நீரஜாவும் அஷோக்கும் சில வருஷங்களாக ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத பூஜை அனுஷ்டித்து வருகிறார்கள். இந்த வ்ரதத்தை பற்றியும் அவர்கள் 29 மார்ச் 2010 அன்று பூஜை செய்த விவரத்தையும் இங்கு படிக்கலாம் . இந்த (2011) வருஷம் அவர்கள் 18 ஃபிப்ரவரி 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த பூஜையை செய்தனர். விஜயாவும் நானும் சென்னையிலிருந்து 17-ஆம் தேதி பிற்பகல் பெங்களூர் சென்றோம். பூஜைக்கான ஏற்பாடுகளை (சாமான்கள் வாங்குதல் போன்றவை) நீரஜாவும், அஷோக்கும் ஏற்கனவே செய்து முடித்திருந்தனர். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டை மெழுகி, துடைத்து, ஸ்வாமி படத்தை எடுத்து வைத்து, அலங்கரித்து பூஜைக்குத் தயாராகினோம். நீரஜா எலுமிச்சம்பழ சாதம், ரசஞ்சாதம், தயிர் சாதம், உ.கிழங்கு கறி செய்தாள். மாமி, மாமா, ஸ்ரீவள்ளி ஆகியோர் 4-45க்கு வந்தனர். நைவேத்யத்திற்கு மாமி ரவாகேஸரி பண்ணி எடுத்து வந்தார். சாஸ்திரிகள் 5-45க்கு பூஜையை ஆரம்பித்தார்.சென்னை மயிலாப்பூரிலிருந்து நாங்கள் வாங்கிச் சென்ற புடவையை நீரஜா அணிந்து கொண்டாள். மிகவும் விரிவான பூஜை. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர 1008 நாமாவளியுடன் பூஜை 8-15க்கு நிறைவுற்றது. மாமியும், விஜயாவும் 1008 நாமாவளிய...