்கிறது. விஸ்வாமித்திரருக்கு யயாதி என்ற பேரன் பிறந்தார். யயாதிக்கு யது, புரு, அநு என 3 பிள்ளைகள். புருவின் வம்ஸத்தில் திருதராஷ்டிரன், பாண்டு பிறந்தனர்; இவர்களுக்கு கௌரவர்களும், பாண்டவர்களும் பிறந்தனர். இவர்கள் வம்ஸம் மஹாபாரதத்தில் விரிவாக சொல்லப்படுகிறது. அநுவின் வம்ஸத்தில் அதிரதர் பிறந்தார்; இவர்தான் பின்னால் கர்ணனை வளர்த்த தேரோட்டி. யயாதியின் இன்னொரு மகனான யதுவிற்கு குகுரர், யஜமானர் என 2 பிள்ளைகள். குகுரருக்கு தேவகர், உக்ரஸேனர் பிள்ளைகள். தேவகருக்கு தேவகி என்ற பெண்; உக்ரஸேனருக்கு கம்ஸன் என்ற மகன். (த...

ஸ்ரீமத் பாகவதம் - 339

ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸத்தின் 339-வது பகுதி இன்று (28 ஃபிப்ரவரி 2011) நடந்தது. இன்று ஸ்ரீராமர் ஜனனம் சொல்லப்பட்டது. இக்ஷ்வாகு வம்ஸத்தில் பகீரதனுக்குப் பின்னர் வந்த அஜர் என்பவருக்கு தசரதன் பிறந்தார். ரிஷ்யசிருங்கர் மூலமாக தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பாயஸக் குடம் வந்தது. அந்த பாயஸத்தை தசரதன் இரண்டாகப் பிரித்து  ஒரு 1/2 பாகத்தை கௌஸல்யாவிற்கு கொடுத்தார்; மீதமிருந்த 1/2 பாகத்தை மீண்டும் இரண்டாக பிரித்து (அதாவது மொத்தத்தில் 1/4 பாகத்தை) கைகேயிக்கும், மீதமிருந்த 1/4 பாகத்தை இரண்டாக பிரித்து (1/8 பாகம்)  இரண்டையும் ஸுமித்ரைக்கும் கொடுத்தார். கௌஸல்யாவிற்கு ஸ்ரீராமரும், கைகேயிக்கு பரதனும், ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வந்த வஸிஷ்டர் இரண்டு குழந்தைகள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) அழுவதைக் கண்டார்.  ராமன் பக்கத்தில் தான் இல்லையென்று லக்ஷ்மணனும், பரதன் பக்கத்தில் தான் இல்லையென்று சத்ருக்னனும் அழுதனராம். ராமன் இருந்த அதே தொட்டிலில் லக்ஷ்மணனையும், பரதன் இருந்த தொட்டிலில் சத்ருக்னனையும் விட்டபி...

ஸ்ரீமத் பாகவதம் - 9-வது ஸ்கந்தம் - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

**   வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் நேற்று (08-02-2011) பாகவதத்தின் 8-வது ஸ்கந்தத்தை நிறைவு செய்தார். (29-12-2010 அன்று இந்த ஸ்கந்தத்தை ஆரம்பித்தார்.) 8-வது ஸ்கந்தத்தில் முக்கியமாக கஜேந்திர மோக்ஷமும், வாமன அவதாரமும், ஓங்கி உலகளந்த திரிவிக்ரமன் அவதாரமும் சொல்லப்படுகின்றன. இன்று, புதன்கிழமை 09-02-2011; காலையில் 9-வது ஸ்கந்தம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.  இந்த ஸ்கந்தத்தில் முதலில் ஸூர்ய வம்ஸம் சொல்லப்படுகிறது. அதிதி தேவிக்கும் - காச்யபருக்கும் பிறந்தவர் விவஸ்வான் (ஸூர்யன்) இவரது புத்திரர் சிராத்ததேவர். இவரை வைவஸ்வதன் என்று அழைப்பார்கள் (வைவஸ்வத மநு) இவருடைய புத்திரர்  இக்ஷ்வாகு. ஞானகர்மஸந்யாஸ யோகத்தை அர்ஜுனனுக்கு விளக்கவந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இக்ஷ்வாகுவின் வம்ஸத்தை சொல்லுகிறார் :: (கீதை 4வது அத்தியாயம் முதல் 3 ஸ்லோகங்கள்) இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் | விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே அப்ரவீத் || (அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு பகர்ந்தேன். விவஸ்வான் மனுவிற்கு மொழிந்தான். மனு இக்ஷ்வாகுவிற்கு உரைத்தான்) (இவ்வாறு பரம்பரையாக வந்த...

ஸ்ரீமத் பாகவதம் - 8-வது ஸ்கந்தம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் 7-வது ஸ்கந்தத்தை நேற்று (28-12-2010) நிறைவு செய்தார். 7-வது ஸ்கந்தம் சென்ற நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று ஆரம்பித்தது. இன்று காலை (29-12-2010) 8-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 8-வது ஸ்கந்தத்தில், நான்கு கதைகள் சொல்லப்படுகின்றன. அதைத் தவிர மனுக்களின் வம்ஸாவழிகளும் சொல்லப்படுகின்றன. 1. கஜேந்திர மோக்ஷம்: முதல் மனு ஸ்வாயம்புவர்; பின்னர், 2-வது, 3-வது மனுக்களுக்கு பிறகு, 4-வது மனுவாக தாமஸர் என்பவர் இருந்தார். இவரது காலத்தில்தான், ஸ்ரீமன் நாராயணன் ஹரியாக உருவெடுத்து, முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட கஜேந்திரன் என்கிற யானை ஆதிமூலமே என ஹரியை அழைக்க, கருடன் மீதேறி ஓடோடி வந்து தன் பக்தனை (யானையை) காப்பாற்றினார். 2. அமுதம் கடைந்தது: 6-வது மனுவின் (சாக்ஷூஷர்)  காலத்தில் இது நிகழ்ந்தது. மந்திர மலையை மத்தாக நாட்டி, வாஸூகி என்கிற பாம்பை கயிறாகச் சுற்றி, பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தார். மந்திர மலை கடலில் அமிழ்ந்து விடாமல் இருக்க, தானே கூர்மாவதாரம் எடுத்து, மலையை கீழிருந்து தாங்கினார். கடலிலிருந்து காலகட்ட விஷம், ஐராவதம் என்...